Tag Archive: கொற்கை

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 2 ] கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி வெய்யநீராக கொதித்து ஆவியெழுந்துகொண்டிருந்தது. சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட பொதிப்படகுகளின் அறைகளுக்குள் சில கணங்கள் கூட இருக்கமுடியவில்லை. வெளியே வந்து தெற்கிலிருந்து அலையலையாக வீசிக்கொண்டிருந்த காற்றை வாங்கிக்கொண்டு பாய்மரக்கயிற்றைப் பற்றிக்கொண்டு நிற்கையில் மட்டுமே உடலில் வியர்வை கொட்டுவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45619

ஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா

பிப்ரவரி 2014 ஒன்றாம்தேதி மாலையில் ஜோ.டி குரூஸுக்கு பாராட்டுவிழா சிறில் அலெக்ஸ் மற்றும் நண்பர்களால் சென்னை லயோலா கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவுக்கு முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். அரங்குநிறைய நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர். விழாவின் மிகச்சிறப்பான உரையாக அமைந்தது வறீதையா கன்ஸ்டண்டீன் ஆற்றியது. பெரும்பாலும் மீனவச் சமுதாயத்தை நோக்கியதாக அமைந்த உரை. அம்மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபடுவதற்கான அழைப்பு. தங்கள் பண்பாட்டை அடையாளம் காணவும் அதை எழுத்தில் ஆவணப்படுத்தவும் விடப்பட்ட அறைகூவல். இந்திரா பார்த்தசாரதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45893

ஜோ- ஞாநி-விமர்சனங்கள்

ஜெ, ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதை விமர்சித்து ஞாநி எழுதியிருப்பதை வாசித்தீர்களா? அவரை ஓர் இந்துத்துவர் என்று சொல்கிறார் ஞாநி. டிவிட்டரில் ஒருவர் இப்படி எழுதியிருந்ததை வாசித்தேன். ஜேடி குரூஸ்ன்னு பேர பாத்துட்டு அமேரிக்க காரரா இருப்பாரோன்னு நெனச்சேன்.போட்டோ பாத்ததும் தான் ஆப்பிரிக்கர்ன்றது தெரியுது ;) இதெல்லாம் என்ன மனநிலை என்றே எனக்குப்புரியவில்லை எம்.சந்திரசேகர் * அன்புள்ள ஜெ இந்த வருடம் ஜோ டி குரூஸுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43466

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்   இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43327

ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22384

திருச்சீரலைவாய்

பித்துக்குளி முருகதாஸை நினைக்காமல் செந்தூரை நினைக்க முடியவில்லை. அலைவாய் அமர்ந்த பெருமாளை அவர் பாடிய பஜனைகள் ஒருகாலத்தில் பலமுறை கேட்டவை. த்ருச்செந்தூர் கிளம்புவதற்கு முன்னர் அந்த குறுவட்டை எடுத்து மீண்டும் கேட்டேன். நண்பர் செல்வேந்திரன் திருக்குறளரசியை மணக்கும் நாள். நவம்பர் பதினெட்டாம் தேதி காலை நான்குமணிக்கு எழுந்து ஐந்துக்கு பேருந்தில் ஏறி கிளம்பினேன். வள்ளியூர்வரை தூங்கினேன். அதன்பின் விடிய ஆரம்பித்த கிராமங்கள் வழியாக சென்றேன். சாத்தாங்குளத்தில் டீக்கடைகளில் சீர்காழியும் ஈஸ்வரியும் போட்டிப்பாடல் ஆரம்பித்திருந்தார்கள். இருபுறமும் முள்வயல்கள் நிறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9343

கொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்

வரலாற்றின் கலை வடிவம் —          அரவிந்தன்   ‘காலம்’. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக  வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது.  நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5641