Tag Archive: கோட்டி

கோட்டி – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் கோட்டி சிறுகதையை சமீபத்தில் படித்தேன். கதை முடிகையில் இது ஒரு கோட்டியைப் பற்றியதல்ல, கோட்டிக்கார உலகத்தைப் பற்றியது என்பது விளங்கியது. “பிழைக்கத்தெரியாத” மனிதர்களைப் பாத்திரமாகக்கொண்டு தாங்கள் எழுதிய (நான் படித்த) மூன்றாவது சிறுகதை இதுவென்று நினைக்கிறேன்.முதல் இரண்டு “சோற்றுக்கணக்கு”,”யானை டாக்டர்”. இச்சிறுகதையைப் பற்றி என்னுடைய ப்ளாகில் எழுதவிருப்பதை இங்கே தருகிறேன். கணேசன் என்ற ஜூனியர் லாயர், தான் பெண் பார்க்கச் செல்கையில் பூமேடை என்ற கொள்கைவாதியை சந்திக்கிறான். (கொள்கைவாதி:அப்படி யாராவது இன்று உயிருடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25942

ஒரு விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே! உறுதி அளித்தவாறே ஜெமோ மீதான “விமரிசன” கட்டுரை இதோ! இன்றைய வணிகமயமாக்கப்பட்ட சூழ்நிலையிலும், உலகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபப் பசிக்கு இரையாகும் சமூகச் சூழலிலும், அமெரிக்க ஏகாதிபத்திய கோரப்பிடி இறுகி வரும் நிலையிலும் நமது சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் சந்தைப் பொருளாதாரம் எனும் போர்வையில் இதனை ஆதரிக்கும் உள்ளூர் பார்ப்பனிய, இந்துத்துவப் போக்கையும் நமது சமூகம் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது. இப்படி போராட்டக் களம் காணும் நமக்கு சமூக விழிப்புணர்வு எண்ணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25449

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அறிய, நலம். நலம் என நினைக்கிறேன். அண்மையில் கோட்டி கதையைப் படித்து ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டேன். கதை வாசித்து முடித்ததும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். பூமேடையை தெரியாதவர் யாராவது குமரியில் இருக்க முடியுமா.. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன் என்ற பெருமையை இந்தக் கதை எனக்கு உணர்த்தியது. குமரி ஸ்கேனிங் தொடரட்டும் உங்கள் எழுத்துக்களில்………வாழ்த்துக்கள்.. தக்கலை எச்.முஜீப் ரஹ்மான் அன்புள்ள முஜீப், நன்றி. பூமேடை போன்றவர்கள் மறக்கப்படவேண்டியவர்கள் அல்ல. அவர்கள் கோமாளித்தனங்கள் மூலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25214

கோட்டி கடிதங்கள்

அன்புள்ள ஜெ கோட்டி கதை பலமுறை நுட்பமாக ரசித்துப்படிக்கத்தக்க படைப்பு. மேலோட்டமான ஒரு கிண்டல் கதைமுழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்தக்கதைக்குள் உள்ள சமூகவிமர்சனமும் டிராஜிக் ஃபீலிங்கும் சேர்ந்து கதையை நல்ல சட்டயராக ஆக்கி உள்ளன. பல இடங்களை மீண்டும் நினைத்துப்பார்க்கும்போது புன்னகை செய்துகொண்டேன். ஒன்றுக்கடித்தபடியே வேலைபார்க்க வெள்ளைக்காரன் கருவி கண்டுபிடிக்கிறான் என்ற வரி. அடிக்கப்போகும் போலீஸ் ஆபீசரை மாட்டுக்காரனாக மாற்றிக்காட்டி அவரை தடுப்பது. பணம் கட்டி தோட்டியாக மாறிவிட்டேன் என்று பூமேடை சொல்லக்கூடிய வரி. அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13373

இன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள்

‘காந்திபடம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காரு’உண்மைதான். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், காந்தியின் சிரிப்பு, ‘என்னடாவெள்ளகாரன வெரட்டிபுட்டு, கொள்ளக்காரன் கையில கோல குடுதுப்புட்டமே’, என்ற சங்கடத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பதுபோல இருக்கலாம். கோட்டி-பூமேடை ஒரு காமெடியன் போல மக்களால் நடத்தப்பட்டது அறியாமையின் வெளிபாடுதான். அவருடைய நகைச்சுவைப் பேச்சு அவரைப்பற்றிய தோற்றத்தை மக்கள் மனதில் தோற்றுவித்திருக்கலாம். எனக்கு இந்த கதையை படித்தபோது நகைச்சுவை உணர்வு தோன்றவில்லை.  வலிதான் தோன்றியது. என்னுடைய தாத்தா ஒரு விடுதலை போராட்ட வீரர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் இரண்டரை வருடம் சிறைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13371

கோட்டி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ, வணக்கம். கோட்டி – சிறுகதை படித்தேன். அற்புதம். சமூகத்திற்காக வாழ்பவர்களுக்கு கிடைக்கும் பட்டப்பெயர், அப்படி பெறுபவர்களுக்குத் தான் தெரியும். ‘பூமேடை’கள் பலர் அவமதிக்கப்பட்டதால்தான், இன்று நாம் நாறிக் கொண்டிருக்கிறோம் எனில் தவறில்லை. ‘அறம்’ வரிசை சிறுகதைகளில் மிகுந்த நகைச்சுவை மிளிர்ந்த கதை. இயல்பான கதையோட்டத்துடன் கூடிய நகைச்சுவை. பூமேடையின் ஒவ்வொரு நக்கலிலும் இதய ஆவேசம் பீறிடுகிறது. காந்திக்கு கோமாளித் தொப்பி போடுவதாக வரும் சம்பவம் போதும், பூமேடையின் குணத்தை விவரிக்க. அரசு ஆஸ்பத்திரிகளின் கேவலமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13365

கோட்டி [சிறுகதை] 1

ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50  உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன். சங்கிலி கழன்றுவிட்டது. சள்ளையாக இருந்தது. அதை கழட்டிமாட்டினால் கையெல்லாம் கறையாகிவிடும். என்னதான் கவனமாக இருந்தாலும் பாண்ட் சட்டையில் கறைபடியாமல் இருக்காது. சட்டை வெள்ளை நிறத்தில் போட்டுக்கொண்டிருந்தேன். என்னிடமிருக்கும் நல்ல சட்டை எல்லாமே வெள்ளை என்பது ஒருபக்கம்.நான் போகும் விஷயமும் அப்படிப்பட்டது. அப்பா கிளம்பும்போதுகூட சொல்லிக்கொண்டே பின்னால் வந்தார். ‘லே, மக்கா உனக்க கோட்டித்தனத்த காட்டீரப்பிடாது கேட்டியா? அவ்வோ பெரிய ஆளுகளாக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13096