Tag Archive: சங்கரர் உரை

சங்கரர் உரை -கடிதம் 8

  அன்புடன்  ஆசிரியருக்கு கிட்டத்தட்ட  நடுங்கும்  மனநிலையோடே  தட்டச்சு  செய்து  கொண்டிருக்கிறேன்.  சங்கரர்  பற்றிய  உரையை  தற்போது கேட்டு  முடித்த  உடனே  எழுதுகிறேன்.  நேற்று  முன்தினம்  நண்பர்  பிரபு  மேற்குலகினைப்  பற்றி ஏதோ பேசிக்  கொண்டிருக்கும்  போது  மேலைச் சிந்தனைக்கும்  இந்திய  சிந்தனைக்கும்  என்ன  வித்தியாசம்  இருக்க  முடியுமென்ற  கேள்வி  எழுந்தது. அக்கேள்வியை எதிர்கொள்ளக் கூட  என் தகுதி  வளர்ச்சியடையவில்லை என்றெனக்குத்  தெரியும்.  இருந்தும்  உடனே  நான்  சொன்னது  “பைபிள்  முதல் வரியிலிருந்தே  பிரிக்கத் தொடங்கி விடுவது  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83322

சங்கரர் உரை -கடிதங்கள் 7

அன்புள்ள ஜெ, வணக்கங்கள் பல. எழுச்சியூட்டும் உரை.  பதிவு செய்து பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. சில வருடங்களுக்கு முன், அத்வைதம் எளிய மக்களுக்குக் கைகூடுவதை ஆந்திராவில் வரதையபாளையத்தில் பார்த்தேன். ஓரளவுக்கு இயற்கையோடு தொடர்பு உள்ளவர்களுக்கு  அது எளிதாகிறதோ என்று தோன்றுகிறது. படித்த இளைஞர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி இருமையை வலியுறுத்துகிறது என்பது சரி.  அத்வைதம் ஏற்புடையதல்ல  என்பது சரியா? அத்வைதம் அனுபவித்து உணர்ந்து, அறியப்பட வேண்டிய ஒன்று.  மேற்கு முறை கல்வியுடன், அனுபவமும் சேர்ந்தால் சாத்தியமே. ஸ்ரீதர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83043

சங்கரர் உரை கடிதங்கள் 6

அன்புள்ள ஜெ சங்கரர் உரையை இதற்குள் சவுண்ட் கிளவுடில் நாலைந்துதடவை கேட்டுவிட்டேன். முதலில் அதன் கட்டுக்கோப்பு எனக்குப்புரிபடவில்லை. சங்கரர் 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் உருவான ஒரு சரித்திரத்தேவைக்காக விஸ்வரூபம் எடுத்ததைப்பற்றிச் சொல்கிறீர்கள். அதற்குமுன் அவர் ஒரு துறவியர் அமைப்பாகவும் ஒரு தத்துவத்தரப்பாகவும்தான் இருந்தார் என்கிறீர்கள். விஸ்வரூபம் எடுத்தபோது உருவானதே அவரைப்பற்றிய கதைகள் என்கிறீர்கள். அந்தக்கதைகளில் எல்லாம் அவர் பின்னாளில் இந்துமதத்தின் மாபெரும் தொகுப்பாளராக உருவாகியபின்னர் உருவான பிம்பத்துக்காக அவரை பக்தியுடன் சேர்க்கும் தன்மை உள்ளது என்கிறீர்கள் கவசம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82830

சங்கரர் உரை கடிதங்கள் 5

    அன்புள்ள ஜெ, சங்கரர் உரையை கேட்டேன். உங்களது எந்த உரையை கேட்டாலும் ஒரு விதமான உவகை எழுந்துவரும். அது ஏன் என்று யோசித்து பார்த்தால் அந்த உவகை அறிதலில் இருந்து பிறக்கும் உவகை என்று புரியும். ஒரு புத்தகத்தை படிக்கும் போது அதில் இருக்கும் சில கருத்துக்களோ அல்லது கற்பனையோ நமக்கு மகத்தான உவகை அளிப்பது வழக்கம். படித்து முடித்து சில நாட்களுக்கு பின் நினைத்து பார்த்தால் அப்படி எது நமக்கு உவகை அளித்ததோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82905

