Tag Archive: கோதாவரி

சூரியதிசைப் பயணம் – 6

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில் செந்நிறநீர் நிறைந்தோடும். எட்டாவது படிக்கையில் முதல்முறையாக தாமிரவருணியை பார்த்தேன். இருமடங்கு பெரிய நதி. என் மனம் அன்றுகொண்ட விம்மிதத்தை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதன்பின் காவேரியைப்பார்த்தபோது தாமிரவருணி சிறியதாகியது. அதன்பின் கிருஷ்ணையையும் கோதாவரியையும் பார்த்தபோது நதி என்ற கற்பனையையே மாற்றியமைத்தேன். கிருஷ்ணா நதி மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71715

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 3 துரியோதனன் ரதத்தில் ஏறிக்கொண்டதும் பின்னால் வந்த கர்ணன் ரதத்தூணைப் பிடித்தபடி சிலகணங்கள் விழிசரித்து ஆலய வாயிலை நோக்கி நின்றான். பின்னர் வலக்காலை தேர்த்தட்டிலேயே தூக்கிவைத்து ஏறிக்கொண்டு அமராமல் நின்று கொண்டான். அவன் ரதத்தில் ஏறுவதும் இறங்குவதும் பீஷ்மரைப்போல் இருப்பதாக துரியோதனன் எப்போதும் எண்ணிக்கொள்வதுண்டு. குழப்பம் கொள்கையில் கைகளை மார்பில் கட்டி தலையை சற்றே சரித்து தொலைவில் விழிநாட்டி நிற்பதும் பீஷ்மரைப்போலவே. துரியோதனன் “மாளிகைக்கா?” என்று கேட்டதுமே அவன் அகத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68760

கோதையிடமிருந்து பிரிந்து…

அன்புள்ள ஜெ,நீரின்றி அமையாது உலகு என்பது வாக்கு. பெரு நாகரிகங்களும், பேரரசுகளும், நதிக்கரையை ஒட்டியே வளர்ந்துள்ளன. வேளாண் பெருமக்கள் நீர் வசதிக்காக நதிக்கரைகளைத் தேர்ந்தேடுத்துக்கொண்டார்கள் என்ற கோட்பாடு இருந்தாலும், மற்ற சமூகங்களும் குறிப்பாக அந்தணர்கள் கூட நதிக்கரையை ஒட்டியே தங்கள் இருப்பிடங்களை வகுத்துக்கொண்டார்கள். நீங்கள் கடந்த சில வாரங்களாக கோதாவரி நதிக்கரையில் வசித்து வருவது தெரியும். முன்னமே நீங்கள் நதிக்கரையில் வாசித்திருக்கக்கூடும். கோதாவரி போன்ற பெரு நதிக்கரை வாசம் உங்களில் எத்தகைய மாறுதல்களை உண்டாக்கி இருக்கிறது? ஏதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16722

கோதையின் தொட்டிலில்

இந்த ஊரின் பெயர் எலமஞ்சரி லங்கா. லங்கா என்றால் ஆற்றைடைக்குறை என்று பொருள். கோதாவரி ஒரு மூன்று பெரும் பெருக்குகளாக இங்கே ஓடுகிறது. ஒவ்வொரு பெருக்குக்கும் நடுவே மிகப்பெரிய வண்டல்திட்டுக்கள். கோதையை நோக்கி இரு ஆறுகள் வந்து கலக்கின்றன. அந்த இரு ஆறுகளும் வலமும் இடமும். கோதையின் மூன்று பெருக்குகளும் நேர்முன்னால். கோதையின் உயர்ந்த கரைமேல் நீர்வெளியை நன்றாகப்பார்க்கும்படி தூண்கள்மேல் கட்டப்பட்ட ஓய்வுமாளிகை இது. பகலில் வெளியே வெள்ளி அருவி போல பொழிந்துகொண்டிருந்தது வெயில். கோதாவரியின் நீர்வெளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13588

ஓர் இடம்

நண்பர்களை பொறாமைப்படச்செய்யும் ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தால் இந்த குறிப்பு. இன்று காலை ஆந்திரத்தில் பீமாவரம் வந்து அங்கிருந்து காரில் ஒருமணிநேரம் பயணம் செய்து கோதாவரியின் கரையில் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்துசேர்ந்தேன். கூட தனசேகரும் உண்டு. இந்த இடம் ஒரு மாபெரும் தென்னந்தோப்பு. அதனுள் கோதாவ்ரியை ஒட்டி ஒரு பெரிய விருந்தினர் மாளிகை. நான்கு தூண்கள்மேல் அந்தரத்தில் அமைந்தது. இரு குளிர்சாதன படுக்கையறைகள். சமையலறை. நான்கு பக்கமும் உப்பரிகைகள். ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13567

