Tag Archive: சந்திப்பு

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26814/

ஒரு சந்திப்பு

ஒரு திடீர் சந்திப்பு. வெண்முரசு விழாவுக்காக வெளியூரில் இருந்து வந்த நண்பர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு, இந்த விலாசத்தில். ஓய்விருப்பவர்கள் வரலாம் Bala, I-21, Chaithanya nest, 9 A, Rathna Nagar main road, Off: cenotaph road, Teynampet, Chennai – 600018

Permanent link to this article: https://www.jeyamohan.in/65366/

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355/

‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா

கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் நூல் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறேன். மதுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/6622/

அசோகமித்திரன் சந்திப்பு

சென்ற 1-11-08 அன்று சென்னையில் எழுத்தாளர் கோ.ராஜாராம் அவர்களின் மகளுடைய திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அசோகமித்திரனைச் சந்தித்தேன். அவரைப்பார்த்து நெடுநாள் ஆகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு உயிர்மையின் கூட்டம் ஒன்றில் அவரைப்பார்த்தது. சென்னைக்குச் சென்றாலும் சாதாரணமாகச் சென்று சந்திக்க முடியாத அளவுக்கு தள்ளி புறநகரில் இப்போது குடியிருக்கிறார். திருமணத்துக்கு நானும் கவிஞர் ஹரன்பிரஸன்னாவும் சுவாமிநாதன் என்ற நண்பரும் சென்றோம். உள்ளே சென்றபோது ராஜாராம் என்னைப் பார்த்து கலாப்ரியாவா என்று கேட்டார். அவர் என்னை நேரில் பார்த்ததே இல்லை. உள்ளே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/752/

பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..

இன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ”தோப்பில் தானே?” என்றேன். ”தம்பி! என்ன வயசாயிப்போயிட்டே?”என்றபடி அணைத்து அமரச்சொன்னார். நெடுநாட்களுக்குப் பின் அண்னாச்சியைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் பக்கவாதம் அவ்ந்து தளர்ந்துபோன வடிவிலேயே அவரைக் கண்டிருந்தேன். இப்போது நன்றாக உடல்நலம் தேறி புத்துணர்ச்சியுடன் இருக்கிறார் என்பது உள்ளூர ஆழமான பரவசத்தை அளித்தது. அவரைப் பார்க்கவே பிடித்திருந்தது. ”எங்க யாத்திரை?” என்றேன் ”களியிக்காவெளைக்கு,ஏவாரம் சின்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/305/

குற்றாலம் பதிவுகள்

நான்குவருட இடைவெளிக்குப்பின்னர் குற்றாலம் பதிவுகள் சந்திப்பு மீண்டும் இந்த அக்டோபர் 12,13 தேதிகளில் குற்றாலத்தில் ராஜா பங்களாவில் நடைபெற்றது. ஏறத்தாழ இருபதுவருடங்களாக நடைபெற்றுவரும் இந்த சந்திப்புக்கு தமிழிலக்கியச் சூழலை தீர்மானித்ததில் மிக முக்கியமான பங்கு உண்டு. தொடக்கத்தில் பிரம்மராஜனும் கலாப்ரியாவும் இணைந்து இதை நடத்தினர். இதை நடத்துவதற்கு அன்றிருந்த காரணம் மிக எளிமையானது. கலாப்ரியாவின் மாமனார் குற்றாலத்தில் பங்களாக்களை குத்தகைக்கு எடுத்து சாரல்பருவ காலத்தில் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து வந்தார். சாரல் முடிந்தபின் சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7817/