Tag Archive: கோட்டை [சிறுகதை]

கோட்டை ,விலங்கு- கடிதங்கள்

  கோட்டை [சிறுகதை] அன்புள்ள ஜெ,   கோட்டை சிறுகதையில் முதன்மையாக சொல்லப்படுவது என்ன என்று நான் யோசித்தேன். அணைஞ்சியின் பேச்சில்தான் குறிப்புகள் இருக்கவெண்டும் என்று பட்டது. அணஞ்சி கொக்கின் அலகு அதை அழைத்துச்செல்வதுபோல ஞானமார்க்கத்துக்கு அழைத்துச்செல்வது குறி என்கிறாள். அதை அவள் ஒரு தீய விஷயம் என்று சொல்லவில்லை. அதை அவள் ஒரு பிரைமரி ஃபோர்ஸ் என்றுதான் சொல்கிறாள்   ஆனால் ஏன் அதை அத்தனை எதிர்மறையாக அணுகுகிறார்கள்? அந்த ஆற்றலை வெறும் வன்முறையாக கையாள்வதைத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130432

வானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ   வானில் அலைகின்றன குரல்கள் ஒரு திகைப்பை உருவாக்கியது. நான் ராணுவத்தில் சிக்னலிங்கில் இருந்தவன். எத்தனையோ அனுபவங்கள். ஆனால் அவற்றிலிருந்தெல்லாம் ஒரு கதை எழமுடியும் என்று தோன்றவில்லை. உண்மையில் நாம் வாழும் நூற்றுக்கணக்கான வாழ்க்கைத்தளங்களில் இருந்தெல்லாம் ஏன் கதைகளே வரவில்லை என்று ஆச்சரியமாகவே இருக்கிறது. நவீனத்தொழில்நுட்பம் சார்ந்து ஏன் கதைகள் எழுதப்படவில்லை   ஏனென்றால் நவீனத்தொழில்நுட்பமோ அல்லது வாழ்க்கைக்களங்களோ அப்படியே பதிவுசெய்து வைத்தால் அதெல்லாம் இலக்கியமே அல்ல. அதற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130447

கோட்டை, வேட்டு – கடிதங்கள்

கோட்டை [சிறுகதை] ஜெ, கோட்டை  எங்கெங்கோ என் நினைவுகளை விரித்து சென்றது. ஏன் நாம்  சிகரெட் பிடிக்கிறோம் ? சட்டென்று ஓஷோவின் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது “குழந்தை தன் ஆறு வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட்டால்  வளர்ந்த பின் பெண்களின் மார்பு ஒரு கவர்ச்சி பொருளாக அதற்கு  தெரியாது ” எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால்  “freudian” கூற்றின்படி  வாய் அல்லது நாக்கு தான் குழந்தையின் முதல்  “erogenous zone” பாலியல் உளவியலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130401

ஆடகம், கோட்டை -கடிதங்கள்

  கோட்டை [சிறுகதை] அன்புமிகு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   இப்போதுதான் ‘கோட்டை” சிறு கதையைப் படித்தேன்; முழுவதும் இழையோடிய மறைமுகமான நகைச்சுவையும், உட்குறிப்புகளும் மிக ரசிக்கும்படி இருந்தன.  மூன்று வஷயங்கள் உடனே ஞாபகத்தில் வந்தன:   முதலாவதாக, 2020-ல் வெளி வந்த மிகச்சிறந்த மலையாளப் படங்களில் ஒன்றான  “கெட்டியோளானு என்ட மாலாக” என்ற  படத்தில் உங்கள் கதைக்கரு போலவே , ஓர் எளிய மலைவாழ் விவசாயி (ஆசிப் அலியின் மிக அருமையான் நடிப்பில்) தன் புதுமனவியிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130397

ஆடகம், கோட்டை -கடிதங்கள்

ஆடகம் [சிறுகதை] அன்புள்ள ஆசிரியருக்கு,     ஆடகம் நான் அணுகும் ஜனத்திரளில் பாதியேனும் மரணம் குறித்து எண்ணாதோரில்லை. ஆகும்பேவும் மரணத்திற்குபின் சுய தள்ளாட்டத்துடனான கதைப் போக்கும் நாயகனின் பிரச்சனை தவிர்த்து என்னை வேறு எதுவும் சிந்திக்க விடவில்லை. ராஜநாகமும் விஷவீரியமும் நம்மை நாகம் சீண்டும் கணமும் உணரும்போது முந்தைய நாயகனின் கற்பனைகள் நிஜமாயிற்றோ என்று நானும் நம்பினேன். பிழைத்தெழுதலும் அதன்பின்னான ராஜநாகத்தின் பொன்னொளிர் தருணங்களும் பொன்னின் வகைகளில் ஒன்றாய் ஆடகம் எழும்போது எனக்கு தமிழின் வீச்சும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130396

ஆடகம்,கோட்டை -கடிதங்கள்

ஆடகம் [சிறுகதை] அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   ஆடகம் கதை வாசித்தேன். தனித்திருத்தலை, கதைகளுக்கான நேரம் என்றதும் ஒரு குதூகலம். அதுவும் காதல் கதைகள், மாய யதார்த்தம் என்றதும், மகிழ்ச்சி.   இந்த சீரீஸ் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை ஆடகம். தலைப்பைக் குறித்த சிந்தனையுடனே கதையை வாசித்தேன். கதைக்குள் அதன் விளக்கம் வரும்போது ‌”இதோ கிடைத்துவிட்டது” என்ற பெருமூச்சு.   தற்கொலை என்ற சொல்லைக் கண்டவுடன், வாசிக்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130395

கோட்டை [சிறுகதை]

அணஞ்சியம்மை ஒரு சாக்குப்பையை அக்குளில் இடுக்கிக்கொண்டு வந்து சேர்ந்தபோது நான் கோயில்முற்றத்தில் இடிந்த திண்டின்மேல் அமர்ந்து பச்சைமாங்காய் தின்றுகொண்டிருந்தேன்.   “பிள்ளே, இங்கிண நாணியம்மை தம்ப்ராட்டிக்க வீடு எங்கயாக்கும்?” என்று அவள் கேட்டாள்.   அப்போது அவள் யாரென்று எனக்குத்தெரிந்திருக்கவில்லை. வடித்த காதுகள் தோளில் தொங்கின. இருமுலைகளும், இரு நீண்ட பைகளாக ஆடின. முலைக்காம்புகள் குப்புற நிலம்நோக்கியிருந்தna, பசுவின் காம்புகளைப்போல. இடையில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தாள். முகம் சிலந்திவலைபோல சுருக்கங்கள் மண்டியிருந்தது. நரைத்த கண்கள் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130261