Tag Archive: சங்க இலக்கியம்

எரிமருள் வேங்கை

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார். ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/53878

மரபிலக்கியம் – இரு ஐயங்கள்

செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் “நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம். எதற்காக நேற்று என்ன எழுதினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்?” என்பார்கள். இவை முதல் பார்வைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/387

சங்க இலக்கியம் பயில

சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவரும் வைதேகியின் இணையதளம் இது. ஆங்கிலமொழியாக்கமும் தமிழ் விளக்கமும் உள்ள இந்த தளம் தமிழில் போதிய அறிமுகமில்லாதவர்கள் சங்க இலக்கியத்தை வாசிப்பதற்கு மிகமுக்கியமானது வைதேகி இணையதளம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/35955

சங்க இலக்கியம் வாசிக்க…

சார் நலமா? இந்த வார இறுதியில் சுதா-ஸ்ரீநிவாசன் இல்லத் திருமண விழாவுக்காக, சென்னை செல்கிறோம். சில நாட்களாக சுசீலாம்மா பரிசளித்த வையாபுரிப்பிள்ளையின் ‘சங்க இலக்கியம்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் புரியவில்லை என்றாலும், அந்த மொழி நன்கு பரிச்சயம் ஆகும் வண்ணம் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன். விளக்க உரை போலில்லாமல், முக்கியமான வார்த்தைகளுக்கு மட்டும் அர்த்தம் தரும் வகையில் ஏதாவது நூல் இருக்கிறதா? தமிழ் அகராதியை வைத்து சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? அதே சமயம் திணை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25077

பிரபஞ்சனும் சங்ககாலமும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உயிர்மையில் வெளிவரும் திரு.பிரபஞ்சனின் சங்க காலகட்டத்தின் தமிழர் வாழ்வு பற்றிய கட்டுரைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் அக் காலத்தில் ’பெண்கள் ஒன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய நிலையில் இல்லை, கவிஞர்கள் பாட ஒரு பொருளாகவே இருந்தனர்’ போன்ற கருத்தினை முன் வைக்கிறார். இப்போதிருக்கும் காலகட்டத்தினைக் கொண்டு அக்கால வாழ்வினை ஆழ்ந்து விமரிசிப்பது சரியா? உலகில் எந்த ஒரு பண்டைய சமூகத்திலாவது பெண்கள் சம அந்தஸ்துடன் அனைத்து நிலையிலும் நடத்தப்பட்டிருக்கிறார்களா? அல்லது அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19461

குருகு

விடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான்.  கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான்.  ரிச்சர்ட் டாக்கின்ஸின் பரிணாமத்தைப் பற்றிய நூலை  [The Greatest Show on earth] எனக்கு விவரித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் எனக்கு புரிந்தது பரிணாமவாதிகளிலேயே டார்வின்வாதிகளுக்கும் மெண்டல்வாதிகளுக்கும் நடுவே நுட்பமான ஒரு பிரிவினையும், உள் விவாதமும் உண்டு என்பதே. டாக்கின்ஸ் மெண்டல்வாதி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16748

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

[  3  ] தொன்மையான சம்ஸ்கிருத மரபைப் பார்க்கும்போது விவாதம் அதன் அடிபப்டை இயல்பாக இருப்பதைக் காணமுடிகிறது. ‘சதஸ்’ என்னும் சபை எப்போதுமே முரண்படும் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோத வழியமைக்கும் இடமாக இருந்துள்ளது. இதன் விளைவாக இரண்டு அறிவுத்துறைகள் சம்ஸ்கிருதத்தில் பெரும் வளர்ச்சி பெற்றன. ஒன்று, சொல்லாராய்ச்சி செய்யும் மீமாம்சை. விவாதத்துக்கான பொதுத்தளமான மொழியை துல்லியமாக வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டதனால்தான் இவ்வளர்ச்சி. அடுத்ததாக விவாதத்தின் மெய்காணும்முறைகளை வகுத்துரைக்கும் நியாய சாஸ்திரம். இந்த இரு துறைகளும் தொன்மையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2136

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நானும் மலையாளச் சிந்தனையாளரும் நாவலாசிரியருமான பி.கெ.பாலகிருஷ்ணனும் திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த மதுக்கடை நோக்கி ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தோம். ஆட்டோக்காரர் தமிழர். ஆட்டோவில் ஒலிநாஆவை ஓடவிட்டுக்கோண்டிருந்தார். ஏதோ ஒரு தமிழ் நாட்டுப்புறப்பாடல் ஒலித்தது. அக்காலத்தில் சொந்தமாகவே பாடி பதிவுசெய்து ஒலிநாடாவெளியிடும் மோகம் பரவலாக இருந்தது. நல்ல கரடுமுரடான குரல், உரத்த உச்சகதிக்குரல். தப்பு அல்லது முழவு போன்ற ஏதோ வாத்தியத்தின் தோழமை. நாஞ்சில்வட்டாரவழக்கில் அமைந்த பாடல். அந்த ஓட்டுநர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2134

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் – இகாரஸ் பிரகாஷ்

தமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன் சிக்கல்களை நானும் உணர்ந்திருக்கிறேன். ஸ்பெஷல் மசாலா தமிழில் எழுதப்பட்ட ஒரு சங்கப்பாடலைப் படிக்க, ஸ்பெஷல் சாதா அல்லது சாதா தமிழில் புரிந்து கொள்ள ஒரு யத்தனம் தேவைப்படுகிறது. அல்லது மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அது தான் சங்கப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்களிடம் கேட்டுத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/458