Tag Archive: சாப்ளின்

சாப்ளின்

சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க அதிகாலைச் சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்குக் காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்து பைசா கூலி தருவோம். அருமனை கிருஷ்ணப்பிரியாவில் ஓலைக் கொட்டகைதான். மழைபெய்ய ஆரம்பித்துவிட்ட படங்கள்தான் அதிகமும் வரும். மழை இல்லாத அப்படங்களைப் பார்த்தால் எங்களூர் மக்கள் ஏதோ தப்பாக இருக்கிறதே என்று நினைப்பார்கள். பொதுவாக அன்றெல்லாம் புதிய படங்களைவிடப் பழைய படங்களைத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/371

இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சாப்ளின் மற்றும் பஸ்டர் கீட்டன் பற்றிய குறிப்புகள் அருமையாக இருந்தன. ஓயாமல் உலக சினிமா பற்றி எழுதும் நம்முடைய சினிமா விமரிசகர்கள் யாராவது பஸ்டர் கீட்டன் பற்றி எழுதியிருக்கிறார்களா? செல்வம் அன்புள்ள செல்வம். எனக்குத்தெரிந்த வரை தமிழில் யாருமெ ழுதியதில்லை. இரு இணைப்புகளை நண்பர் ரகுநாதன் கனகராஜ் அனுப்பித்தந்தார். http://www.youtube.com/watch?v=3TMjTVeVHtk&feature=related http://www.youtube.com/watch?v=-I_slVqEM1k&NR=1 அன்புள்ள ஜெயமோகன் தங்களைப் பற்றி எழுதாமல் சாருவால் இருக்க முடியவில்லயே.உங்களின் விசாரிப்பு (ஹெல்த் எப்படி இருக்கு) பற்றி நையாண்டி செய்திருக்கிறாரே… சாமி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/383

சாப்ளின் – ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் பஸ்டர் கீட்டனின் படங்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். [Buster Keaton] அவர் சாப்ளினின் சமகாலத்தவர். சாப்ளின் அளவுக்கு பிரபலமானவரல்ல. ஆனால் அவரளவுக்கே முக்கியமானவர் பஸ்டர் கீட்டனின் சிறு மௌனப்படங்கள் மிக வேடிக்கையானவை- அதேசமயம் சிந்தனையை தூண்டுபவை. சாப்ளின் போல ஸ்லாப்-ஸ்டிக் நகைச்சுவை அவற்றில் இல்லை. ஆனால் புன்னகைக வைப்பவை அவை பஸ்டர் கீட்டன் சாதாரணமாக எங்கும் கிடைப்பதில்லை. சிறந்த கடைகளில் கிடைக்கலாம். சுருக்கமான தகவல்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/381