Tag Archive: சச்சிதானந்தன்

சாகித்ய அக்காதமி விருதுகளைத் துறப்பது பற்றி…

சாகித்ய அக்காதமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திரும்ப அளித்திருக்கிறார்கள். அதைப்போல மற்ற எழுத்தாளர்களும் திரும்ப அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தி, அளிக்காதவர்களை அவமதித்து வசைபாடி ஒரு கும்பல் எழுதிக்கொண்டிருக்கிறது. ஒரு சில எழுத்தாளர்களுக்குச் சாகித்ய அக்காதமி விருதை திரும்ப அளிப்பது ஒரு போராட்ட வடிவமாகத் தென்படுவதனால் அதை அவர்கள் செய்வதில் எந்தப் பிழையும் இல்லை. ஜனநாயகத்தில் எந்தப்போராட்ட வடிவமும் மக்களிடம் ஒரு தரப்பை வலுவாக எடுத்துச்செல்வதேயாகும். இவ்வகையில் விருதுகளை திரும்ப அளிப்பதன் வழியாக அவர்கள் ஊடகங்களில் இடம்பெறுகிறார்கள், அச்செய்திவழியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79558

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

வெளியின் ஆடை

மனம் – தறி வாக்கு – இழை பூமிக்கான ஆடையை நெய்துகொண்டிருக்கிறார் கபீர் நெய்யும் துணியின் மறுமுனை எங்கே முடிகிறது? நதிபோல் கடலிலா? வானம்போல் வெளியிலா? என் ஆரம்பிக்கும் சுகுமாரனின் கவிதை சமீபத்தில் நிகழ்ந்த ஓர் அபூர்வ மன எழுச்சி . சச்சிதானந்தனின் சாயல்கொண்ட அவரது பழைய பாணிக்கவிதைகளை நினைவூட்டுகிறது. கவிதையின் தலைப்புகூட.ஆனால் சச்சி ஒருபோதும் இக்கவிதை தொடும் முடிவிலியை தொட்டறிய முடிந்ததில்லை. கவிதை என்பது பாணியில் உருவத்தில் நடையில் இல்லை. கவிஞன் என்ற ஆளுமையில், கவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22537