கோதையின் மடியில் 4

காகா காலேல்கர் காந்தியின் சீடர். சுதந்திரப்போராளி. தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்பது இயற்பெயர். கர்நாடகத்தில் பெல்காமில் பிறந்த காலேல்கர் ஒரு மராட்டியர். சர்வோதயா இதழாசிரியராக இருந்தார். இந்திய மொழிகளில் பயணக்கட்டுரைகள் எழுதியவர்களில் காகா காலேல்கரே முதன்மையானவர். கிட்டத்தட்ட அறுபது நூல்கள் எழுதியிருக்கிறார்.மராத்தி. இந்தி, குஜராத்தி மொழிகளில் எழுதிய காலேல்கர் இந்தியாவுக்குள்ளேயே சுற்றியலைந்திருக்கிறார். இந்தியாவின் அறியப்படாத உள்கிராமங்களின் நிலக்காட்சிகளையும் மக்களையும் அழியா ஓவியங்களாக எழுதினார். இந்தியாவின் முக்கியமான நீர்நிலைகள் மற்றும் நதிகளில் நீராடியபடி அவர் சென்ற நீண்ட பயணத்தைப்பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9109

கோதையின் மடியில் 3

நாங்கள் தங்கிய இடம் பட்டிசீமா. அக்டோபர் முப்பதாம் தேதி அதிகாலை ஐந்தரைக்கே கிருஷ்ணனும் சர்மாவும் சிலரும் எழுந்துகொள்ளும் ஒலி கேட்டது. இரவில் நாங்கள் தூங்க பன்னிரண்டுமணி ஆகியது. எனவே இன்னும் கொஞ்சநேரம் தூங்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் கோதாவரியில் ஒரு காலையை இழக்க மனமில்லை. மூச்சுப்பிடித்து எழுந்துவிட்டேன். நல்ல குளிர் இருந்தது. காற்று ஈரமாகச் சுழன்றடித்தது. மாடியில் வசந்தகுமார் வழக்கம்போல புகை இழுத்துக்கொண்டிருந்தார். படகிலே நீரின் நிறம் இப்போது கலங்கலாக இல்லை. அல்லது காற்றுவெளியின் கலங்கல்நிறத்தில் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9091

கோதையின் மடியில் 2

ஒரு பயணத்தின் முதல் சில மணிநேரங்களில் பலவிதமான அலை பாய்தல்களுடன் இருக்கிறது மனம். வசதிகளை கணக்கிடுவதும் வசதிப் படுத்திக் கொள்வதுமாக மேல்மனம். புதிய அனுபவங்களுக்கான கிளர்ச்சி நிறைந்த ஆழ்மனம். மெல்ல மெல்ல பறவைகள் மரத்தில் அணைகின்றன. கலைசல் ஒலிகள் அடங்குகின்றன. ஆமாம், இதோ இங்கே இருக்கிறேன், இதுதான், இதுவேதான் என்று மனம் சொல்லிக் கொள்ள ஆரம்பிக்கிறது. ஒரு நிறைவும் இனிய களைப்பும் உருவாகிறது. அகம் கட்டுகளை அவிழ்க்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கை சார்ந்த எல்லாம் மிக எளிமையானவையாக சர்வசாதாரணமானவையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9080

கோதையின் மடியில் 1

வட இந்தியாவுக்குப் பயணம் செல்லும்போது வழியில் இருபெரும் பாலங்கள் வரும். ஒன்று கோதாவரி இன்னொன்று கிருஷ்ணா. இவ்வளவுபெரிய நதிகளா என்று மனம்பிரமித்து உறைந்து நிற்க தண்டவாளத்தின் கர்ஜனையாக அந்தக்கணங்கள் நினைவில் நீடிக்கும். தமிழகத்தில் நமக்கு பெரிய நதிகள் இல்லை. இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் நீர் ஓடுவதில்லை. கொள்ளிடம்தான் நாம் காணும் அதிகபட்ச அகலம்கொண்ட நதி. அது ஒரு பாலைவனக்கீற்று.கேரளத்தில் பெரியாறு ஒன்றுதான் பெரிது. வேம்பநாட்டுக்காயலின் மேல் ரயில்பாலம்செல்லும்போது நீர்வெளியை காணமுடியும். ஆனாலும் அவையெதுவும் இந்த இருபெரும் நதிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9052

கோதையின் மடியில்…

இன்று இரவு நண்பர்களும் எழுத்தாளர்களுமாக 17 பேர் கூடி ஆந்திராவுக்குச் செல்கிறோம். ரயிலில் ராஜமுந்திரி சென்று அங்கிருந்து கோதாவரியை அடைகிறோம். கோதாவரியில் ஒரு படகில் ஒருநாள் முழுக்க பயணம். அங்கிருந்து ஒரு சிறு காடு. அங்கே ஒருநாள் தங்கிவிட்டு திரும்பி மீண்டும் கோதாவரி வழியாக விஜயவாடா. ஒருவாரமாகும் திரும்ப. நண்பர் ராமச்சந்திர ஷர்மாவின் ஏற்பாடு. போவது அவரது சொந்த ஊருக்குத்தான். கோதாவரியை பலமுறை பார்த்திருக்கிறேன். இது அவளுடன் பழகுவதாக அமையும் என நினைக்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/8984