Tag Archive: கோவை வாசகர் சந்திப்பு

ஒரு பதிவு

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் கோவை சந்திப்பு பற்றி ஒரு சிறிய கட்டுரையை எனது வலை பூவில் பதிவு செய்திருக்கிறேன். நேரம் இருப்பின் பார்க்கவும். http://ippadikkuelango.blogspot.com/ அன்புடன் இளங்கோ அன்புள்ள இளங்கோ உங்கள் பதிவைப்பார்த்தேன். நன்றி. பேசப்பட்ட விஷயங்கள் என் இணையதளத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் விஷயங்கள். சொல்லப்பட்ட பதில்களும் இவ்விணையதளத்தில் சொல்லப்படுவன. சமயங்களில் திடீரென உள்ளே வந்தால் ஒரு குழப்பம், புரியாமை ஏற்படலாம். ஆனால் அது சில நாட்களில் விலகிப்போகும் ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/6414

கோவை,வா.மணிகண்டன் மேலும்…

டியர் சார், ஒரு நீண்ட பதிலுக்கு நன்றி. ஜெயமோகனை விஷ்ணுபுரம் வழியாகவோ அல்லது கொற்றவை வழியாகவோதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழின் சிறந்த படைப்பாளி ஒருவரை வேறு முறைகளில் எதிர்கொள்ளுதல் வெற்று அரசியலாகிவிடலாம்.  ஆனால் வெறும் இலக்கிய படைப்பு சார்ந்த செயல்பாடுகளில் மட்டும் நீங்கள் இயங்குவதில்லை. மத ரீதியான விவாதங்களை நீங்கள் முன்னெடுக்கிறீர்கள், இலக்கிய அரசியல் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள். சித்த மருத்துவம் தொடங்கி இந்திய தத்துவ மரபியல் வரை  பல்வேறு தளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6397

மூன்று கேள்விகள்

டியர் சார், வணக்கம். நாகர்கோயிலை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களை சனிக்கிழமையன்று கோவையில் சந்தித்தது மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அளிப்பதாக இருந்தது. குறிப்பாக ஹோட்டல் அறையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்க தேசத்தில் இருந்து உருவாகி வந்திருக்கும் விமர்சனக் கோட்பாடுகள், நகுலனின் ‘ராமச்சந்திரன்’ கவிதையில் அமெரிக்க விமர்சன சாராம்சத்தோடு சு.ரா கொண்டிருந்த பார்வை, நாவல் உள்ளிட்ட இலக்கிய படைப்புகளின் வடிவம், யுவனின் மணற்கேணி வாசகனுக்குள் உருவாக்கும் சித்திரங்கள், கவிதையின் வடிவத்தில் நாம் இன்று அடைந்திருக்கும் புள்ளியியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6354

கோவையில்…

கோவைக்கு சும்மா பேசிக்கொண்டிருப்பதற்காகவே ஒருநாள் முன்னதாகக் கிளம்பிச்சென்றேன். ஜனவரி இருபத்தொன்றாம்தேதி இரவு எட்டரை மணிக்கு ரயில். ஆனால் என் மின்பயணச்சீட்டில் நேரம் இருக்கவில்லை. எட்டு என்று நினைத்துக்கொண்டேன். பகலெல்லாம் வேலை. துணிகளை இஸ்திரி போட்டேன். எனக்கும், பையனுக்கு நான்குநாட்களுக்கும். பெட்டிக்குள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன். அத்துடன் பல்வேறு விஷயங்களை எழுதிக்கொடுக்கவேண்டியிருந்தது. ஒரு சினிமாவுக்கு, இரு மலையாளச் சிற்றிதழ்களுக்கு. மலையாளத்தில் இன்று சிற்றிதழுக்கான தேவையே இல்லை என்று மலையாளிகள் எண்ணினாலும் பிடிவாதமாக சிலர் நடத்துகிறார்கள். அவர்களை ஆதரிப்பது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6358

கோவை சந்திப்பு இன்று…

கோவையில் [ஜனவரி 23 , 2010 ]இன்று நான் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  நாஞ்சில்நாடன் மரபின்மைந்தன் முத்தையா பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்கள். இடம் : சன்மார்க்க சங்கம் , தேவாங்கர் பள்ளி அருகில் , (அர்ச்சனா தர்ச்சனா தியேட்டர் ரோடு) ,பூமார்க்கட் ,வடகோவை . மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி 93444 33123 / 9750985863 

Permanent link to this article: https://www.jeyamohan.in/6328

கோவை சந்திப்பு

கோவையில் ஜனவரி 23 , 2010 அன்று நான் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ் இது. நாஞ்சில்நாடன் மரபின்மைந்தன் முத்தையா பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்கள். இடம் : சன்மார்க்க சங்கம் , தேவாங்கர் பள்ளி அருகில் , (அர்ச்சனா தர்ச்சனா தியேட்டர் ரோடு) ,பூமார்க்கட் ,வடகோவை . மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி

Permanent link to this article: https://www.jeyamohan.in/6129