Tag Archive: கோசலம்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79

78. காட்டுக்குதிரை ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள். விதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101196/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 10 கோசலத்தின் பன்னிரு பெருங்குடிகளும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் கூடிய பேரவையில் இளவரசி கௌசல்யை அரங்கு நுழைந்தாள். இளைய யாதவரை மணம் கொள்ள அவள் உளம் கனிகிறாளா என்று கோசலத்து முதுவைதிகர் கார்க்கியாயனர் வினவினார். தலைகுனிந்து விரல்களால் மேலாடையைப் பற்றிச் சுழித்தபடி “ஆம்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னதும் நிறைந்திருந்த அவையினர் எழுந்து “ஆழிவண்ணனை அணைந்த திரு வாழ்க! அவள் கரம் கொண்ட நீலன் வாழ்க! வெற்றி கொள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77760/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 74

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 9 ”கோசலத்தின் அரண்மனை மிகத் தொன்மையானது” என்றார் அக்ரூரர். ”அன்றெல்லாம் கங்கை வழியாக கொண்டு வரப்படும் இமயத்துப் பெருமரங்களே மாளிகை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. பெரும்படகுகள் எனத் தோன்றிய மரத்தடிகளை அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளம் மீது உருண்டு எழுந்த தூண்களின்மேல் கூரைஉத்தரங்கள் எடையுடன் அமர்ந்திருக்கும். மரப்பட்டைக் கூரை கூம்பு என உயர்ந்து கருகி மலைப்பாறைகுவைகள் போல நின்றிருக்கும். பண்படாத தூண்களும் மழைநீர் வழிந்து கரைந்து கறுத்த பலகைப் பரப்புகளுமாக அவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77740/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 73

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 8 திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சுநிலையின் அறைவாயில் கதவு திறப்பதற்காக காத்து நின்றான். மெல்லிய முனகலுடன் திறந்த வாயில் வழியாக அக்ரூரரே இரு கைகளையும் விரித்தபடி “வருக வருக இளவரசே! என் அலுவல் அறை நல்லூழ் கொண்டது. தங்கள் வருகை அதன் வரலாற்றில் என்றும் இருக்கும்” என்றபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “தங்களை சந்திக்கவேண்டுமென்று சொன்னபோது அங்கு வருவதற்கான ஒப்புதலையே கோரினேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “தாங்கள் மூத்தவர். நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77724/