Tag Archive: கௌண்டின்யபுரி

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–72

பகுதி ஏழு : நீர்புகுதல் – 1 மந்தரம் எனும் சிற்றூரில் புறங்காட்டில் அமைந்த கரிய சிறு பாறையில் இளைய யாதவர் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து வான் நோக்கி படுத்திருந்தார். விண்மீன்கள் நிறைந்த கரிய வானம் அவர்மீது வளைந்திருந்தது. விண்மீன்கள் சில துலங்கியும் பல வான் என மயங்கியும் அவர் மேல் படர்ந்திருந்தன. சற்று அப்பால் சாலமரத்தின் வேர்ப்புடைப்பொன்றில் அமர்ந்திருந்த ஸ்ரீகரர் தாழ்ந்த குரலில் உணர்ச்சிகள் ஏதுமில்லாத அமைதியுடன் சொன்னார். யாதவரே, தங்களைத் தேடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132051/

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48

[ 8 ] அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி கங்கைத்துறை நோக்கிய சாலையில் தனியாக சென்று கொண்டிருக்கையில் தன் உடல் மெல்ல இறந்து ஊன் பொதியென ஆகி புரவி மேல் படிவதை சிசுபாலன் உணர்ந்தான். கைகால்கள் ஒவ்வொன்றும் உடலிலிருந்து உருகும் அரக்கால் ஆனவை போல் விடுபட்டு குழைந்து பரந்து கொண்டிருக்கும் உணர்வு எழுந்தது. ஒரு கட்டத்தில் தன்னிலை அழிந்து புரவியின் கழுத்திலேயே முகம் பரப்பி கைகள் அதன் விலாவில் இருபுறமும் தொங்க நினைவிழந்து கிடந்தான். பெருநடையிட்டுச் சென்ற புரவி அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87678/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56

பகுதி பத்து : கதிர்முகம் – 1 கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட கழிகளால் முழக்கி இடியோசை எழுப்பினர். நகர்மேல் பனிப்பரவல் போல இறங்கிய ஓசை உண்டாட்டுக்கு அறைகூவியது. நீராட்டு விழவு முடிந்து ஈர உடையுடன் இல்லம் திரும்பி இன்னுணவு உண்டு சாவடிகளிலும் மண்டபங்களிலும் திண்ணைகளிலும் விழுந்துகிடந்து விழிமயங்கிக் கொண்டிருந்த மக்கள் அவ்வோசை கேட்டு எழுந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77241/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 55

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 6 செந்நிறத் தலைப்பாகையில் கொக்குச் சிறகு சூடிய முதிய நிமித்திகர் மேடைமேல் ஏறி நின்று வெள்ளிக்கோலை இடமும் வலமும் என மும்முறை சுழற்றியபோது முரசு மேடையில் அமர்ந்திருந்த பெருமுரசின் ஒளிரும் செவ்வட்டத் தோல்பரப்பின்மேல் கோல்கள் விழ அது சினம்கொண்ட மதகளிறென வயிறதிர்ந்து உறுமியது. கௌண்டின்யபுரியின் மக்கள்திரள் மெல்ல அமைதியடைந்தது. வரதாவின் அலைகளின் ஓசையும் கொடிகள் காற்றில் படபடக்கும் ஒலியும் ஆங்காங்கே எழுந்த அடக்கப்பட்ட தும்மல்களும் மூச்சொலிகளும் படைக்கலன்களின் உலோகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77221/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 2 கோடைமுதிர்ந்து முதல்மழை எழுந்ததும் வரதாவில் புதுவெள்ளம் வரும். விந்தியனின் மேல் விழும் முதல் மழையின் தண்மை சில நாட்களுக்கு முன்னரே வரதாவின் நீர்ப்பெருக்கில் கைதொட்டால் தெரியும் என்பார்கள். முதுகுகர் கர்க்கர் ருக்மிணியை மடியிலமர்த்தி படகோட்டியவர். சிற்றிளமைநாளில் ஒருமுறை அவள் கையைப் பிடித்து ஒழுகும் நீரில் வைத்து “கண்களை மூடி நோக்குங்கள் இளவரசி” என்று சொன்னார். “வெப்பு நோய் உளதா என ஐயம்கொண்டு குழந்தையை தொட்டு நோக்கும் அன்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77025/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 1 வரதா என்ற பெயர் ருக்மிணிக்கு என்றுமே உளம் நிறையச் செய்யக்கூடியதாக இருந்தது. சிற்றிளமையில் அன்னையின் ஆடை நுனியைப் பற்றாமல் அவளால் படகில் அமர்ந்திருக்க முடிந்ததில்லை. அணிப்படகு அலைகள் மேல் எழுந்தமர்ந்து செல்கையில் அவள் ஆடையின் பொன்னூல்பின்னலை அள்ளி தன்மேல் சுற்றிக் கொண்டு, அதன் நூல்சுருளை விரலில் சுருட்டி வாயில் கவ்வி நின்று விழிவிரித்து வரதாவின் நீர்ப்பெருக்கை நோக்குவாள். படகின் அசைவு மிகுகையில் திரும்பி அச்சத்துடன் அன்னையை அணைத்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77023/