Tag Archive: கைலாசபதி

வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு

ஜெ, சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன? அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா? ராஜாராம் [எம் ஏ நுஃமான்] அன்புள்ள ராஜாராம், எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80088

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74687

அஞ்சலி – எஸ்.பொ

ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்கு என் அஞ்சலி. ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66446

அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்

’அந்தக்கால எழுத்தாளர்கள் சிந்தனைகளை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்கள். இப்போதைய எழுத்தாளர்கள் வெறும் விவாதங்களைத்தான் உருவாக்குகிறார்கள்’ இந்தவரி இப்போது பிரபலமாக இருக்கிறது. ஒருவாரத்தில் பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இப்போதுள்ள விவாதங்களின் பின்னணியில் இதை நீங்கள் விளக்கவேண்டும் என்று நினைக்கிறேன் ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், அனேகமாக இது ஏதோ ஃபேஸ்புக் மேதையின் வரியாகத்தான் இருக்கும். எதையும் யோசிக்காமல் வாசிக்காமல் பேசுவதற்கான இடம் அது. இந்த தளத்திலேயே இதற்கிணையான கேள்விகளுக்கு மிகவிரிவான, ஆதாரபூர்வமான பதில்கள் பத்துமுறைக்குமேல் எழுதப்பட்டுள்ளன. ஒரு எளியவாசகன், அடிப்படை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57570

பாரதி விவாதம் 2 – மகாகவி

ஜெ, பாரதியின் சமூகப்பாடல்களில் சில,தேச வணக்கப் பாடல்களில் சில நீங்கலாகப் பார்த்தால் பெரும்பான்மையான பாடல்கள் பேரிலக்கியவகைமையைச் சார்ந்தவைதாம். சாக்த வழிபாட்டு நிலையில்கூடபக்தியையும் கடந்து சாக்தம் குறித்த தத்துவம் பொதிந்த கவிதைகள்பாரதியிடம் இருந்து தோன்றியுள்ளன. காலமா வனத்தில் அண்டக் கோலமா மரத்தின்மீது காளிசக்தி என்ற பெயர் கொண்டு என்ற கவிதையில் உள்ள உருவகம் ஓர் உதாரணம். “பல்வகை மாண்பினிடையே -கொஞ்சம் பயித்தியம் அடிக்கடித் தோன்றுவதுண்டு” என்று ’கண்ணன் என் தந்தை’யில் பாடும்போது தந்தை-மகன் உறவினிலான உளவியல் சிக்கலை அழகாகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21493

தமிழில் இலக்கிய விமர்சனம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழில் இன்று இலக்கியத் திறனாய்வு என்பது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது? அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா? தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார்? யாருடைய திறனாய்வையாவது வாசிக்க சிபாரிசு செய்ய இயலுமா? ராம்குமார் சாத்தூரப்பன் அன்புள்ள ராம்குமார் தமிழில் தொன்மையான திறனாய்வு முறைமை ஒன்று இருந்துள்ளது. நூல்களை சபை நடுவே அரங்கேர்றம்செய்யும் முறை இருந்தது, அது ஒரு திறனாய்வுமேடையே. அந்தத் திறனாய்வுகள் பதிவாகவில்லை நம்முடைய உரைகளைத் திறனாய்வு முறைகளில் ஒன்றாகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20586

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

கு.அழகிரிசாமி நான் கண்ட இலக்கியவாதிகள், என்ற சிறுநூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் எஸ். வையாபுரிப்பிள்ளை பற்றிய ஒரு நடைச்சித்திரம் உள்ளது. அதில் கு. அழகிரிசாமி வையாபுரிப்பிள்ளை யிடம் சித்தர் பாடல்கள் நூலைப்பற்றி அவரது கருத் தைக் கேட்கிறார். வையாபுரிப்பிள்ளை சொல்கிறார். “அந்த நூலை என்னால் ஏற்க முடியாது. முதலில் அதன் பதிப்பாசிரியர் யார்? எந்த மூலத்திலிருந்து அவற்றைப் பதிப்பித்தார்? வேறு யாராவது அந்த மூலங்களைப் பார்த்திருக்கிறார்களா? மூலமும் பதிப்பும் ஒப்பிடப்பட்டுள்ளனவா? எதுவுமே இல்லை. அது ஒரு போலியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/186