Tag Archive: சக்கைப்புளிக்கறி

சக்கைப்புளிக்கறி

அ.கா.பெருமாள் ஒருமுறை சொன்ன உண்மைச்சம்பவம் இது. நாகர்கோயிலில் நாற்பதுகளில் ஒரு விதவை அம்மாள் ஓட்டல்மாதிரி ஒன்று வைத்திருந்தார்கள். காலணாவுக்குக் கஞ்சி. பிரவர்த்தியார் ஆபீஸ் முன்பக்கம் என்பதனால் ஏழைபாழைகள் வந்து கஞ்சிகுடித்துச் செல்வார்கள். காலணா கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள காணத் துவையல் கட்டுப்படியாகாது. மேலும் முடிந்தவரை முதலெடுக்க முயலும் குமரிமாவட்ட மக்களிடம். ஆகவே எப்போதுமே அங்கே சக்கைப்புளிக்கறிதான். சக்கை என்றால் பலா. தேங்காயை புளி வைத்து அரைத்து பலாக்காயை முள்ளைமட்டும் சீவிவிட்டு அப்படியே வெட்டிப்போட்டு வைக்கப்படும் நீர்த்த குழம்பு அது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70047