Tag Archive: சாதி

மன்னர்களின் சாதி

    அன்புள்ள ஜெ ,   பல சாதி சங்கங்கள் சில காலமாகத் தங்களை ‘ ஆண்ட பரம்பரையே படையெடுக்க வாரீர் ‘ என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து அவர்களின் சாதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார்கள் . சில வருடம் முன்பு வரை அதைப் பற்றிப்பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை ஆனால் இன்று ஒவ்வொரு சாதியும் தங்களை ‘ மன்னர் பரம்பரை ‘ என்று கூறிக்கொள்கிறார்கள் குறிப்பாக சோழர்களையே இவர்கள் குறி வைக்கிறார்கள் . விக்கிபீடியாவில் பிராமணர் நீங்கலாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35502/

சாதியும் அடையாளமும்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம்.நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதியுள்ளேன். சாதி பற்றிய எதிர்வினைகள் முடிந்த பின்னே எழுத வேண்டுமெனக் காத்திருந்தேன்.தங்களின் எழுத்துகளை 80% வாசித்துள்ளேன்.எனவே இதைப்பற்றி உங்களால் மட்டுமே கூற இயலும் என்று எண்ணுகிறேன். நான் சாதிமறுப்பு மணம் புரிந்துகொண்டவள். சிறிய சாதிவேறுபாடுதான். எங்கள் இரு குடும்பங்களுமே திராவிட இயக்கப் பின்னணியிலானவை. பெரும் போராட்டங்களுக்குப் பின் இரு வீட்டினரும் சம்மதித்து திருமணம் செய்து வைத்தனர். ஏறக்குறைய உங்கள் திருமணம் போலவே நான் வீட்டிலிருந்து வெளியேறி வந்தேன்.அதன் பிறகே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67401/

விலக்கப்பட்டவர்கள்

கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் ‘அம்சம் அதிகாரி’  வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய வருவாய் வட்டம் போல. அது அப்பகுதிக்கான நீதிபதி வேலையும்கூட. அவர் திருமணம்செய்துகொண்டது இரிஞ்ஞாலக்குடா வட்டபறம்பில் மீனாட்சி அம்மாவை. 1903ல் திரிச்சூர் அருகே உள்ள குந்நங்குளம் என்ற ஊரில் இருந்த ஒரு நம்பூதிரி மனையில் வாழ்ந்த விதவையான ஒரு நம்பூதிரிப்பெண் கருவுற்றாள். அக்காலத்தில் நம்பூதிரிப்பெண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/972/

சாதி-வர்ணம்-முக்குணங்கள்

http://www.youtube.com/watch?v=GLRltYWQ0TM அன்புள்ள ஜெயமோகன், பிறரிடம் கேள்விகள் கேட்கும்போது அவை அசட்டுத்தனமானவையாக அமைந்துவிட்டால் சபையில் அசடு வழிய நேரிடுமோ என்ற பெரும் தயக்கத்துடனேயே எப்போதும் என் சந்தேகங்களை முன்வைக்கிறேன்.இக்கடிதமும் அப்படியே. நம் மரபில் மனிதர்களைப் பொதுவாக அன்பு – குரூரம்-இவை இரண்டையும் சம அளவில் கொண்டவர்கள்(தேவர்-மானுடர்-ராக்ஷசர்?) என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.குறிப்பாக மகாபாரதக் கதாப்பாத்திரங்கள். ஆனால் மகாபாரதத்தில் சாதிப் பிரிவினை பற்றித் தெளிவான சித்திரம் இல்லை என்றே எண்ணுகிறேன். நமது மரபு குணத்தின் அடிப்படையில் மனிதனை வேறுபடுத்த முனைந்தது சாதிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35524/

சாதியாதல்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களே,| வணக்கம். நெடுநாட்கள் உங்களின் தளத்தில் வாசகனாக இருக்கிறேன். நீங்கள் வாசகர்களுடன் கொண்டுள்ள தொடர்பினை நினைத்து வியந்துள்ளேன். மற்ற எழுத்தாளர்கள் உங்களைப் போல இல்லை.நீங்கள் வாசகர்களுடன் நெருக்கமாக உள்ளீர்கள், நல்ல நண்பனாக அவர்களின் ஐயத்தினைக் களைகின்றீரகள், வழிகாட்டுகின்றீர்கள். அது போல எனக்கும் என் குலத்திற்கும் உங்கள் வழிகாட்டல் இப்போது தேவைப்படுகிறது. || செய்தி 1 – சற்று நாட்களுக்கு முன் முகநூல் சோழிய வெள்ளாளர் குழுமம் என்பதில் பிரபல எழுத்தாளர் நாஞ்சிலின் மகள் 600க்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35470/

இடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்

ஆசிரியருக்கு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீடு செய்தது தவிர திராவிட கட்சிகள் வேறெதுவும் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னது முழுமையானது அல்ல. இந்த இடத்தில் சில கேள்விகள் வருகின்றன. இந்தியா முழுதும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பலை இருந்த பொழுது தமிழகத்தில் இல்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு தேவை என ஏன் குரல் எழுப்பப்பட்டது? அதன் வரலாற்று நியாயம் என்ன? அந்தக் கால கட்டத்தில் அரசு அதிகாரத்திலும், கல்விக் கூடங்களிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31525/

சாதி,சமூகம்-கடிதம்

அன்பின் ஜெ.. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பொருள் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் தரப்பின் எல்லாத் திசைகளையும் அணைத்து எழுதியிருக்கிறீர்கள். இத் தலைப்பில், லௌகீக இயங்குதளத்தில் சில விஷயங்கள் சொல்ல இருக்கின்றன எனக்கு. நிச்சயமாக, “க” அவர்களின் தன்னிரக்கம் தவிர்க்கப் பட வேண்டியது. அதே சமயம், அவமதிப்பை எதிர்கொள்வது ஒரு அவசியமான skill தான். உதாரணமாக, இந்த வாரம், சென்னையில் சதுர்மாஸ்ய விரதம் கொண்டு தங்கியிருக்கும் ஸ்ருங்கேரி ஸ்வாமிகளைப் பார்க்க என் மகனைக் கூட்டிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31520/

சாதியும் ஜனநாயகமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஏரிப்பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவள். உங்களுக்குக் கடிதம் எழுதும் தகுதி கூட எனக்கில்லையென்றே நினைக்கிறேன். உங்களைப் போல இரவும் பகலும் நான் வாசிக்க / எழுத நினைத்துக்கூட பார்த்ததில்லை. சின்மயி பற்றிய பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி எனக்கு மேலும் சில விளக்கங்கள் தேவையென்பதால் இதை எழுதுகிறேன். சின்மயி / கைதாயிருப்பவர்கள் பிரச்சனை பற்றி எனக்குப் பேச ஏதுமில்லை. அது அவர்களின் சொந்தப் பிரச்சனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31485/

விலாங்கு

”ஐயா வணக்கம்” ”நமஸ்காரம்.க்ஷேமமா இருங்கோ…” ”இல்லீங்க…இப்ப பேட்டியெல்லாம் எடுக்கிறதுன்னாக்க அதுக்கு ஒரு மொறை இருங்குங்க…அப்டித்தான் இருக்க முடியும்…” ”அதான் சொல்றேன்…நன்னா க்ஷேமமா இருங்கோ” ”அப்டிச் சொல்றீங்களா? சரிங்க… கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”பேஷா கேளுங்கோ.. பிரஸ்னோத்தரம் இதம் ஏவம் வ பிரம்ம வதிஷ்யாமின்னு சொல்லியிருக்கே” ”யாருங்க?” ”பெரியவா…” ”பெரியவான்னாக்க?” ”ரிஷிகள்…” ”அப்டீங்களா? அய்யா இப்ப நீங்க சொன்னதை திரும்ப ஒருவாட்டி சொன்னீங்கன்னாக்க நல்லாருக்கும்..வேகமா சொல்லிட்டீங்க காதிலே உழுவல்லை” ”ஆபத்ஸ்தம்பஸூத்ரத்திலே உள்ளதுடா அது.ரொம்ப ஸூக்ஷ்மமான அர்த்தம்லாம் அதுக்கு உண்டு… அதைப்பத்தி பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1324/

தறி-ஒருகடிதம்

ஜெ, நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை). ஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழைய தறி. பட்டுத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19642/

Older posts «