Tag Archive: சபரிநாதன்

‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2

[தொடர்ச்சி] தேவதச்சனின் பாத்திரங்கள்: அதேபோல.தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகள் சித்தரிப்புக்கவிதைகள் தான்.அவற்றில் எப்போதுமே திரைச்சீலை போல ஒரு பின்புலம் விரிக்கப்படுகிறது.காலம் இடம் சார்ந்த தகவல்கள் இல்லாத கவிதைகள் வெகுசிலவே.அதுவும் பின்னால் வந்த கவிதைகளில் தான் அவற்றைக் காணமுடிகிறது.கொஞ்சம் இசைத்தன்மை கலந்து குரல் மாற்றி, வேகம் கூட்டி, எழுதப்பட்டிருக்கும் கவிதைகள்.கடைசி டினோசாரில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஒரு நிதானமான அடங்கிய தொனியில் அமைந்த சித்தரிப்புத்தன்மை மிகுந்தவையே.இவற்றை ஒருங்கே வாசிப்பது மதியவேளை ஒன்றில் சமவெளியில் நடப்பதைப் போன்ற பிரமையை உண்டு செய்கிறது.சட்டென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81356

‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1

’இரண்டு சூரியன்’ தொகுப்பில் இத்தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை உள்ளது தன் நாவு நீட்டி மின்மினிப்பூச்சியை கவ்வுகிறது தவளை ஒன்று தவளையும் பூச்சியும் கலந்து புதிய ஜீவராசி ஒன்று ஒரு விநாடி தோன்றியது அதற்கு தேவதச்சம் என்று பெயர் வைத்தேன் தவளை ஒரு குழப்பமான ஜீவராசி,மனிதனைப் போலவே.தன் வீடு எதுவென்று அறியாது குழம்பித் தவிக்கும் ஒரு வகையினம்.அதுவே அதன் அலைபடலுக்குக் காரணமாக அமையப்பெற்றது.மாறாக,மின்மினி என்ற சொல்லே பரவசத்தில் படபடக்கும் இமையென ஒலிக்கிறது.முதலில், அது பறக்கத் தெரிந்த ஓர் உயிர்.மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81291