Tag Archive: சங்காரகன்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19

மூன்று : முகில்திரை – 12 சோணிதபுரியின் கோட்டை தொலைவிலேயே தெரியலாயிற்று. அவர்களை அழைத்துச்சென்ற அசுரக் காவல்படைத் தலைவன் சங்காரகன் பெருமிதத்துடனும் உவகையுடனும் திரும்பி சுட்டிக்காட்டி “சோணிதபுரி! உலகிலேயே மிகப் பெரிய நகரம்” என்றான். அபிமன்யூ புன்னகையுடன் அக்கோட்டையை பார்த்தபடி புரவியில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் புரவியில் வந்த பிரலம்பன் இரண்டடி முன்னால் வந்து “மிகப் பெரிய கோட்டை! இத்தனை தொலைவிலேயே அதன் கற்கள் தனித்தனியாக தெரிகின்றன. ஒவ்வொரு கல்லும் யானை அளவுக்கு இருக்கும் போலும்” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102538

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84

83. படைமுகம் விராடர் தன் அருகே இருந்த பீடத்தை கையால் அறைந்து “சூக்தா, மூடா, உள்ளே வா” என்றார். கதவைத் திறந்து உள்ளே வந்த காவலனிடம் “சாளரக் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென்று உன்னிடம் சொன்னேன் அல்லவா? யார் மூடியது கதவுகளை? என்னை இங்கே சிறையா வைத்திருக்கிறீர்கள்? மூடர்கள், அறிவிலிகள்” என்றார். வீரன் திகைப்புடன் திரும்பிப் பார்த்தபோது அறையின் நான்கு சாளரங்களின் இரு கதவுகளில் ஒன்று மூடியிருப்பதை கண்டான். காற்று வீசி அது மூடியிருக்கிறதென்று தெரிந்துகொண்டு பணிவுடன் “திறந்துவைக்கிறேன், அரசே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101383