Tag Archive: ‘சங்குக்குள் கடல்’

பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்

ஜெமோ உங்கள் தளத்தில் வரலாறு பற்றிய விவாதம் பார்த்தேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உங்கள் திருப்பூர் உரைபற்றி எழுதிய இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா? அதிலுள்ள கேள்விகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று அறியவிரும்பினேன். ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், அதை அப்போதே பார்த்தேன். ஒரு புன்னகையுடன் கடந்து வந்துவிட்டேன் முதல்விஷயம் இதைப்பற்றியெல்லாம் ஆய்வாளராக நின்று ‘அதிகாரபூர்வமாகப்’ பேசும் தகுதி எம்.டி.முத்துக்குமாரசாமிக்குக் கிடையாது. அவர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஓர் ஆங்கிலப்பேராசிரியர். எண்பதுகளில் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதி சவேரியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74921

என்ன பிரயோசனம்?

அன்புள்ள ஜெ, ராய் மாக்ஸ்ஹாமின் ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா’ படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள் ரசவாதத்தன்மை கொண்டவை. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வரலாறு குறித்த ‘ஒற்றைவரிப்புரிதல்’களைத் தாண்டி சிந்தனையை விரிவுபடுத்தக்கூடியவை. புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, ராயின் ஆங்கிலேய நண்பர்கள், அவரது சக இங்கிலாந்து ஊழியர்கள், உடம்புக்குக் கெடுதல் விளைவிக்கும் உப்பை அதிக வரிபோடுவதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39797

பஞ்சமும் ஆய்வுகளும்

அன்புள்ள சார், நலமா? உங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன். பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு. சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள் மக்களுக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். பஞ்சத்தைப் பற்றி இந்த இரண்டு ஆண்டு காலம் நீங்கள் எழுதியுள்ள சிலவற்றை படித்த பிறகும் கூட! பக்கிங்க்ஹாம் பற்றியும் என் நம்பிக்கை அதுவாகவே இருந்து கொண்டு இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38909

திருப்பூர் உரை-கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் உரைகளை நான் மிகுந்த ஆர்வத்தோடு பின்தொடர்பவன். உங்களின் எல்லா உரைகளும் செறிவோடும் அடர்த்தியோடும் இருந்தாலும், திருப்பூரில் நீங்கள் ஆற்றிய சுதந்திர தின உரை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. பொதுவாக, திருப்பூரில் தாங்கள் ஆற்றும் உரைகள் மிகுந்த அழகும், அறிவார்ந்த தகவலும், செறிவும் கொண்டவையாக அமைகின்றன. இதற்கு முன், விஜயதசமியன்று “அணையாவிளக்கு” என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையும் மிகுந்த ஒளி பொருந்திய ஒன்று. ‘சங்குக்குள் கடல்’ உரை என்னை முழுமையாகவே தனக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38757

சங்குக்குள் கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜே எம் இப்போதுதான் உங்கள் உரையையும் அதைத் தொடர்ந்த கடிதங்களையும் வாசித்தேன். மிக அற்புதமாக நம் தொல் மரபையும் அதில் தோன்றிய நம் வரலாற்று உணர்வையும் மிக நன்றாக இணைத்து விளக்கி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தில் உடன் படுகிறேன். உங்கள் நீலிதான் எங்கள் குல இசக்கி. மேலும் தேசியம், தேசியப்பிரக்ஞை வேறுபாடு பற்றிய கருத்தும் நன்று. சிவா சக்திவேல் அன்புள்ள சிவா நன்றி. ஒரு உள்ளார்ந்த உணர்வுக்கும் அவ்வுணர்வால் உருவாக்கப்படும் அமைப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38906

சங்குக்குள் கடல்-சில வினாக்கள்

திரு ஜெ, இந்தியத்தேசியம் பெருங்கற்களை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லியிருந்தீர்கள். பெருங்கற்கள் உலகம் முழுக்க உள்ளன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவை இந்தியாவில் மட்டும் உள்ளவை அல்ல. ஆகவே உங்கள் வார்த்தைகளுக்கு ஒரு பொருளும் இல்லை. தமிழ் திரையன் அன்புள்ள தமிழ் அற்புதம்! அபாரம்! இந்த அளவுக்கு ஒரு பேச்சைப்புரிந்துகொள்ள இன்று நம்மைவிட்டால் வேறு ஆளில்லை! என் தலையெழுத்து உங்களைப்போன்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்குவதென்பதனால் மீண்டும் சொல்கிறேன். அனேகமாக மீண்டும் சொல்லவேண்டியும் வரும். அந்த உரை வரலாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38744

சங்குக்குள் கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் திருப்பூர் உரையைப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன். இதனை நான் நேரில் காணவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது போன்றதொரு உரையை தமிழ் நாட்டில் எவரும் இதற்கு முன் கேட்டிருக்கவே முடியாது. ஈரோட்டில் நீங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக எழுதியதைப் படிக்கையில் என்னுள் எழுந்த வருத்தம் சொல்லில் அடங்காதது. நீங்கள் கண் முன் கிடக்கும் வைரம். ஆனால் கவனிப்பார்தான் இல்லை. தமிழர்கள் பொய்யர்களின் பின்னால், அயோக்கியர்களின் பின்னால் நடந்தே அழிந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38724

சங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு

நண்பர்களே, இந்திய சுதந்திரத்தைக்கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த அரங்குக்கு என் வணக்கம் இந்திய சுதந்திரத்தைப்பற்றிய ஓர் உரையில் அம்பேத்கர் அவர்கள் ‘ஜனநாயகத்துக்கான சுதந்திரம்’ என்ற சொல்லை குறிப்பிடுகிறார். அது மிகமிக நேர்நிலையான சொல்லாட்சி. வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்றோம் என்பதைவிட, அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றோம் என்பதைவிட, அது மேலும் பொருத்தமாக இருக்கிறது. முழுமையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்வதற்கான சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம். சமத்துவத்துக்கும் நீதிக்கும் தன்னிறைவுக்கும் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த பொன்னாளில் நம் மகத்தான தேசச்சிற்பிகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38716