Tag Archive: சங்கசித்திரங்கள்

அழிவின்மையின் முத்துக்கள்

எங்கெல்லாம் முத்து பிறக்கும் என்று சிற்றிலக்கியப்பாடல் ஒன்று சொல்கிறது சங்கில், கழையில், கழையினில், செஞ்சாலியினும், இப்பியின், மீனில், தடியில், கிரியில், கரிமருப்பில், தடந்தாமரையின் ஆவெயிற்றின் மங்குல், கதலி, கழுகு, கற்பின் மடவார் களத்தின், குருகின் அந்தின், மதியின், அரவில், கிடங்கர் என வகுத்த இருபான் தரு முத்தம் என் சிறுவயதில் அழகிய எதையுமே முத்து எனச்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். புளியங்கொட்டையைக் கூட புளியமுத்து என்றுதான் சொல்வார்கள்.- குனிமுத்து. என்ற அழகிய சிறு விதை ஒன்றை நாங்கள் விளையாடுவதற்காகப் பொறுக்குவோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41245

சங்கசித்திரங்கள்

ஒரு படைப்பின் சுவையை நாம் நம் சொந்த வாழ்வின் நுட்பமான அனுபவங்களின் வாயிலாக அறிதலே அழகு. சங்கப் பாடல்கள் நோக்கிய நம் அணுகுமுறையும் இத்தகையதாகவே இருக்கட்டும் என்று வலியுறுத்துபவர் ஜெயமோகன். சங்கசித்திரங்கள் பற்றிய ஒரு மதிப்பீடு

Permanent link to this article: https://www.jeyamohan.in/30132

சங்கசித்திரங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சங்கசித்திரங்கள் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய படைப்பாளிகளைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் . அது புத்தகமாக வெளி வந்துள்ளதா? பதிப்பகத்தின் பெயர் தெரிவித்தால் என் மலையாள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த உதவியாக இருக்கும் அன்புடன் ராமகிருஷ்ணன் அன்புள்ள ராமகிருஷ்ணன் சங்கசித்திரங்கள் முதலில் மலையாள வார இதழ் மாத்யமத்தில் தொடராக வெளிவந்தது. நூல்வடிவம்பெறவில்லை தமிழில் விகடனில் வெளிவந்தபின் கவிதா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29109

சங்கசித்திரங்கள்-விமர்சனம்

கவித்துவத்தை விளக்க இயலாது. கோடிட்டுக் காட்டத்தான் முடியும். சங்க இலக்கியப் பாடல்கள் அந்த வகைதான். பள்ளிகளில் முக்கி முக்கி மனப்பாடம் செய்த வெகு சில பாடல்கள் மதிப்பெண்களுக்காகப் படித்ததுதான். அதன் அர்த்தம் வாத்தியார் சொல்லிக் கொடுத்ததுதான். ஆனால் இப்போது வாழ்வை உணர முடிகிற வயதில் இந்தப் பாடல்கள் அர்த்தம் செறிந்தவையாகின்றன. இப்போது அர்த்தம் நாம் நமக்குக் கொடுத்துக் கொள்கிற அர்த்தம். இந்தப் பாடலின் வரிகளைப் பாருங்கள்…தற்காலத் தமிழில் எழுதிக் கொடுக்கிறார் ஜெயமோகன். மாயன் எழுதிய விமர்சனம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/23577

கேள்வி பதில் – 35

சங்க(ச்) சித்திரங்களில் உங்கள் சுயபுராணமே அதிகம், உண்மைப் பொருள் கடைசியில் கொஞ்சமே கொஞ்சம் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். சங்கப்பாடல்களின் ‘பொருள்’ என்ன என்ற கேள்வியுடன் பதவுரை பொழிப்புரை படிக்கவேண்டுமென்றால் தமிழில் முன்னோடி அறிஞர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான பெரும் நூல்கள் உள்ளன. ஆய்வு என்றால் அனந்தராம அய்யர், அவ்வை துரைசாமிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் நூல்கள் உச்சங்களைத் தொட்டுள்ளன. இத்துறையில் தமிழில் நிகழ்ந்துள்ள அறிவார்ந்த செயல்பாடு தமிழ்வாசகன் பெருமை கொள்ளத்தக்கது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96