Tag Archive: கோவை ஞானி

கோவை ஞானியின் இணையதளம்

அன்புடையீர், தமிழறிஞர் கோவை ஞானி ஐயா அவர்கள் மார்க்சியம் – மெய்யியல், தமிழ்மெய்யியல் – தமிழ் மார்க்சியம் , இலக்கியத்திறனாய்வு உள்ளிட்ட பலதளங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இயங்கிவருபவரென்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள். அரிய முயற்சியில் அவருடைய படைப்புகள் அனைத்தும் ஒளி நகல்(Scan) செய்யப்பட்டு இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தைத் தங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறேன். இணையதள முகவரி : http://kovaignani.org/ அன்புடன், கோவை ஞானி(கி. பழனிச்சாமி, மாதவன் பழனிச்சாமி)க்காக, க. ஜவஹர்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/41839

அறம் – ஒரு விருது

அறம் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது இந்த விருது. குழும நண்பரான எம்.ஏ.சுசீலா மொழியாக்க விருதை தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் மொழியாக்கத்துக்காக பெறுகிறார். நான் பெருமதிப்பு கொண்டுள்ள கவிஞர் அபி இவ்விருதின் ஒருங்கிணைப்பாளர். இவ்விருதின் முக்கியமான மகிழ்ச்சி என்பது நான் என் ஆசானாக எண்ணும் கோவை ஞானி அவர்களுக்கு சிறந்த தமிழறிஞருக்கான விருது அளிக்கப்பட்டிருப்பதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38210

தமிழ்நேயம் அறக்கட்டளை

கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை நண்பர்களுக்கு வேண்டுகோள் 13-06-2013 கோயபம்புத்தூர், காந்திபுரம் சிபி ஐ.ஏ.எஸ். அகாதமியில் எழுத்தாளர்கள், நண்பர்கள் பலர் கூடி தமிழ் நேயம் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்க வேண்டுமென்றும் அதன் சார்பில் சில முக்கியமான பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானித்தோம். கூட்டத்தில் பேராசிரியர் கி. நாச்சிமுத்து, அறிஞர் செ. நாராயணசாமி, முனைவர் கோ. ஆறுமுகம், கவிஞர். அறிவன், பாவலர் இரணியன், நந்தினி பதிப்பக உரிமையாளர் திரு. வேனில், முனைவர் வே. சுகுமாரன், எழுத்தாளர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37118

ஞானிக்கு இயல் விருது…

2009 ஆம் வருடத்துக்கான கனடாவின் ‘இயல்’ விருது கோவை ஞானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்றுவரை குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகள் எதையும் பெறாத ஞானியை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலம் இயல் தன்னையும் கௌரவப்படுத்தியிருக்கிறது. அதன் கடந்த கால பிழைகளில் இருந்து அது வெளிவர இது ஒரு வாய்ப்பாக அமையட்டும். ஞானிக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.   கி.பழனிச்சாமி என்ற ஞானி ஒரு தமிழாசிரியர். எழுபதுகளில் திரண்டெழுந்த தீவிர இடதுசாரி அமைப்புகளில் இருந்து உருவாகி வந்தவர். புரட்சிகர மார்க்ஸிய சிந்தனையாளரான எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6123

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

மார்க்ஸிய அறிஞரு,ம் தமிழியக்கவாதியுமான ‘ஞானி’ வெளியிட்டுவரும் ‘தமிழ்நேயம்’ தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் ‘கொற்றவை’ புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. [ஜெயமோகன்: ‘கொற்றவை’ படைப்பும் பார்வையும்] ”ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கண்ணகி பற்றிய கதை உருவாகி நாளடைவில் தமிழ் சமூகத்தின் தேவைகள் மற்றும் உணர்வுகளை உள்வாங்கி மேலும் திரண்டு இளங்கோவடிகள் மூலம் அற்புதமான காப்பிய வடிவம் பெற்று சிலம்பின் கதையாகியது. நம் காலத்திலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/232

கேள்வி பதில் – 43

எதையுமே படைக்காமல், கர்நாடக இசைக்கு சுப்புடு போல், தமிழ் இலக்கியத்தில், விமர்சகர்களாக மட்டும் அறியப்பட்டு எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியவர்கள், எழுத்தாளர்களால் பெரிதும் பயப்படப்படுகிறவர்கள்/மதிக்கப்படுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். வெங்கட் சாமிநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் முழுமையாகவே திறனாய்வாளர்களாகச் செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள். ஞானி சில கவிதைகள் எழுதிப்பார்த்த முக்கியமான திறனாய்வாளர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதனூடாக உன்னதத்தை [sublime] உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்பட்டவர் வெங்கட் சாமிநாதன். இப்போது அவரது எல்லா ஆக்கங்களும் கவிதா, காவ்யா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100