Tag Archive: சாகித்ய அக்காதமி விருது

ஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது

  மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இவ்வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இயல்புவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆ. மாதவன். புகைப்படத்துல்லியத்துடன் புறவய உலகைச்சித்தரிக்கும் அழகியல் இது. மானுட அகத்தின் தீமையை ஊசிமுனைக்கூர்மையுடன் தொட்டு காட்டும் படைப்புகள் அவருடையவை. ஆ.மாதவன் கடைத்தெருவின் கலைஞன். திருவனந்தபுரம் சாலைத்தெருவின் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே அவர் எழுதினார். பிச்சைக்காரர் முதல் பெருவணிகர் வரை அனைவருமே ஒருவரை ஒருவர் எத்திப்பிழைக்கும் அந்தத்தெரு அவருக்கு இவ்வுலகின் குறியீடாகவே விரிந்தது ஒருபடைப்பின் படைப்புகளில் மூன்றில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81927

சாகித்ய அக்காதமி விருது ?

ஜெயமோகன் நேரடியாக ஒரு கேள்வி, உங்களுக்குச் சாகித்ய அக்காதமி விருது கிடைக்கவேண்டும் என்ற ஆசை உள்ளதா? எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? அதற்காகத்தான் இந்த சத்தமா என்று கேட்கமாட்டேன் சந்திரசேகர் அன்புள்ள சந்திரசேகர், நான் சாகித்ய அக்காதமி விருதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அவ்விருதின்மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை இதுவரை வைத்துள்ளேன். அதைப்பெறுவது மரியாதையாக இருக்காது. ஆனால் இது அவ்விருது கிடைக்காது என்னும் எண்ணத்தால் வரும் துறப்பு அல்ல. வேண்டும் என்றால் அதைப்பெறுவது எனக்கு பெரிய விஷயம் அல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79802

கோவையில் பூமணி

கோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி பழனிச்சாமி, சு.துரை, சோ.தருமன், கவிஞர் அறிவன், செல்வேந்திரன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/70713

பூமணி விழா காணொளி

https://www.youtube.com/watch?v=2BDbBOEFMgY&feature=youtu.be 9-1-2015 அன்று சாகித்ய அக்காதமி விருது பெற்றமைக்காக எழுத்தாளர் பூமணிக்குச் சென்னையில் நிகழ்ந்த பாராட்டுவிழாவின் காணொளிப்பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/70745

விருதுகள்

சாகித்ய அக்காதமி விருது ‘ விஷ்ணுபுரம் வெளிவந்தது 1997ல். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயதுதான். அன்றெல்லாம் வயோதிகர்கள்தான் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள். ஆனாலும் ஒவ்வொருமுறை சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்படும்போதும் என்னைக்குறிப்பிட்டு ஒரு கெக்கலிப்பு கிளம்பிவரும். ‘இந்தமுறையும் ஏமாந்தான்யா’ என்றவகையில். சாகித்ய அக்காதமி விருதுகளை நான் விமர்சித்தேன் என்றால் ‘கெடைக்கலைன்னு புழுங்குகிறான்’ என்பார்கள். பாராட்டினால் ‘சமாளிச்சான்யா’ என்பார்கள்.; நான் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளுக்காக தவம் கிடந்து ஏங்கி ஏமாந்துகொண்டிருப்பதாக எழுதும் அவர்களைக் கூர்ந்து கவனித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68541

ஜோ- ஞாநி-விமர்சனங்கள்

ஜெ, ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதை விமர்சித்து ஞாநி எழுதியிருப்பதை வாசித்தீர்களா? அவரை ஓர் இந்துத்துவர் என்று சொல்கிறார் ஞாநி. டிவிட்டரில் ஒருவர் இப்படி எழுதியிருந்ததை வாசித்தேன். ஜேடி குரூஸ்ன்னு பேர பாத்துட்டு அமேரிக்க காரரா இருப்பாரோன்னு நெனச்சேன்.போட்டோ பாத்ததும் தான் ஆப்பிரிக்கர்ன்றது தெரியுது ;) இதெல்லாம் என்ன மனநிலை என்றே எனக்குப்புரியவில்லை எம்.சந்திரசேகர் * அன்புள்ள ஜெ இந்த வருடம் ஜோ டி குரூஸுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43466

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்   இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43327

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது

இவ்வருடத்தைய சாகித்ய அக்காதமி விருது காவல்கோட்டம் நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சாகித்ய அக்காதமி விருது பெறும் எழுத்தாளர்களிலேயே இளம் வயதினர் சு.வெங்கடேசன். காவல்கோட்டம் அவரது முதல் நாவல் என்பது மட்டுமல்ல வெளிவந்த ஒரே இலக்கிய ஆக்கமும் கூட. எல்லா வகையிலும் முக்கியமான விருது. வெங்கடேசனின் காவல்கோட்டம் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியதும் அங்கே காவல்புரிந்து வந்த கீழக்குயில்குடி வட்டாரப் பிறமலைக்கள்ளர்கள் அதன் காவலுரிமையை இழந்து பின்னர் அதைப் பெறும் சித்திரத்தில் ஆரம்பிக்கிறது. மதுரையின் காவலர்களாகிய அவர்களே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23356

நாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது

ஆ.மாதவன் விருதுவிழா முடிந்து பேசிப்பேசிபேசிக் களைத்து விடிகாலையில் தூங்கி ஏழுமணிக்கு எழுந்து கோரல் அப்பார்மெண்டில் இருக்கும்போது வசந்தகுமார் செய்தியனுப்பியிருந்தார் – சூடியபூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப் படுகிறது. உற்சாகமாக அவரைக் கூப்பிட்டேன். முந்தையநாள் அவரது பேச்சை நினைவு கூர்ந்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘வாங்கணுமா வேணாமான்னு ஒரே கொழப்பமா இருக்கு’ என்றார் நாஞ்சில். ‘வாங்கலாம் சார்…அப்றம் நல்ல ரைட்டர்ஸ் வாங்கமாட்டேங்கிறாங்க…அதான் , அப்டீன்னு ஒரு நியாயம் கெளம்பி வரும்’ என்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10874

சாகித்ய அக்காதமி மீண்டும்

ஜெயமோகன், சாகித்ய அக்காதமி விருதுக்கு உங்களுடைய இலக்கணம் என்ன, கொஞ்சம் சொல்ல முடியுமா? நீங்கள் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு பரிசு கிடைத்தால் ஆதரிக்கிறீர்கள். திலகவதிக்கு கிடைத்தால் சும்மா இருக்கிறீர்கள். வைரமுத்துவுக்கும் தமிழன்பனுக்கும் கிடைத்தால் எகிறுகிறீர்கள்…உங்கள் கணக்குகள் என்ன? யாருக்குக் கொடுத்தால் சந்தோஷப்படுவீர்கள்?  [சாகித்ய அக்காதமி விருதுகள்] ஜான் செல்வா   அன்புள்ள ஜான்   இந்த இணையதளத்திலேயே என்னுடைய கருத்துக்களை விரிவாக எழுதியிருக்கிறேன். எனக்கு ஓர் இலக்கியவிமரிசகனாக உறுதியான இலக்கிய அபிப்பிராயங்கள் உண்டு. அவற்றை நான் சாகித்ய அக்காதமி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6070

Older posts «