சங்கரர் உரை கடிதங்கள் 4

    ஜெ வணக்கம். சங்கரர் உரை கேட்டேன். மிக சிறப்பானொதொரு அனுபவம். நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைக்காதது சற்று வருத்தமாக இருக்கின்றது. அத்வைத அனுபவங்களில் தென்னிந்தியாவை தொகுக்க அத்வைதம் பயன்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். அத்வைதம் முன்வைத்த பெரும் இந்திய ஆளுமைகளை பற்றி பேசி இருந்தீர்கள். ஒரு நெடிய பாரம்பரியத்தின் தொடர் சங்கிலி தெரிந்தது. மிஸ்டிக்கான அனுபவங்களான கைலாய பார்வை, விவசாயயியின் வயல் அனுபவம் போன்றவை ரொம்ப பர்சனலான அனுபவங்கள். உங்கள் யோகா பற்றிய பார்வைகளை சொல்லும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82825

சங்கரர் உரை கடிதங்கள் 3

அன்புள்ள ஜெயமோகன், சார் வணக்கம், கீதை உரை பற்றி கடிதம் எழுத எண்ணினேன்.முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட வார்த்தைகள் அமையவில்லை. ஆனால். சங்கரர் உரைக்குப்பின் எனது பிரமிப்பை எழுதிவிடுவது என முடிவு செய்தேன். பள்ளி வரலாற்றுப்பாடத்தில் ஆதிசங்கரர் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று கூறினார். இதுவே அத்வைதமாகும் என்று மனப்பாடம் செய்து ஆசிரியர் கூறியதை மனப்பாடம் செய்ததை தவிர வேறொன்றும் தெரியாது.  தங்கள் தளத்தில் தொடர்ந்து வாசிப்பதால் இந்த மாதிரி த்த்துவங்கள் கொஞ்சம் அறிமுகம். ஆனால் இந்த உரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82791

சங்கரர் உரை -கடிதங்கள் 2

  அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு நேற்று கோவையில் சங்கரரைப் பற்றிய உரை மிகப் பயனுள்ளதாக இருந்தது.[சங்கரர் உரை] நீங்கள் கேட்டுக் கொண்டபடியே, அவை ஒத்துழைத்தது என நினைக்கிறேன் (ஒரே ஒரு முறை குறுக்கிட்டு படம் எடுக்க முயன்ற படப்பிடிப்பாளரைத் தவிர). மாபெரும் அறிவுப்பரப்பாக உள்ள அத்வைதத்தை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் திறனுள்ள இளைஞர்கள் உருவாகாமல், பணம் சம்பாதிக்கும் பிராய்லர் கோழிகளாக ஆக்கிவிட்டோம் என்று சொல்கையில் உங்களைப்போலவே அரங்கும் நெஞ்சு விம்மி பதைப்புடன் அமர்ந்திருந்தது. சங்கரரைவிட வித்யாரண்யரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82775

சங்கரர் உரை – கடிதங்கள்

  ஜெ, எப்படி இருக்கிறீர்கள்? இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். சென்ற ஆண்டு நடந்த விஷ்ணுபுர இலக்கியக் கூட்டங்களில் பங்குகொண்ட புதியவர்களுள் நானும் ஒருவன். ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை எனக்கு கடிதம் எழுதுவதற்கான அவசியம் ஏற்படவே இல்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உங்கள் புனைவுலகில் தான் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். அதனுடன் தான் என் உரையாடல். அதன் அடுக்குகளின் விசாலங்களிலிருந்து சாமானியத்தில் வெளிவர முடிவதில்லை. இப்பவும் இந்தக் கடிதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82772

கோவையில் சங்கரர் குறித்து…

[கோவையில் நாளை [3-1-2016] அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி] பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஏன் கோவையை சுற்றியே அமைகின்றன?.கடைசியாக உங்களின் ‘நேர் உரையை’  ‘ஹிந்து தமிழ்’ பதிப்பின் ஆண்டுவிழாவில் நெல்லையில் கேட்டதுதான். அதற்கு பின் இந்தப் பக்கம் வரவேயில்லை. அண்மையில் அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82686