Tag Archive: சமச்சீர் கல்வி

கல்வி கடைசியாக…

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, முதலில் என் கடிதத்தினைப் பிரசுரித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள், அக் கடிதம் எழுத என்னைத் தூண்டியது தாங்கள் பிரயோகப்படுத்தியிருந்த வார்தைகளே (மானுட மிருகங்கள், வஞ்சகர்கள், பொறுக்கிகள் , மாபியா மற்றும் புல்லர்கள்). இதை ஒரு சில அற்பர்களுக்கு மட்டுமே தாங்கள் எழுதியதாகக் கூறவில்லை. மாறாகப் பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரமாக அனைத்து ஆசிரியர்களையும் உள்ளடக்கி (தாங்கள் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தவர்கள், தங்கள் மாமனார், மற்றும் திரு வேதசகாயகுமார் ஆகியோரயும் சேர்த்தே) தாக்குவதாகவே அது அமைந்திருந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18275/

ஓர் ஆசிரியரின் கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நான் தங்களின் தீவிர வெறிநிலை கொண்ட வாசகன். அவ்வாறு கூறிக்கொள்வதில் பெருமையும் கொண்டவன். தங்களின் கட்டுரைகளை இணையத்தில் ஒன்றுவிடாமல் படித்துவருபவன். இந்நிலையில் தங்களின் ’ஒரு தற்கொலை’ என்ற தலைப்பில் ஜுன் 28இல் வெளியிடப்பட்ட கட்டுரையினைக் கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். பிறரைக் குறை கூறியபடி டீக்கடை பெஞ்சுகளில் செய்தித்தாள் வாசிப்பவன் ஒரு கருத்தினைக் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வாறே உங்கள் கட்டுரையும் இருந்தது. நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல் தங்களின் நேரடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17049/

சமச்சீர் கல்வி-கடிதம்

அன்புமிக்க ஜெ.மோ., வணக்கம். தொடர்ந்து உங்களது கட்டுரைகளை வாசித்து வருகிறேன். உங்களது நிலைப்பாடுகளில் பல எனக்கு உடன்பாடில்லை என்றாலும்,  உங்களது நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்தான் இதை எழுதுகிறேன். மாணவன் சீனிவாசனின் மரணம்  எந்தவொரு கல்நெஞ்சையும் கலங்கடித்துவிடும். உங்களது கோபத்தில் உள்ள நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால், சீனிவாசனின் இறுதிக் கோரிக்கையான, அரசுப் பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த என்ன செய்யவேண்டும் என்பது குறித்துத் தங்களைப்போன்றவர்கள் சரியான திசையில் தமது கருத்துக்களை முன்வைத்துப்  பொதுக்கருத்தாக வளர்த்தெடுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16320/