Tag Archive: கொற்றவை

கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி

கொற்றவை அச்சாகி வெளிவந்த ஒரு மாத காலத்திற்குப் பின் அதன் ஆசிரியர் ஜெயமோகன் நீண்ட ஓய்வை அறிவித்தார். திட்டமிட்ட பெரிய பணி கச்சிதமாக முடிந்து விடும் நிலையில், நீண்ட ஓய்வொன்றை விரும்புவது மனித இயல்பு. 25 ஆவது வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்து விட்டு நீண்ட ஓய்வை அறிவித்திருக்கிறார் ஜெயமோகன். 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டுள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/465

வெண்முரசும் தனித்தமிழும்

ஜெயமோகன் அவர்களுக்கு நான் இன்றைய புத்திலக்கியங்களை அதிகமாக வாசிப்பவன் அல்ல. இளமைக்காலத்தில் நா.பார்த்தசாரதியையும் ஜெயகாந்தனையும் விரும்பி வாசித்தேன். பள்ளிநாட்களில் மு.வ மனம்கவர்ந்த ஆசிரியராக இருந்தார். என் வாசிப்பு என்னை பண்படுத்தியது. என் தமிழ்ப்பற்று வாழ்க்கைக்கும் ஒரு பற்றுகோலாக இருந்தது. நீண்டநாட்களுக்குப்பின் நான் கதைபடிக்க ஆரம்பித்தது என் மகள் எனக்கு அளித்த யானைடாக்டர் என்னும் நூலில் இருந்துதான். அது எனக்கு ஒருபெரிய திறப்பாக இருந்தது. அதன் தமிழ்தான் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழை இப்படியெல்லாம் ஆளமுடியுமா என்ற நினைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83844

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644

சுயபலி

அன்புள்ள ஜெயமோகன், நலமா? கொற்றவை மறுவாசிப்பு செய்து கொண்டு இருக்கிறேன். முதல் முறை மனதிற்கு சிக்காத பல விஷயங்களுக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரு விஷயம் தொடர்ந்து பிடி கிடைக்காமல் நழுவிச் சென்று கொண்டே இருக்கிறது. அது நாவலின் மூன்றாம் பகுதியில் கண்ணகியும், ஐந்தாம் பகுதியில் சேரன் செங்குட்டுவனும் பழங்குடி வழிபாட்டில் வழியெங்கும் காணும் மனித பலிக் காட்சிகள். மனிதர்கள் தங்களைத் தாங்களே பலி கொடுக்கின்றனர். இப்படி ஒரு வழிபாட்டு முறை பல்வேறு பழங்குடிச் சமூகங்களிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30136

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77875

’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.

அன்புள்ள ஜெயமோகன் சார் , ஒரு சிறந்த படைப்பு என்பது, அதை அனுகுபவரை, முழுவதுமாக உள்ளிழுத்து,…. அவருக்குள்ளே இருப்பதை வெளிக்கொணர்ந்து .., ஒத்து நோக்கி.., விமர்சித்து.., , அனுபவித்து.., மறுத்து…, ஒரு முடிவின்மைக்கோ, முடிவுக்கோ, வருதலே. அவ்வகையில், கொற்றவை எனக்கு பெரும் வியப்பு, குனிந்து படித்துகொண்டிருக்கும் வேளையில், கண்முன்னேயும், தலைக்கு மேலும், வேறு ஒரு உலகம் உணரப்பட்டுக்கொண்டே இருப்பது இந்த நாவலின் அடிநாதம். ”அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் ” என்று நம் முன்னோரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75865

கொற்றவை பித்து- 3

அன்பு ஆசிரியனே!, உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாத பெரு நடனமே காப்பியம் காப்பியத்திற்கு மேலுமொரு அறிமுகம். நினைக்கையில் விரிக்கவும் நேரம் தாண்டி சுருக்கவும் கூடிய அனைத்தும் மீதும் ஆறாத காதலுண்டு உலகிற்கு காட்டாக பீலியும் லிங்கமும் காப்பியம் ஒருவகை பீலி மறுவகையில் குறி! எளியோர்க்கு வாமன் கதை போல வள்ளுவன் போல ஈரடி கொண்டும் உலகளக்கலாம் அந்தாதி பாடி அண்டம் ஆளலாம் பேருருக்கொண்டு அண்டமதில் பிண்டம் பிண்டமதில் அண்டம் அறிக எங்கும் நுகமின்றி மேழி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73739

கொற்றவைப் பித்து- 2

அன்பு ஆசிரியனே!, இவ்வெளிய வாசகனுக்கு கொற்றவை அதுவும் ஒரு புத்தகமே!.. ஆனால் ஆழ்மனத்து உறுபசிக்கு புத்தகம் போதாதே ! என் இயற்மொழியாம் தமிழில் அதை ‘நூல்’ எனலாம். ஏன் நூல்? நூற்பது, பின்னுவது, நெய்வது, ஆடையாவது, அணிவது இறுதியில் அதுவே அவிழ்வது எனவே கொற்றவை புத்தகமல்ல ‘நூல்’ எமக்கு! எமக்கு கொற்றவை மந்தணச் சொற்குவை, கோழிச்சாத்தன் மீண்ட கதையில் தொல்தமிழ் அவனை சேர்த்த கரையில் இருந்து புகார் அணையும் வரை நடத்தியது போல ஒவ்வொரு வாசிப்பும் அதனதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73736

கொற்றவை பித்து-1

அன்பு ஆசிரியனே!, இவ்வெளிய வாசிப்பின் சாரமிது. மூன்று முறை வாசித்தும் எஞ்சும் பொருளென்று எனக்குண்டு. அவள் ஒன்பது கோணங்கள் மேவி உறைபவள் அல்லவா! கருவறைத் தாய்த்தெய்வம் ஒன்று தனது நாடும் காடும் குடியும் தொடியும் பாலையும் காண எழுந்த கணம் இந்நெஞ்சில் நீநேரம் அமிழவில்லை. நாடும் காடும் சரி, பாலையும் காண விழைந்தது ஏன்? கன்னி தாயாக மாறி பின் சேய் கொல்லும் தவையாக மாற பாலை தான் உகந்ததோ? ‘மூவகைதீயும் முறைகொண்டு ஆளும் மண்ணில் சூழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73733

கொற்றவை- கனவுகளின் வெளி

அன்புமிக்க ஜெ, கொற்றவை மீண்டும் வாசித்தேன்.”கரும்பாறை மீது காலமெல்லாம் காதலுடன் தழுவிச்சென்றாலும் காற்று அதில் இணைவதில்லை!!!” எத்தனைவலிமையான சொற்கள்.கண்ணகியுடன் கோவலனின் உறவை இதைவிட விளக்க வார்த்தைகளில்லை. கொற்றவையின் மொழி என்னை இழுத்து மூழ்கிடச் செய்கிறது.ஒவ்வொரு அன்னையின் கதையும் வாழ்வும் மண்ணில் வீறுகொண்டு எழும் விதைகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.சொல்லப்போனால் உலகின் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இத்தகைய கதைகள் உருக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கின்றன. கொற்றவையின் தனித்தன்மை கொண்ட மொழி எனக்களிக்கும் உவகையை விவரிக்க முடியவில்லை.மொழியின் சரளமும் வலுவுமே நான் வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73443

Older posts «