Tag Archive: சாதாரணத்துவம்

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை

[ஒன்று] தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீல பத்மநாபனைப் பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப் படுவது இல்லை. அவரது படைப்புகள் பேசப்படுவதுமில்லை. அவரைப் பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சம கால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்த காலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள், அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/363

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-2

[தொடர்ச்சி] அசோகமித்திரனின் எக்கதாபாத்திரமும் அர்த்தமின்மையின் எல்லைக்குச் செல்வதில்லை. ‘இன்னும் சில நாட்களி ‘ன் சாம்பசிவமாக இருப்பினும் கூட, செயலின் அந்த தளத்தின் உள்ளீடற்ற தன்மை ஒரு ஓசையுடன் வெடித்துத் திறப்பது மட்டுமே அவர் கதைகலில் தெரிகிறது. அவை காட்டும் உருவம் நிதரிசனங்களில் மட்டுமே நம்பிக்கை உள்ள யதார்த்தவாதியினுடையது. இது ஒரு குறைபாடோ பிழையோ அல்ல, ஒரு தன்மை மட்டுமே ஆகும். இப்பார்வைக்கு எல்லைகள் நிறைய. பிரவாகத்தை அசோகமித்திரன் பார்ப்பதில்லை, துளிகளைத்தான் என்று கூறுவது இதனால்தான். அவருடைய கதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29562

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1

சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை, அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில், அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில், காலத்தில் உறைந்து நின்று விட்ட துளியையே, நாம் காண்கிறோம். ஆனால் நுட்பமாகப் பார்க்கும்போது, அத்துளியின் தொடர்ந்த மாறுதலை நாம் காண முடியும். தங்கு தடையற்ற, மகத்தான பிரவாகம் இப்படி ஓர் துளியின், நிலை மாறுதலாக அசோகமித்திரனில் வெளிப்படுகிறது. அவருடைய அத்தனை சிறுகதைகளுக்குமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81