Tag Archive: கே.ஜே.அசோக்குமார்

கே.ஜே.அசோக்குமார்

சுயவிவரம்: பெயர்: கே.ஜே.அசோக்குமார், படிப்பு, வேலை: கும்பகோணத்தில் பிறந்து திருவாரூரில் வாழ்ந்து திருச்சியில் படித்து சென்னை, தில்லியில் வேலைபார்த்து, தற்போது ஒரு தனியார்துறையில் புனேயில் வேலைபார்க்கிறேன். பத்துவயதில் எழுத்தாளனாக என்னை உணர்ந்தாலும் மிக மெதுவாகவே எழுத்துலகிற்கு வந்தேன். பிடித்த பிடித்த எழுத்தாளர்கள் அசோகமித்ரன், தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி, பாவண்ணன், ஜெயமோகன். இதுவரை வந்த கதைகள்: வார்த்தை, உயிர்எழுத்து, சொல்வனம் போன்ற இதழ்களில் கதைகள் வெளியாகியுள்ளன. சொல்வனம் இதழில் வெளியான கதைகளின் லிங்க்: http://solvanam.com/?author=120 என் வலைப்பூ: www.kjashokkumar.blogspot.in

Permanent link to this article: https://www.jeyamohan.in/38179

புதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்

அமைதி என்பது மரணத் தறுவாயோ? வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ? அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ? எழுந்து சென்ற பறவையினால் அசையும் கிளையோ? -தேவதேவன் ஆரோக்கியமானபோது சிந்திப்பது தொடர்ச்சியற்றும் இலக்கற்றும் இருப்பதும், ஆரோக்கியமற்றபோது அதுவே தொடர்ச்சியும், விரிவுடன் கூடிய ஆழமும் கொண்டிருப்பதுமாக தெரிகிறது. இளம்வயதில் தோன்றிய ஏதோஒரு விசயம் பலவருடங்களாக நினைவைவிட்டு அகலாமல் காலங்கள் தோறும் வளர்வதையும், மனதின் மூலைகளில் இண்டுஇடுக்குகளில் தொடர்ந்து வளைய வருவதையும், பலசமயங்களில் சற்று ஆச்சரியத்துடன்தான் அனுமானிக்க முடிகிறது. ஆனால் ‍ஆரோக்கியமான காலங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36402