Tag Archive: சம்ஸ்கிருதம்

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

அன்புள்ள ஜெ, வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22431

அறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்

திரு செமோ, தமிழறிஞர்கள் எங்கே என்ற கட்டுரையினை வாசித்தேன். சமஸ்கிருதம் அறிவியலுக்குரிய மொழி என்று அதிலே சொல்லியிருந்தீர்கள். உங்களுக்கே கேவலமாக இல்லையா? சம்ஸ்கிருதத்திலே உள்ள அறிவியல் என்ன என்று கொஞ்சம் சொல்லித்தர முடியுமா? சமஸ்கிருதத்தை இனிமேல் அறிவியலுக்கு வைத்துக்கொள்ளலாமா? உங்கள் அறிவுத்திறனை பற்றி ஆச்சரியம் கொள்கிறேன் மனோ சந்திரா. அன்புள்ள மனோ, நீங்கள் சுட்டிய கட்டுரையில் உள்ள நான் எழுதிய வரி இதுதான். ‘சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி’. அறிவியக்கம், அறிவியல் இரு சொற்களுக்கும் வேறுபாடு தெரியாத நீங்களெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61765

சம்ஸ்கிருதத்தின் அழிவு?

அடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா! நினைவுதினக்கொண்டாட்டம். இறப்பை நினைவுகூரும் வாரத்தைக் கூடவா இந்த தமிழ் தேசிய பாஸிசவாதிகள் எதிர்க்கிறார்கள்.என்ன ஒரு காட்டிமிராண்டித்தனம்.சே.. In the memorable year of 1857, a Gujarati poet, Dalpatram Dahyabhai, was the first to speak of the death of Sanskrit: All the feasts and great donations King Bhoja gave the Brahmans were obsequies he …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60337

ஏன் தமிழ்ச்சொற்கள்?

அன்புள்ள ஜெமோ, வெண்முரசை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் வரும் தூயதமிழ்ச் சொற்கள் பல நான் இதுவரை கேள்விப்படாதவை. அவை அகராதிகளிலும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்களா? இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது? நரசிம்மன் அன்புள்ள நரசிம்மன், நான் விஷ்ணுபுரம் எழுதியபோதும் இதே குற்றச்சாட்டு இருந்தது. விஷ்ணுபுரம் தத்துவம், சிற்பம் சார்ந்த கலைச்சொற்களை சம்ஸ்கிருதத்தில் முதலில் சொன்னபின் அவற்றின் தமிழ் வடிவங்களையே பின்னர் கையாண்டது. அவற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47576

மொழி- 4, இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/3842

கார்ல்சகனும் சிவானந்த சர்மாவும்

அன்புள்ள ஜெ, வணக்கம். சென்ற மாதம் சொல்வனத்திற்கு ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது “லீலை” கதைகளை உங்களிடம் அனுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பேன். இருந்தாலும் இதை உங்களிடம் பகிர்வதற்குக் காரணம், ‘கடவுளை நேரில் காணுதல்’ கட்டுரையில் கார்ல் சாகனின் ‘காண்டாக்ட்’ நாவல் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகம் தான். நான் காண்டாக்ட் படித்ததில்லை. உங்களின் கட்டுரை வருவதற்கு ஒரு மாதம் முன்பு, பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22614

இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர்

அன்பின் ஜெ. சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன். “சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்” என்கிறீர்கள். இந்து மதம் பொதுவாகவே பொதுமைக்கு எதிரானது என்பதை இன்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் ‘அந்நிய மதத்தினர் பிரவேசிக்கக் கூடாது’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகைகள் மூலம் அறியலாம். அவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22567

சம்ஸ்கிருதம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். http://jeyamohan.in/?p=3863 எனக்கு இந்த மாதிரி சர்ச்சைகளில் கலந்து கொள்வது விருப்பம் இல்லாத விஷயம். இருப்பினும் வேறு ஒரு இடத்தில படித்ததை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விருப்பம். http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-questions/ தமிழ்ஹிந்து டாட் காம் தளத்தில் சுப்பு என்பவர் எழுதியதில் இருந்து சில வரிகளை கீழே கொடுத்துள்ளேன். சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த முக்கியப் புள்ளி தமிழக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3999