Tag Archive: கோமதி ஆறு

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1

1. காற்றின் களி இமயத்தின் அடிவாரத்தில் கோமதி நதிக்கரையில் அமைந்த கோதவனம் என்னும் காட்டில் கிளைவிரித்துப் பரந்து சிறுபசுஞ்சோலைகளைச் சூடி நின்ற சாலமரங்கள் நான்கை ஒன்றுடன் ஒன்று மூங்கில்களால் கட்டி தளமிட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட ஏழு அறைகள் கொண்ட குடிலில் பாண்டவர்கள் தங்கியிருந்தனர். அடுமனையும் மகளிர்அறையும் தனியாக வேறு இரு சாலமரங்களில் இருந்தன. அவற்றுக்குச் செல்ல மூங்கில்களால் ஆன பாலம் இருந்தது. சுற்றிலும் இருந்த புதர்க்காட்டைத் திருத்தி அழகிய மலர்த்தோட்டத்தை நகுலனும் சகதேவனும் உருவாக்கியிருந்தனர். கோமதிக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94917