Tag Archive: கேரளம்

கேரளக் குடிநிறுத்தம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கட்டுரைகளிலும், தனிப்பட்ட முறையில் நாம் பேசும்போதும் கேரளாவில் மிக மிக அதிகமாகிவிட்ட குடிப்பழக்கம் பற்றியும், அதனால் குடும்பங்கள், குழந்தைகள் நாசமாவது பற்றியும் நீங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். இப்போது படிப்படியாக அங்கே மதுவிலக்கு வரப் போகிறது என்கிற செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? இது ஆத்மார்த்தமான, ஆக்கபூர்வமான நல்ல.முயற்சிதானா? அல்லது இது ஒரு மாதிரி அரசியல் ஸ்டண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அன்புடன், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அன்புள்ள ராம் தமிழகத்திலும் சரி, பொதுவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60704

விலக்கப்பட்டவர்கள்

கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் ‘அம்சம் அதிகாரி’  வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய வருவாய் வட்டம் போல. அது அப்பகுதிக்கான நீதிபதி வேலையும்கூட. அவர் திருமணம்செய்துகொண்டது இரிஞ்ஞாலக்குடா வட்டபறம்பில் மீனாட்சி அம்மாவை. 1903ல் திரிச்சூர் அருகே உள்ள குந்நங்குளம் என்ற ஊரில் இருந்த ஒரு நம்பூதிரி மனையில் வாழ்ந்த விதவையான ஒரு நம்பூதிரிப்பெண் கருவுற்றாள். அக்காலத்தில் நம்பூதிரிப்பெண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/972

தீயாட்டு

அன்புள்ள ஜெ, இப்படி ஒரு கலைவடிவம் இருப்பதைக் கேட்டதே இல்லை.. களம், பாட்டு, கூத்து மூன்றும் கலந்த செவ்வியல் கலை என்று அந்த ஆசான் கூறுகிறார். முறைப்படுத்தி, பொதுவான கலைவடிவமாக்குவது சிறந்த, பாராட்டுக்குரிய பணி. உண்மையிலேயே பன்னிரண்டாயிரம் தேங்காய்களை உடைப்பார்களா என்ன? ஆச்சரியமாக இருக்கிறது. அன்புடன், ஜடாயு கேரளத்தின் நிகழ்த்து கலைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். செவ்வியல்கலை, சடங்குக் கலை. சடங்குக்கலையை அங்கே அனுஷ்டான கலை என்கிறார்கள். அங்குள்ள எல்லாக் கலைகளுமே ஏதோ ஒருவகையில் சடங்குக்கலைகளே. பழங்குடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25526

குடி,சினிமா,கேரளம்

இன்று இலக்கிய வாசிப்பு, மாற்று அரசியல் அனைத்திலுமே மாபெரும் பின்னடைவை உருவாக்கியிருப்பது குடியே. காரணம் சாயங்காலங்களே கிடையாது

Permanent link to this article: https://www.jeyamohan.in/7014

கடற்கேரளம் – 4

இந்தக்கேரள பயணத்தில் நான் கண்ட முக்கியமான விஷயமே பல இடங்களில் ஒரு காலடி கூட படாத கடலைப்பார்க்க முடிந்தது என்பதே. அது ஒரு அற்புதமான அனுபவம்தான்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6623

கடற்கேரளம் – 3

கேரளத்துவிடுதிகளைப்பற்றி எழுதப்போனால் அது இன்னொரு கொடுமை. பொதுவாகவே அங்கே விடுதிவாடகை அதிகம். சாலக்குடியிலேயே வாடகை சென்னையைவிட அதிகம். ஆனால் சேவை என்பதற்கும் கேரள விடுதிகளுக்கும் சம்பந்தமில்லை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6618

கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்

அன்புள்ள ஜெ, நலம்தானா? என் பி எச் டி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இது சமீபத்தில் என் நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் மீது உங்கள் எதிர்வினையைக் கோருகிறேன். கிறிஸ்டோபர் ஆன்டனி எனது நண்பன் ஒருவனுக்கு லண்டனில் ஒரு பல்கலையில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. சென்ற வாரம் யுகே விசா நேர்முகத்தேர்வு முடிந்து சென்ற திங்கட்கிழமை லண்டன் செல்ல முடிவானது. திருவந்தபுரம் ஏர்போர்ட் எங்களூருக்குப் பக்கமானதால் (சுமார் 40 கிலோமீட்டர்), நாங்கள் வெளிநாடு செல்லும்போது திருவனந்தபுரம் வழியாகச்செல்வது வழக்கம். என் நண்பனும் விதிவிலக்கல்ல. திருவனதபுரத்திலிருந்து லண்டன் செல்ல ஓமன் எயர்வேஸ்-ல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6610

கடற்கேரளம் – 2

நெய்யாற்றின்கரை தாண்டி வரும்போது சாலையோரமாக வரிசையாக நின்றிருந்த லாரிகளை பார்த்தேன். அசிங்கமான வண்ணங்களில் செய்யபப்ட்ட மாபெரும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள் நின்றிருந்த லாரிகள். துர்க்கை, சிவன்,பிள்ளையார் பொம்மைகள் மதியவெயிலில் கண்கள் மீது ஆசியன்பெயிண்ட் டப்பாக்களை திறந்து ஊற்றியது மாதிரி நின்றிருந்தன. முந்தையநாள் அவற்றை தெருவிலே பார்த்தேன். லாரிகள் வரிசையாக தேசியநெடுஞ்சாலையை மறித்து நிற்க நாகர்கோயில்வரை நீண்ட பேருந்துகள்  அலறி அலறி அணுவணுவாக நகர்ந்தன.                                                                  கொல்லம் கொடூரமான பொம்மைகள். சிவன் நீலநிறமாக சிவப்பு உதடுகளும் கரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6607

கடற்கேரளம் – 1

நாகர்கோயில் இருந்து மாலைதான் கிளம்ப முடிந்தது. நொச்சு வேலைகள். நாய்களுக்கு மாட்டிறைச்சி வாங்கச் செல்வது முதல் எழுதவிட்டுப்போன கட்டுரையை முடிப்பது வரை. திருவனந்தபுரம் பேருந்தில் ஏறப்போன நேரம் செருப்பு அறுந்துவிட்டது. ‘உறுப்பறுந்து போனாலே உளம்கலங்கார் செருப்பறுந்து போனாலோ சிந்திப்பார்?’ பக்கத்திலேயே சவளையன் என்ற செருப்புத்தொழிலாளி தைத்துக் கொடுத்தார். இருள்மாலை எட்டு மணிக்கு திருவனந்தபுரம் வந்தேன். அங்கே விடுதியில் தங்கினேன். அதிகாலையில் கிளம்பினோம். நேராக பூவாறு. அதுதான் கேரளத்தின் கடற்கரையின் தெற்கு மூலை என்றார்கள். அங்கே ஒரு சிறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6587