Tag Archive: கே.சி.நாராயணன்

இனியவை திரும்பல்

கொல்லிமலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும்போதுதான் கே.சி.நாராயணன் கூப்பிட்டார். என் முப்பதாண்டுக்கால நண்பர். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவர். இலக்கியவிமர்சகராக பெரும் பங்காற்றுவார் என ஆற்றூர் அவரைப்பற்றி எண்ணினார். ஆனால் மாணவராக இருக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்டு மாத்ருபூமி இதழ் அவரை அழைத்துக்கொண்டது. விமர்சகராக அவரது இடம் உருவாகவில்லை. ஆனால் இதழியலில் அவர் ஒரு சாதனையாளர் நாற்பதாண்டுக்கால இதழியல் வாழ்க்கை கே.சி.நாராயணனுக்கு உண்டு கௌமுதி பாலகிருஷ்ணனுக்கும், என்.வி.கிருஷ்ணவாரியருக்கும் எம்.டி.வாசுதேவன் நாயருக்கும் பின் மலையாள இலக்கியத்திற்கு அதிக பங்களிப்பாற்றிய இதழியலாளர் என்று கே.சி.நாராயணனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86268