Tag Archive: கொல்லிமலைச் சந்திப்பு

கொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3

  அன்புள்ள ஜெ அவர்களுக்கு , நான் உங்கள் படைப்புகளை படிக்க தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. என்னைப்போன்ற இளம் வாசகர்களுக்கு அதுவும் இந்த குறுகிய காலத்தில் உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு ஊழ் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் கேட்ட சிறு பிள்ளைத்தனமான கேள்விக்களுக்கு கூட உவகையுடன் விடையளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.என் மனதை பலநாள் உறுத்திய சில முக்கியமான கேள்விகளுக்கு விடை கண்ட பொழுது பெரும் நிம்மதியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86564/

கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2

  ​​​​அன்புடன் ஆசிரியருக்கு இரண்டு  நாட்கள்  இவ்வளவு  சிறியதாகத் தெரிந்தது  இதுவே  முதன்முறை.  ஒரு சிறு இடையூறு  கூட  ஏற்படாவண்ணம்  திட்டங்களை  தெளிவாக  வகுத்து  சந்திப்பினை சாத்தியமாக்கிய ஒருங்கிணைப்பாளர்கள்  அனைவரையும்  வியப்புடன்  வணங்குகிறேன். ஈரோடு  ஊட்டி  சந்திப்புகள் அளவு  இச்சந்திப்பு செறிவுடையதாக இருக்கவில்லையோ என்று  தொடக்கம்  முதலே  உறுத்தல்  இருந்து  கொண்டே  இருந்தது.  அது இரவில்  உறுதியாகிவிட்டது.  எப்படியாயினும்  உங்களை சந்தித்து இரு நாட்கள்  உடனிருந்து பேசிச்  சிரித்து சென்றதன் நிறைவின்  முன் இந்த  உறுத்தல்  சிறியதே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86310/

கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம்.பாண்டிச்சேரியில் வருடந்தோறும் மே முதல் வாரம் நிகழும் கம்பன் கழகம் நடத்தும் விழாக்களுக்கு சிறுவயது முதற்கொண்டே பார்வையாளனாக, தந்தையுடன் சென்று வருவது உண்டு. கடந்த ஆண்டு நாஞ்சில்நாடன் அவர்களின் வருகை உண்டு என்பதை அறிந்து ஆவலுடன் சென்றேன், ஆனால் கம்பனின் அம்பறாத்தூணி என்னும் அவர் படைப்புக்கு பரிசு வழங்கவே அழைத்திருந்தனர். அவரின் உரையைக் கேட்க இயலாதது ஏமாற்றமே. அக்கழகத்தின் நிரந்தரப்பேச்சாளர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஆற்றிய ஓர் உரையில் கம்பனின் பாடல்கள் ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86280/

கொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…

  கொல்லிமலைச் சந்திப்புக்கான இடங்கள் ஒரே நாளில் நிறைவுற்றுவிட்டன. சிலமணிநேரங்களில். சென்றமுறை வரவிரும்பி வரமுடியாது போன நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுத்தோம். மேலும் தொடர்ந்து நண்பர்கள் அழைத்து அந்தப்படிவத்தை அனுப்பமுடியவில்லை என்று சொல்கிறார்கள். பலர் , குறிப்பாகப் பெண்கள், பயணத்தை ஒரு குறையாகச் சொல்கிறார்கள். ஆகவே மேலும் ஒரு சந்திப்பை கோவையில் நண்பருடைய பண்ணைவீட்டில் வைத்துக்கொள்ளலாமா என்று எண்ணுகிறேன். அனேகமாக ஏப்ரல் முதல்வாரம். இன்னொரு சந்திப்பை ஈரட்டியிலும் வைத்துக்கொள்ளலாம் என்னும் எண்ணமிருக்கிறது. ஏற்பாடுகள் குறித்து பேசியபின் அறிவிக்கிறேன். இம்முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85637/