Tag Archive: சங்கச்சித்திரங்கள்

சங்கச்சித்திரங்கள் – விமர்சனம்

மாத்யமம் மலையாள இதழில் நான் தொடராக எழுதிய கட்டுரைகள் சங்கச்சித்திரங்கள். பின்பு அவை ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தன. கவிதா பதிப்பகமும் தமிழினி பதிப்பகமும் அவற்றை நூலாக வெளியிட்டுள்ளன. அக்கட்டுரைகளைப்பற்றி நட்பாஸ் எழுதும் தொடர்கட்டுரை. ஜெ முந்தைய கட்டுரைகள் சங்க சித்திரங்கள்- மாயன் எழுதிய விமர்சனம் சங்க இலக்கியம் கடிதங்கள் பூவிடைப்படுதல் மரபை அறிதல் சங்க காலமும் இந்திய சிந்தனை மரபும் சங்க இலக்கியம்- கடிதங்கள் குருகு கடிதங்கள் அந்தக்குயில் குருகு

Permanent link to this article: https://www.jeyamohan.in/26456

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள். மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11369

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் – இகாரஸ் பிரகாஷ்

தமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன் சிக்கல்களை நானும் உணர்ந்திருக்கிறேன். ஸ்பெஷல் மசாலா தமிழில் எழுதப்பட்ட ஒரு சங்கப்பாடலைப் படிக்க, ஸ்பெஷல் சாதா அல்லது சாதா தமிழில் புரிந்து கொள்ள ஒரு யத்தனம் தேவைப்படுகிறது. அல்லது மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அது தான் சங்கப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்களிடம் கேட்டுத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/458