Tag Archive: கேரளா

கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3

நாத்திக இயக்கங்களின் எல்லை என்ன? ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு உற்சாகம். ஒன்பது கீறல். பத்து கீறல். காசே கொடுக்கவேண்டாம் என்று நம்பூதிரி நினைத்தார். ஆனால் சட்டென்று தலையில் வலி. ‘ஏன செய்கிறாய்?’ என்றார். ‘எல்லா கீறல்களையும் சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்’ என்றார் நாவிதர். 1988ல் எம் கோவிந்தனை நான் இரண்டாம்முறையாக சந்தித்தபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8655

மலையாளியும் தமிழ்நாடும் :கடிதம்

   அன்புள்ள ஜெ, இந்தக் கடிதத்தை தனிப்பட்டமுறையில் எழுதுகிறேன். இங்கே நான் பணியாற்றும் இடத்தில் உள்ள நண்பர்களை புண்படுத்த விரும்பவில்லை என்பதனால் என் பெயரை பிரசுரிக்கவேண்டியதில்லை. நான் நன்றாகவே தமிழில் எழுதுவேன். ஆனால் அலுவலகத்தில் தமிழில் எழுத முடியாது. தமிழ் மென்பொருட்களில் எனக்குப் பழக்கமும் இல்லை. ஆகவே ஆங்கிலத்திலே எழுதுகிறேன். உங்கள் இணையதளத்தில் மலையாளிகளை நாய்கள் [பட்டிகள்] என்று சொல்லி ஒரு கடிதம் வந்திருந்தது. நீங்களும் அதை பிரசுரித்திருந்தீர்கள். ஒருநாள் தாண்டியும் அது எடிட் செய்யப்படவில்லை. அதனால் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6629

படைப்புகள்,கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ..,                                                                               நலம் அறிய விருப்பம் சார் .. தங்களின் “பனி மனிதன் ” நூலை இன்று வாசித்து முடித்தேன் ஒரே வீச்சாக  யாராக இருந்தாலும் அப்படிதான்  வாசிக்க முடியும் போல  அவ்வளவு ஒரு  சுவாரசியமான நடை .எளிய கற்பனைகளின் மூலம் நிகழ்வுகளை கோர்த்து கோர்த்து அவ்வளவு கனிவான கதை ஓட்டம். கதையின் கரு இதுதான்  ஒரு மூணு பேரு அந்த பனிமனிதன  அப்படி ஒரு மனிதன் இருப்பதை நம்ப முடியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6617

சக்கரியா மீது தாக்குதல்

மலையாள எழுத்தாளர் சக்கரியா கேரள நவீன இலக்கியவாதிகளில் மிக முக்கியமானவர். அங்கதமும் ஆழ்ந்த விவேகமும் கவித்துவத்துடன் வெளிப்படும் அவரது கதைகள் எண்பதுகளில் கேரள இலக்கியத்தில் திருப்புமுனையாக அமைந்தவை. சென்ற பத்துப்பதினைந்து  வருடங்களாக சக்கரியாவின் படைப்பூக்கம் வற்றிவிட்டது.ஆனால் நாடறிந்த கலாச்சாரவாதியாக அவர் இன்று கேரள சமூகத்தின் பண்பாட்டு விமரிசனங்களில் பலவற்றை உருவாக்குபவராக இருக்கிறார்   சக்கரியா வடகேரளத்தில் உள்ள பய்யன்னூர் நகரில் காந்தி பார்க்கில் ஜனவரி 9 ஆம் தேதி மதுநாயர் என்ற எழுத்தாளர் எழுதிய ‘காபோயுடே நாட்டிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6255

கேரள வன்முறைஅரசியல்

வடகேரள அரசியல் வன்முறை பற்றி நாகார்ஜுனன் எழுதிய ஒரு குறிப்பைக் கண்டேன். பெரு பற்றியும் சிலி பற்றியும் ‘ஆதாரபூர்வமான’ கட்டுரைகள் எழுதப்படும் தமிழில் அண்டை மாநிலம் பற்றி ஒரு நல்ல கட்டுரையைப் பார்க்க முடிவதில்லை. நான் பல காலமாக கேரள அரசியல் பற்றிய தமிழகக் கட்டுரைகளை கவனித்து ‘என்ன இது!’ என வியந்ததுண்டு முக்கியமான காரணம் அரசியல் சார்புதான். நேற்று நாகர்கோயிலில் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் நடத்திய பேரணி என்னைக் கடந்துசென்றது, உருளைகிழங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/314