Tag Archive: சதாரா

சஹ்யமலை மலர்களைத் தேடி – 3

சதாரா அருகே காஸ் என்னும் இடத்தில் உள்ள இந்த மலர்வெளி தென்னகத்தின் மிகப்பெரிய மலர்ச்சமவெளி.காஸ் பத்தர் என்று இது அழைக்கப்படுகிறது. 1200 அடி உயரமுள்ள மலைமேல் ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு இந்த செடிவெளி விரிந்து கிடக்கிறது. சேற்றுப்பாறையாலான மலை இது. பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் பூமி சூடாக இருந்தபோது இங்கே உருவான நீர் ஆவியாகி மேலெழுந்து விசும்பின் குளிரில் மழையென்றாகி மீண்டும் பொழிந்தது. பல்லாயிரமாண்டுக்காலம் பெய்த அந்த மழையால்தான் பூமி குளிர்ந்தது. உயிர்க்குலம் உருவாகியது. அப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79804

சஹ்யமலை மலர்களைத்தேடி – 2

ஹூப்ளியில் இருந்து காலை ஐந்தரைக்கே கிளம்ப எண்ணியிருந்தோம். கிளம்பும்போது ஏழரை மணி. இன்று முழுக்க பயணம் மட்டுமே. நேராக சதாரா அருகே உள்ள மலர்வெளிக்குச் செல்லவேண்டும். எனென்றால் எங்களுக்கு அங்கே தங்குவதற்கு வெள்ளிக்கிழமைதான் இடம் கிடைத்திருந்தது. பகல் முழுக்கப் பயணம் செய்து மதியம் ஒருமணிக்குள் சென்றுசேரலாம் என்ற திட்டம். ஆனால் செல்லும்வழியில் முதலில் வண்டியின் டயர் ஓட்டை ஆகியது. அதை கழற்றி மாற்றிவிட்டு பெல்காம் எல்லைக்குள் சென்று ஓட்டையை அடைத்து வைத்துக்கொண்டோம். அதற்கு ஒரு மணிநேரம் ஆகியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79784

சஹ்யமலை மலர்களைத்தேடி – 1

சென்ற ஆண்டு ஜூன்மாதம் கே.ஜே. அசோக் குமார் பூனாவுக்கு அழைத்திருந்தார். பூனா அருகிலிருக்கும் மலர்ச்சமவெளி பற்றி கிருஷ்ணன் இணையத்தில் தேடி சஹ்யாத்ரியில் உள்ள மலர்ச்சமவெளியை கண்டுபிடித்தார்.ஒரு பயணம் ஏற்பாடுசெய்யலாம் என்று எண்ணி பலவகையிலும் திட்டமிட்டோம். அதற்குள் நாட்கள் நகர வேறு பயணங்கள். இம்முறை கோடை முடிந்து பருவமழை தொடங்கியதுமே மீண்டும் மலர்ச்சமவெளிப்பயணம் பற்றிய திட்டம் மேலெழுந்தது. சட்டென்று முடிவுசெய்து கிளம்பிவிட்டோம் நான் 13 ஆம் தேதியே கிளம்பி பெங்களூர் வந்துவிட்டேன். நண்பர் ஷிமோகா ரவி வீட்டில் தங்கியிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79754