Tag Archive: கோணங்கி

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா?” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116365/

பாரதியும் கனவுகளும்

 வணக்கம் ஜெ பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம். இதற்கு முன் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் மட்டுமே படித்திருந்த எனக்கு இந்நூல் அவரைப்பற்றி மேலும் பல தகவல்களை தந்தது. பாரதி பெரும்பாலும் மற்றவர்களை பாண்டியா என்றே அழைப்பாராம். தமிழர்கள் அனைவரும் பாண்டியன் வழி வந்த மன்னர்கள் என்பாராம். சென்னையில் ஒருசமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115212/

ஒருநாளின் கவிதை

  லட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று [3-4-2016]வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட  ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார் காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பாரதிவிழா பேச்சுப்போட்டிக்காக முதன்முதலாக ஆரல்வாய்மொழியை கடந்தேன். இருபக்கமும் மலைகளின் எல்லை இல்லாமல் விரிந்து கிடந்த சமநிலம், முகில்களே அற்ற கண்ணாடிப்பரப்பான வானம், முள்செடிகளும் தொலைதூரப்பனைகளும் மட்டுமே கொண்ட வறண்ட விரிவு என்னை அழச்செய்தது. பேருந்தில் இருபக்கங்களிலிருந்தும் அனல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86586/

ஈரம்

மாயாண்டிக்கொத்தன் ஊரில் இருந்து ‘மெறாசுக்கு’ வண்டி ஏறியது பிழைப்புதேடித்தான். ஊரிலே மூன்றுதலைமுறையாக அவனது முன்னோர்கள்தான் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். சின்னச்சின்ன வீடுகளில் குழந்தைகள் பிறந்து திண்ணைகளில் சிறுநீர் கழித்து விளையாடி வளர்ந்து திருமணம் செய்துகொண்டு உள்ளறைகளில் வாழ்க்கையை அறிந்து, சமையலறைகளில் ருசிகளை உணர்ந்து, முதிர்ந்து தளர்ந்து அதே திண்ணைகளில் விழுந்து ஒடுங்கியிருக்கின்றன. மச்சுவீடுகளைக்கூட அவனது முன்னோர்தான் கட்டியிருக்கிறார்கள் சென்னைக்கு கிளம்பும்போது மாயாண்டிக்கொத்தன் தன்னுடைய ரசமட்டத்தைத்தான் முக்கியமாக எடுத்துக்கொண்டான். அவனது அப்பன் தாத்தன்கள் பயன்படுத்திய ரசமட்டம். அதை வைத்துத்தான் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16701/

சென்ற வாரம் முழுக்க…

இந்த ஒரு வாரமும் எங்கிருக்கிறேன் என்றே தெரியாதபடி அலைச்சல், உள்ளும் புறமும். ஆறாம் தேதி மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். அதற்கு முன் ஏழெட்டு கட்டுரைகள் எழுதவேண்டியிருந்தது. சினிமாக்குறிப்புகள் இரண்டு. மலையாள இதழான பாஷாபோஷிணிக்கு ஒரு கட்டுரை. கூடவே சி.சரவணக்கார்த்திகேயன் கொண்டுவரும் மின்னிதழுக்கு ஒரு நீளமான பேட்டி வெண்முரசு அத்தியாயங்களை வீட்டில் இருந்தால் தொடர்ந்து எழுதுவது என் வழக்கம். தினம் இரண்டு அத்தியாயங்கள் சாதாரணம். அபூர்வமாக மூன்று. ஆனால் புனைவின் ஓட்டத்தில் இடைவெளி விழுந்தால் வருவது வரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69679/

கோணங்கிக்கு விளக்கு

தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான கோணங்கிக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விளக்கு விருது பெறும் கோணங்கிக்கு வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62720/

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355/

கோணங்கி ஒரு கடிதம்

Dear Jeyamohan…. your criticism on konangi’s novels is superficial. konangi is to be approached as a translator of Archetypal images. he is an original writer of postmodern tamil fiction. if James Joyce can be understood then why not konangi ? if Finnegans’ Wake is possible why not Paazhi ? konangi communicates through images not by …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12929/

கோணங்கியும் மார்க்ஸும்

தொண்ணூற்றி ஆறில் கோணங்கி தர்மபுரிக்கு வந்திருந்தார். நான் அவருடன் கிளம்பி சேலம் சென்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரவுறங்கி கிரானைட் தொழிலில் இருந்த அவரது தம்பி வீட்டுக்குச் சென்றேன். செல்லும் வழியில் அ. மார்க்ஸ் பற்றி பேச்சு வந்தது. அவரது இலக்கியஞானம் பற்றி நான் சிரித்தேன். ‘டேய் அவருக்கு நல்ல தைரியம் இருக்குடா… இலக்கியம் பத்தி போல்டா பேசறார். அவருக்கு மட்டும் இலக்கியம் பத்தி ஏதாவது தெரிஞ்சிருந்தா அந்த தைரியம் வந்திருக்குமா சொல்லு? அப்டி ஒரு ஆளு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12837/

பாழி, ஒருகடிதம்

ஜெயமோகன், நலமா? தங்களிடும் துவக்கத்தில் ஒரு வாசிப்புப் பழகுநன் தங்களிடம் ஒரு உதவி அல்லது ஒரு வழிகாட்டுதல் கோரி இந்தக் கடிதம். நான் கடந்த இரு மாதங்களாக கோணங்கியின் ‘பாழி’ யை வாசிகக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் என்னால் அதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. என் எண்ணத்தின் படி மொழி வளத்திலும், வாசிக்கும் அணுகுமுறையிலும், கோணத்திலும் என் தகுதிக்கு மீறியதாக இருக்கும் என்றுதான் படுகிறது. உதாரணமாக, அல்ஜீப்ராவின் அடிப்படைகளைப் புரியாத மூன்றாம் வகுப்பு மாணவன் ஆறாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11685/

Older posts «