குறிச்சொற்கள் சம்பவன்

குறிச்சொல்: சம்பவன்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91

90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86

85. தொலைமீன்ஒளிகள் குடில் வாயில் திறந்து பிருகந்நளை வெளியே வந்தபோது முக்தன் வேல்தாழ்த்தி வணங்கினான். இரும்புக் கம்பிகளால் முடையப்பட்ட மார்புக் கவசமும் இரு கைகளில் காப்புக் கவசங்களும் தோளில் சிறகென எழுந்திருந்த இலைக் கவசங்களும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62

61. இளவேனில் வருகை “குருதித் தூய்மையை சொல்லிக்கொள்ளும் எக்குலமும் தன் தொடக்கத்தை திரும்பிப்பார்ப்பதை விரும்புவதில்லை என்ற முன்வரியுடன் எந்த அரசகுலத்தையும் ஆய்வதே என் வழக்கம்” என்றார் திரயம்பகர். “தொன்மையான ஆரிய அரசகுடிகளில் ஒன்றான கேகயம்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61

60. நிழலியல்கை “சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53

52. நிறையாக் கானகம் கீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான்....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52

51. குருதிக்கடல் சம்பவன் விழித்தெழுந்தபோது எங்கிருக்கிறான் என்பதை அறியாது ஒருகணம் திகைத்தான். புரண்டு கையூன்றியதும் அருகே ஒழிந்த ஈச்சம்பாயைக் கண்டு அனைத்தையும் உணர்ந்து எழுந்து நின்றான். “மேகரே… மேகரே” என்று அழைத்தான். மேகன் அஸ்வகனுடன்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50

49. மதுநிலவு முதலில் யவன மதுக்கலங்கள் காட்டுக்குள் சென்றன. கயிறு சுற்றி நீரோடைக்குள் குளிரப்போட்டிருந்த அவற்றை எடுத்து ஈரமரவுரிநார் செறிந்த நார்ப்பெட்டிகளில் அடுக்கிவைத்து சேடியரிடம் கொடுத்தனுப்பினார்கள் அடுமனையாளர்கள். அவற்றுக்கு மேலே மரக்கிளைகளில் குரங்குகள் எம்பி...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49

48. பொற்சுழி கஜன் ஒரு மரத்தின் கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்தான். முரசொலிகள் அமைவதற்குள்ளாகவே காட்டுக்குள் இருந்து அத்தனை ஏவலர்களும் வெளியேறிவிட்டிருந்தார்கள். இறுதியாக கீசகனின் காவலர்கள் பதற்றமில்லாமல் மெல்லிய குரலில் பேசியபடி வெளியே சென்றனர். கிரந்திகன் கையில்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48

47. நிலவெழுகை காட்டுமுகப்பில் நின்ற வண்டியில் இருந்து பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது தொலைவில் கொம்பொலி எழுவதை முக்தன் கேட்டான். இரு பெரிய பித்தளை அண்டாக்களை ஒன்றுக்குள் ஒன்றெனப்போட்டு தோளிலேற்றி கொண்டு சென்று அடுமனைக்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47

46. கான்நுழைவு இரண்டு ஒற்றைக்காளை வண்டிகளிலாக நூறு பேருக்கு சமைப்பதற்குரிய பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனைக் கருவூலத்திலிருந்து அவற்றை ஏவலர் சிறிய இருசகட வண்டிகளில் கொண்டுவந்து முற்றத்தில் வைக்க சம்பவனும் அடுமனையாளர் நால்வரும் அவற்றை எடுத்து...