கௌரவப் படையின் பருந்துச்சூழ்கையின் அலகுமுனை என விஸ்வசேனரால் செலுத்தப்பட்ட பீஷ்மரின் தேர் நின்றிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு தேர்வில்லவரும் ஆயிரத்தெட்டு பரிவில்லவரும் கொண்ட அணுக்கப்படை பருந்தின் நெற்றியிறகு என வகுக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வில்லவர்களில் ஒருவனான சுஜயன் தன் நிழல் நீண்டு களத்தில் விழுந்திருப்பதை நோக்கியபடி நின்றான். அவன் கையிலிருந்த வில்லின் நிழல் கரிய நாகம்போல் நெளிந்து கிடந்தது. அவன் அம்பை தூக்கி நிழலில் பார்த்தான். அது கூர்கொண்டிருக்கவில்லை. அதனால் ஒரு இலைக்குருத்தைக்கூட கிழிக்க முடியாது. அவன் புன்னகைத்து …
Tag Archive: சம்பன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/112899
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50
பகுதி ஆறு : விழிநீரனல் – 5 தன்னைச்சூழ்ந்து அலையடித்து எழுந்து அமைந்த காளிந்தியின் கரியநீர்ப்பெருக்கில் தென்னைநெற்றுக்கூட்டமென தானும் அலையென வளைந்தமைந்து வந்துகொண்டிருந்த நாகர்களின் சிறுவள்ளங்களையும் அவற்றில் விழிகளென விதும்பும் உதடுகளென கூம்பிய முகங்களென செறிந்திருந்த நாகர்களையும் நன்கு காணுமளவுக்கு கர்ணனின் விழிகள் தெளிந்தன. விடிவெள்ளி எழ இன்னும் பொழுதிருக்கிறது என அவன் அறியாது விழியோட்டியறிந்த விண்தேர்கை காட்டியது. வலப்பக்கம் விண்மீன்சரமெனச் சென்றுகொண்டிருந்த இந்திரப்பிரஸ்தம் நோக்கிய கலநிரைகள் கண்கள் ஒளிவிட சிறகு விரித்த சிறுவண்டுகள் என சென்றன. கரையோரத்து மக்கள்பெருக்கின் ஓசைகள் காற்றில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/83786