Tag Archive: கொல்லிமலை சந்திப்பு

கொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4

  அன்பின் ஜெ, மிக மிக சிறப்பான சந்திப்பாக அமைந்தது நம் கொல்லி மலையின் களம், அன்று நீங்கள் வாசகர்களின் முதல் இலக்கிய பரிட்சயம் (அ) கண்டடைதல் பற்றி வினவினீர்கள், நான் வெண்முரசே எனது முதல் இலக்கிய கண்டடைதல் என்று கூறியிருந்தேன், இன்னும் ஆழ்ந்து கூறுவதானால், அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான்” துர்விநீதர் சொன்னார். (மழைப்பாடல்,பகுதி பதிநான்கு : களிற்றுநிரை) இவ்வரிகள் என் வெண்முரசை அணுகும் முறையயே மாற்றிஅமைத்து. மேலும் சந்திப்பின் நாட்களில் தாங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86677

கொல்லிமலை சந்திப்பு 2

கொல்லி மலையில் குளிரே இருக்காது என்பது வாசுவின் கூற்றாக இருந்தது. ஆனால் இரவில் நல்ல குளிர். காலையில் நன்றாகவே குளிர். ஆறுமணிக்கு எழுந்து ஒரு நீண்ட காலைநடை சென்றோம். அருகிருந்த படதுக்குளம் வரை சென்று அப்படியே திரும்பி சோழர்காலத்தைய இடிந்த சிவன்கோயில் ஒன்றைப்பார்த்தோம். கோயில் பாதிவரை மண்ணில் மூழ்கியிருந்தது. உள்ளே ஆவுடை மட்டும். அதன் மேல் ஒரு கல்லைத்தூக்கி சிவனாக வைத்திருந்தனர் கொல்லிமலை பழங்காலத்தில் முக்கியமான ஊராக இருந்துள்ளது. தமிழ்ப்பண்பாட்டின் தொடக்ககாலத்தில் குன்றுகள்தான் முக்கியமான அரசுகளாக எழுந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86232