Tag Archive: சாகித்ய அகாதமி விருது

சசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி

இந்தியாவின் இருண்ட்காலம் வாங்க\ இவ்வாண்டு மலையாளத்துக்கு சாகித்ய அக்காதமி ஏமாற்றம். மதுசூதனன் நாயர் ஒரு கவிஞரே அல்ல. அலங்காரச் சொற்கூட்டி. பாடகர். ஆனால் பெரும்புகழ்பெற்றவர், வேறுவழியில்லை. ஆனால் இவ்வாண்டுக்குரிய சாகித்ய அக்காதமி விருதுகளில் இன்னொரு மலையாளி குறிப்பிடத்தக்கவர். சசி தரூர். அவருக்கு சாகித்ய அக்காதமி விருது பெற்றுத்தந்த நூல்An Era of Darkness: The British Empire in India இது ‘இந்தியாவின் இருண்டகாலம்’ என்ற பேரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது வெறுமே ஒரு பார்வைக்கோணத்தை முன்வைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128804/

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்   இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43327/

சாகித்ய அக்காதமி – விவாதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இதை எழுதி உங்களுக்குத் தலைவலி கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இதைச் சொல்லாமல் மற்றவர்களும் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது தமிழ் இலக்கிய உலகமே அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடியது, மறுபேச்சே இல்லை. இப்போது ஒருவருக்குக் கிடைத்திருக்கும் விருதைப்பற்றி இலக்கியவாதியின் வீட்டில் இருக்கும் நாய்கள் கூடப் பெருமையாய்ப் பேசாது என்பது திண்ணம். நாஞ்சில் நாடன், “இந்த விருது சமாச்சாரம் எப்படினா….ஒரு யானை கையில மாலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23872/

சாகித்ய அகாதமி விருதுகள்

இவ்வருடத்திய சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் புவியரசு என்பவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த செய்திதான். அதிர்ச்சியோ வருத்தமோ இல்லை. இலக்கியத்தகுதி கொண்ட ஒருவருக்கு அகாதமி விருது கிடைத்திருந்தால் மட்டுமே அதிர்ச்சி அடையவேண்டும் போலும். சென்ற பல வருடங்களாக ஆ.மாதவன், பூமணி, நாஞ்சில்நாடன்,வண்ணநிலவன், வண்ணதாசன் போன்ற தகுதிகொண்ட படைப்பாளிகள் பலருடைய பெயர்கள் பரிசுக்கு அடிபட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் தகுதியான எவருக்கும் பரிசு செல்லாமல் இருக்க மறைந்த பாலா, இருக்கும் சிற்பி இருவரும் ஆத்மார்த்தமாக முனைவதாகச் செய்தி. இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5976/

சாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்

இவ்வருடத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது தமிழில் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியப் பரிசுகளை ‘யாரோ ஒருவருக்கு யாரோ சிலர் கொஞ்சம் ரூபாய் கொடுக்கிறார்கள், நல்ல காரியம் ‘ என்ற அளவுக்கு மட்டுமே புரிந்துவைத்துள்ள பாமரர்கள் ‘ ‘ பரிசுகளைப்பற்றி விவாதிப்பதா சேச்சே ‘ ‘ என்று முகம் சுளிக்கக் கூடும். கவிதை என எழுதபடுவதெல்லாமே கவிதைகளே என்ற இலக்கியப்புரிதல் உள்ள ‘பாதிவெந்த ‘ வாசகர்கள் ஒன்றும் புரியாமல் திகைக்கக் கூடும். ஆயினும் இலக்கியத் திறனாய்வாளனாகச் செயல்படும் ஒருவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54/