Tag Archive: கோவை

கோவை சொல்முகம் கூடுகை – ஜுன் 2019

  அன்புள்ள ஜெ., திட்டமிட்டபடி கோவை சொல்முகம் வாசகர் குழுமம் வரும் ஞாயிறு, ஜூன் 30ம் தேதியன்று காலை சரியாக 10 மணிக்கு கூடுகிறது. இம்மாத அமர்வில் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் முன்வைத்து விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெறும். அருகிலிருக்கும் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ள அழைக்கிறோம். தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: நரேன் – 7339055954 சுஷீல் – 96002 74704  

Permanent link to this article: https://www.jeyamohan.in/123378/

திருக்குறள் உரையாற்றுகிறேன், கோவையில்

    வரும் 14,15, 16 தேதிகளில் நான் கோவையில் திருக்குறள் பற்றிப் பேசுகிறேன். மூன்றுநாட்கள் வரிசையாக மூன்று உரைகள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக. திருக்குறள் பற்றிய உரைகளைப் பார்க்கும்போது வியப்பூட்டும் ஒன்று தோன்றியது, அது ஓர் இலக்கியநூல். ஆனால் புதியகாலகட்டத்தில் இலக்கியவாதிகள் மிகக்குறைவாகவே அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதை ஒரு பண்பாட்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டமையால் அறிஞர்கள், ஆய்வாளர்கள் அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள். அரசியலாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப பேசிப்பேசி மேற்கொண்டு எவரும் அதைப்பற்றிப் பேசாமலாக்கிவிட்டிருக்கிறார்கள் இலக்கியவாதியாக குறளைப்பற்றிப் பேசலாமென நினைக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94401/

கோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா

  நான் தினமலரில் அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ தினமலர் வெளியீடாக நூலாக வருகிறது அதன் வெளியீட்டுவிழா வரும் மே மாதம் 8 ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கிறது. கோவை நன்னெறிக்கழகம் அதை ஒருங்கிணைக்கிறது இடம்  சரோஜினி நடராஜ் கலையரங்கம் கிக்கானி பள்ளி கோவை நேரம் மாலை 6 மணி முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி நூலை வெளியிடுகிறார் அனைவரையும் வரவேற்கிறேன்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/87569/

கோவையில் சங்கரர் குறித்து…

[கோவையில் நாளை [3-1-2016] அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி] பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஏன் கோவையை சுற்றியே அமைகின்றன?.கடைசியாக உங்களின் ‘நேர் உரையை’  ‘ஹிந்து தமிழ்’ பதிப்பின் ஆண்டுவிழாவில் நெல்லையில் கேட்டதுதான். அதற்கு பின் இந்தப் பக்கம் வரவேயில்லை. அண்மையில் அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82686/

கீதை உரை கோவை -கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் தற்சமயம் கோவையில் கீதைப்பேருரை ஆற்றி வருவதை வலைத்தளத்தின் மூலம் அறிந்தேன்.நேரில் வந்து கேட்பதற்கு பொருளாதார வசதியும்,சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை.உங்களின் எழுத்துக்களை சமீபகாலங்களாக வலைத்தளத்தில் படிப்பதே மற்றவர்களின் தயவினால்தான்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் சமீப காலங்களாக உங்களின் சொற்பொழிவுகள் எல்லாம் -கனடா,அமெரிக்காவில் ஆற்றியது உட்பட- “ஒலி” வடிவத்தில் தான் தங்கள் தளத்தில் வருகிறது,இதன் உரைநடை வடிவத்தை (கீதைப்பேருரை உட்பட) கொடுத்தால் மிகுந்த வசதியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.சற்று பரிசீலிக்கவும். நன்றி. அன்புடன், அ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81646/

இன்று முதல் கீதை உரை

கோவையில் இன்று மாலை ஆறுமணிக்கு கிக்கானி பள்ளி வளாகத்தில் கீதையுரை ஆற்றுகிறேன். நம் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் கடலூர்,சென்னை வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீதை அந்தக் களத்திலேயே கிடைப்பதாக. பெரும்பாலானவர்கள் வரமுடியாத சூழலிலும் முன்னரே முடிவுசெய்தமையால் இதை நடத்திவிடலாமென நினைத்தோம். ஆர்வமுள்ளவர்கள் வரலாம். தொடர்ச்சியாக நான்கு நாட்கள். இத்தகைய உரையை நான் இதுவரை ஆற்றியதில்லை. உரை என் வெளிப்பாட்டு வடிவமும் அல்ல. ஆர்வமுள்ள முகங்கள் முன்னால் இருந்தால் என்னால் பேசிவிடமுடியுமென நம்புகிறேன். தத்துவவாதியாக ஆன்மீகவாதியாக என் தெளிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81442/

கோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்

கோவையில் தொடர்ந்து நான்கு நாட்கள் கீதையைப்பற்றி ஓரு தொடர்சொற்பொழிவை ஆற்றவிருக்கிறேன் மிக எளிமையான ஒரு கேள்வியே இவ்வுரைக்கு ஆரம்பமாக அமைந்தது. அரவிந்தர், விவேகானந்தர் முதல் திலகர் வரை, காந்தி முதல் வினோபா பாவே வரை நவீன இந்தியாவின் சிற்பிகள் அனைவருக்குமே கீதை மகத்தான ஞானநூலாக ஆகி வழிகாட்டியது எப்படி? நாராயணகுரு, சகஜானந்தர் முதல் நித்யசைதன்ய யதி, முனி நாராயணப்பிரசாத் வரை வரை அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த ஞானிகளின் குரலாக ஆக முடிந்தது? பாரதி, குவெம்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81438/

கோவையில் கீதை உரை

சென்றமுறை கோவையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கீதையைப்பற்றி விவாதம் எழுந்தது. கீதை இந்துஞானமரபின் மையநூலாக ஆனவிதம், அதன் இன்றைய முக்கியத்துவம் பற்றி. அப்போது ஒரு நண்பர் பொதுவாக கீதையை முழுக்கமுழுக்க பக்திநோக்கில் பார்க்கும் பார்வையே எங்கும் பரவலாக உள்ளது என்றும் அதன் வரலாற்றையும், தத்துவத்தையும் பேசுவதேயில்லை என்றும் சொன்னார் என் கோவை நண்பர் நடராஜன் ’நாமே அதைப்பேச ஓர் அரங்கை உருவாக்கினால் என்ன?” என்றார். வேடிக்கையாக ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் ‘சரிதான் பேசித்தான் பார்ப்போமே’ என்னும் இடத்தைச் சென்றடைந்தோம்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81434/

ஜெயகாந்தன் நினைவஞ்சலி

ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலிக்கூட்டம் நாளை கோவையில் ஏற்பாடாகியிருக்கிறது. இதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன். இடம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம் நாள் 12- 5-2015 ஞாயிறு மாலை 6 மணி பேச்சாளர்கள் கவிஞர் சிற்பி ‘விஜயா’ வேலாயுதம் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ‘இசைக்கவி’ ரமணன் ‘மரபின்மைந்தன்’ முத்தையா

Permanent link to this article: https://www.jeyamohan.in/74043/

ஒளிவிடும் கோவை

விண்ணில் நாநூறு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழகத்தின் சித்திரம். அதிலேயே தமிழகத்தில் உள்ள பணப்புழக்கம் தெரிகிறது. ஆச்சரியம்தான் விண்வெளியில் இருந்து தமிழகம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/71141/

Older posts «