Tag Archive: சத்யஜித்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45

பகுதி 10 : சொற்களம் – 3 உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு அமர்விடம் அமைக்கப்பட்டிருந்தது. சாய்ந்துகொள்ள செம்பட்டு உறையிடப்பட்ட உருளைப்பஞ்சணைகளும் சுற்றணைகளும் போடப்பட்டிருக்க மேலே பட்டுத்திரைச்சீலை பறக்கும் தொங்குவிசிறிகளும் பாவட்டாக்களும் வெளியே சென்ற சரடுகளால் இழுக்கப்பட்டு அசைந்தன. நடுவே இருந்த அணிச்சேக்கையில் துருபதன் அமர்ந்துகொள்ள வலப்பக்கம் கிருஷ்ணனும் சாத்யகியும் அமர்ந்தனர். இளவரசர்கள் பின்னால் அமர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73006

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44

பகுதி 10 : சொற்களம் – 2 மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும் பாதை முழுக்க மலர்த்தோரணங்களாலும் பட்டுப்பாவட்டாக்களாலும் வண்ணத்திரைச்சீலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. அகன்ற வழியின் இருபக்கமும் பாஞ்சாலத்தின் ஐங்குடியினரும் நின்று கிருஷ்ணனை வாழ்த்தி மலர்தூவி குரலெழுப்பினர். அவர்கள் வீசிய மலர்களில் பெரும்பகுதி சாத்யகியின் உடலில்தான் விழுந்தது. அரண்மனைமுகப்பை அடைந்தபோது அவன் உடலை மலர்ப்பொடி மூடியிருந்தது. அணிமுற்றத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72934

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43

பகுதி 10 : சொற்களம் – 1 கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை பன்னிரண்டு நாட்களில் சென்றடைந்தன. தெற்கிலிருந்து மழைக்காற்று வடக்குநோக்கி வீசத்தொடங்கியகாலம் என்பதனால் பாய்களை விரித்ததுமே கலங்கள் சிந்துவின் எதிரொழுக்கின் அலைகள் மேல் தாவித்தாவி ஏறி முன்னால் சென்றன. கலங்களுக்குள் இருந்த அனைத்துப்பொருட்களையும் கட்டிவைக்கவேண்டியிருந்தது. “நூற்றுக்கணக்கான முறை நான் சிந்துவுடன் இணைந்து நடனமிட்டிருக்கிறேன்… அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72823

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14

பகுதி 5 : ஆடிச்சூரியன் – 1 நகுலன் அரண்மனை முகப்பில் ரதத்தில் வந்திறங்கியபோது காவல்கோட்டங்களில் எண்ணைப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முற்றத்தில் முன்னரே நின்றிருந்த மூன்று தேர்களின் நிழல்கள் அரண்மனையின் பெரிய சுவரில் மடிந்து எழுந்து சுடராடலுக்கு இசைய அசைந்தன. கடிவாளக்காப்பாளன் ஓடிவந்து குதிரைகளைப்பற்ற தேர்ப்பாகன் இறங்கி படிகளை நீக்கி வைத்தான். நகுலன் இறங்கி அவனிடம் புன்னகைத்துவிட்டு திரும்ப வெண்ணிறக் குதிரை ர்ர்ர்ப் என்ற ஒலியெழுப்பி தலையசைத்து அவனை அழைத்தது. அவன் தன்னுடைய பட்டாடையையும் அணிகளையும் நோக்கிவிட்டு தேர்ப்பாகனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70812

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 3 விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள். நீண்டபயணத்தால் களைத்துவிட்டிருந்த படகோட்டிகள் படகுகளைக் கட்டியதுமே ஆங்காங்கே படுத்து துயிலத் தொடங்கினர். இரவுக்காவல் வீரர்கள் மட்டும் நீண்ட வேல்களும் வாள்களுமாக படகுகளின் அமரங்களில் காவலிருக்க விண்மீன்கள் முழுதாக எழுவதற்குள்ளாகவே அனைவரும் துயின்று விட்டிருந்தனர். விதுரர் தன் பெரும்படகின் மூன்றாம் அடுக்கின் கூரைமேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69855

