Tag Archive: கைடபர்

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56

பகுதி ஏழு : நச்சாடல் 5 அஸ்தினபுரியின் கலநிரையின் முகப்பில் நின்றிருந்த காவல்படகிலிருந்து உரத்த கொம்பொலி எழுந்தது. குதிரைகள்போல அனைத்துப் படகுகளும் அதை ஏற்று கனைத்தன. உண்டாட்டறைக்குள் எட்டிப்பார்த்த காவலர்தலைவன் “அரசே, நமக்கு துறையளிக்கப்பட்டுள்ளது” என்றான். ஜராசந்தன் சரியும் விழிகளைத் தூக்கி “நாம் இப்போது கரையிறங்கப் போவதில்லை. நாம் மகதத்திற்கே திரும்புகிறோம். படகுகள் திரும்பட்டும்” என்றான். துச்சாதனன் பீரிட்டுச் சிரித்து “மகதரே, இது எங்கள் படகு” என்றான். துச்சலன் “ஆம், இது அஸ்தினபுரியின் படகு” என்றான். “அஸ்தினபுரியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83984

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 11 துச்சளை இருகைகளாலும் கர்ணனின் வலக்கையை பற்றி தன்தோளில் வைத்து அதில் கன்னங்களை அழுத்தியபடி “மூத்தவரே, என் கனவில் எப்படியும் நாலைந்துநாட்களுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிடுவீர்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் விண்ணிலிருந்து பேசுவது போலவும் நான் அண்ணாந்து உங்கள் குரலை கேட்பது போலவும்தான் இருக்கும். இப்போதுதான் தெரிகிறது. உங்கள் முகம் எனக்கு தலைக்குமேல் நெடுந்தொலைவில் உள்ளது. இப்படி நிமிர்ந்து பார்த்தால் வானத்தின் பகைப்புலத்தில் தெரிகிறீர்கள்” என்றாள். துச்சலன் “ஆகவேதான் அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83196

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 2 அவை இன்நீர் அருந்தி முடித்த பிறகு மெல்லிய பேச்சொலி இணைந்து முழக்கமென்றாக, அசைவுகள் அமைந்து சீர் கொள்ளத்தொடங்கியது. அவர்கள் அச்செய்தியால் கிளர்ந்திருப்பதை அரசமேடை மேலிருந்து காணமுடிந்தது. ஷத்ரியர்களிடம் மட்டும் சற்று ஏளனமும் அமைதியின்மையும் தெரிந்தது. வைதிகர்கள் சிறிய குழுக்களாக ஆகி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். ஹரிதர் கைகாட்ட நிமித்திகன் மேடையேறி “அவையோரே, இன்று பிற ஆயத்து அலுவல்கள் ஒன்றுமில்லை. அஸ்தினபுரியின் நற்செய்தியுடன் இங்கு அவைக்கு வந்த அமைச்சரையும் இளவரசரையும் நமது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83005

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 1 மங்கல இசை தொடர வாழ்த்தொலிகள் வரிசை அறிவிக்க கர்ணன் அவை புகுந்ததும் முதுவைதிகர் எழுப்பிய எழுதாக்கிளவியின் இன்னிசையும் அவையோர் கிளத்திய வீங்கொலி வரிசையும் அவைமுழவின் விம்மலும் உடன் இணைந்த கொம்புகளின் அறைகூவலும் அவனை சூழ்ந்தன. கைகளை தலைக்கு மேல் கூப்பியபடி சீர் நடையிட்டு வந்து வைதிகரை மும்முறை தலைவணங்கியபின் திரும்பி மூன்று முதுவைதிகர் கங்கை நீர் தெளித்து தூய்மைப் படுத்திய அரியணையில் அமர்ந்தான். அவன் மேல் வெண்குடை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82998

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் – 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என் ஆசிரியர் காலடியில் வைக்க அப்போது உயிர் மட்டுமே என்னிடம் இருந்தது. நான் சென்று ஏகலவ்யனை எதிர்கொள்கிறேன் என்றேன். ‘இல்லை, நீ என் பொறுப்பு. என் மைந்தனுக்கும் மேலானவன்’ என்று ஆசிரியர் சொன்னார்” துரியோதனன் தொடர்ந்து சொன்னான். குருநாதர் இமயகுருகுலத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த இளவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66010