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 2 ஒவ்வொரு அரசராக வந்து அமர்வதை பீமன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர், நாடு, குலம் மற்றும் புகழ்களுடன் கோல்காரன் கூவியறிவித்துக்கொண்டிருந்தான். பிருகநந்தன், மணிமான், தண்டாதராஜன், சகதேவன், ஜயசேனன்… பலருடைய பெயர்களைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இந்த மணத்தன்னேற்பில் பங்கெடுத்து வெல்லப்போவதுமில்லை. ஆனால் தொன்மையான ஒரு ஷத்ரியகுலத்தின் இளவரசிக்கான மணநிகழ்வுக்கு அழைக்கப்படுவதே ஓர் அடையாளம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சக்ரவர்த்திகள் போல பட்டாலும் பொன்னாலும் வைரங்களாலும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களின் குல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69418

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 1 சிறிய குடிலுக்குள் நான்கு சப்பட்டைக் கற்களால் மூடப்பட்டு எரிந்துகொண்டிருந்த மீன்நெய் விளக்கை எடுத்து அதைத் தூண்டி சுடரெழுப்பி கையில் எடுத்துக்கொண்டு குந்தி வெளியே சென்றாள். குடிலை ஒட்டி தற்காலிகமாக கோரைப்புல் தட்டிகளைக்கொண்டு கூரையிட்டு மரப்பட்டைகளால் சுவரமைத்து கட்டப்பட்டிருந்த சாய்ப்புக் கொட்டகைக்குள் நுழைந்து தரையில் போடப்பட்டிருந்த மரப்பலகைகள் மேல் துயின்றுகொண்டிருந்த மைந்தர்களை நோக்கியபடி சிலகணங்கள் நின்றாள். அர்ஜுனன் எழுந்து “விடிந்துவிட்டதா அன்னையே?” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. அவன் செவிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69333

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 2 கையிலிருந்த தாலத்தில் குருதிக்கவளத்துடன் விரைந்த நடையில் முதுகணியர் மயானங்களைக் கடந்து திட்டிவாயிலுக்குள் நுழைந்து மண்பாதையில் சென்று தெற்குரதவீதியை அடைந்தார். அவர் வருவதை தொலைவிலேயே அங்கு கூடி நின்றவர்கள் பார்த்துவிட்டனர். அவர் கோட்டைக்கதவைக் கடந்ததும் காவல்மேடை மேல் நின்ற வீரன் விளக்கசைக்க நகர் முழுக்க நூற்றுக்கணக்கான முரசுகளும் கொம்புகளும் மணிகளும் பேரொலி எழுப்பத்தொடங்கின. நகரத்தெருக்களில் கூடியிருந்த மக்கள் கைகளைத் தூக்கி “ஐந்து அன்னையர் புகழ் வாழ்க! பன்னிரு உடனுறை அன்னையர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68730

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1 ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள். துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65835

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9

பகுதி இரண்டு : சொற்கனல் – 5 நாய்களின் குணம்தான் படைகளுக்கும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. நாய்கள் கூட்டமாக வேட்டையாடுவன என்பதனால் அவற்றுக்கு படைகளின் இயல்பு வந்ததா என மறுகணம் எண்ணிக்கொண்டான். பின்வாங்குபவற்றையே அவை மேலும் துரத்துகின்றன. பாஞ்சாலர் பின்வாங்குகிறார்கள் என்பதே கௌரவர்களை களிவெறியும் கொலைவெறியும் கொள்ளச்செய்ய போதுமானதாக இருந்தது. தாக்குதலும் இறப்பும் முன்னைவிட அதிகரித்தன. பாஞ்சாலப்படையை முழு விரைவுடன் தாக்கி பின்னுக்குத்தள்ளிச்சென்றது கௌரவப்படை. அதுவரை வில்லேந்திப் போரிட்ட காலாள்படையினர் வேல்களும் வாள்களுமாக பாஞ்சாலப்படைமேல் பாய்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63833

Older posts «