Tag Archive: கேசவமணி

அசோகமித்திரனின் ’இன்று’

ஜெ, அசோகமித்திரனின் “இன்று” படித்தேன். அசோகமித்திரனுக்கே உரிய மனிதர்கள், தீவிரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு இன்று கால் வலியை பற்றி பேசிக் கொண்டிருப்பவர், சுதந்திர போரட்ட வீரர்களின் ஒய்வில்லத்தை குடிக்கவும் பெண்களோடு இருக்கவும் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள், மூன்று குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட, வேலைக்கும் தினசரி சிக்கல்களுக்கும் நடுவே தடுமாறி குழந்தையின் ஒரு காலை இழக்கும் மனிதன், சாகும்பொழுதும் கொசுவத்தை இழுத்து முன்னால் விட்டு இறுக்கிக் கொள்ளும் பெண், அவள் கூட எல்லோரும் அவளை விபச்சாரி என்று அழைக்கும்படியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79648

விஷ்ணுபுரம் முன்னுரை பற்றி

விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரை பற்றி கேசவமணி எழுதிய குறிப்பு

Permanent link to this article: https://www.jeyamohan.in/79365

உப்புவேலி -கேசவமணி

அன்புள்ள ஜெயமோகன், உப்புவேலி குறித்த பாவண்ணன் கட்டுரை படித்தேன். கடந்த ஏப்ரலில் உப்புவேலி புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு தங்களின் பார்வைக்கு: http://kesavamanitp.blogspot.in/2015/04/blog-post_29.html அன்புடன், கேசவமணி.

Permanent link to this article: https://www.jeyamohan.in/76174

பிரயாகை- கேசவமணி

கேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/75429

வெண்முரசு விமர்சனங்கள்

வண்ணக்கடல் பற்றி கேசவமணி எழுதும் விமர்சனத்தொடர் . 1 தீராப்பகை 2 துரோணரின் அகப்போராட்டம் 3.மூன்று துருவங்கள் 4 மகாபாரத மனிதர்கள் வண்ணக்கடல் பற்றி தொடர்பகுதிகளாக கேசவமணி தன் விமர்சனக்கருத்துக்களைப் பதிவுசெய்கிறார் *** மழைப்பாடல் பற்றி கேசவமணி மழைப்பாடல் பற்றி நான்கு பதிவுகளாக கேசவமணி முன்னர் பதிவுசெய்த விமர்சனங்களின் தொகுப்பு முதற்கனல் பற்றி மரபின் மைந்தன் முத்தையா எழுதிய தொடர் விமர்சனம் மரபின் மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதிய விமர்சனத்தொடர் ********************************************************************* அனைத்து வெண்முரசு விவாதங்களும் மகாபாரத அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72693

மழை இசையும் மழை ஓவியமும்

மழைப்பாடல் பிதாமகர் பீஷ்மர் கூர்ஜரத்துக்குப் பயணம் செய்யும் காட்சியுடன்  தொடங்கி மனதில் அபாரமான கற்பனையை விரித்து நம்மை ஆகர்ஷித்து உள்ளே இழுத்துக்கொள்கிறது. வார்த்தைகளில் உருக்கொண்டு கண்முன் விரியும் கடலின் பிரம்மாண்டமும் பெய்யும் மழையும் மிகுந்த மன எழுச்சியைத்தர நாம் நாவலுக்குள் பிரவேசிக்கிறோம் மழைப்பாடலின் மழைபற்றிய ஒரு பார்வை. மழைப்பாடல் பற்றி கேசவமணி எழுதிய விமர்சனம் ‘மழை இசையும் மழை ஓவியமும்’ அவரது இணையதளத்தில் வெளிவரும் தொடரின் முதல் பகுதி வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும் மழையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63250

ஓலைச்சிலுவை -கேசவமணி

“அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த தெய்வங்க நினைச்சா அப்படி நடக்கட்டு” என்று சிறுவனின் அம்மா, இறந்துபோன தன் கணவனை விட்டுச் செல்லுவது நமக்கு நியாயமாகவே படுகிறது. ஓலைச்சிலுவை பற்றி கேசவமணி அறம் அனைத்துவிவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62991

தாயார் பாதம்- கேசவமணி

உரையாடல்கள் மூலமாகவே கதையை நகர்த்திச் சென்று, பாட்டியைப் பற்றி அதிகம் விவரிப்புகள் இல்லாமலும், அவரின் மனக் கஷ்டத்தை வெளிப்படையாகக் காட்டாமலும் அவரது வேதனையை, துயரத்தை நாம் முழுமையாக உணரும்படி செய்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு. http://kesavamanitp.blogspot.in/2014/09/blog-post_8.html#sthash.lCChjMN2.dpuf

Permanent link to this article: https://www.jeyamohan.in/61402

வணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும். கேசவமணி கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/60830

இரு வேறு ஆளுமைகள்

இது சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்ற இருவருக்கும் இடையேயான உறவும், மோதலும் பிரிவும் பற்றிய புத்தகமல்ல என்றும், எந்த இரு உறவுகளுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள்தாம் என்றும் உணரும்போது, மனதளவில் நம்மை நாம் உயர்த்திக்கொள்ள முடியும். மாறாக அவர்கள் இருவரையும் மட்டுமே வைத்துப் பார்க்கும்போது, ஒருவரை தேர்வதும் மற்றொருவரை நிராகரிப்பதும் இயல்பாக நடக்கக் கூடியதே. ஆனால், உண்மையில், ஒரு நல்ல வாசகன் என்பவன் இருவரையும் ஏற்றுக்கொண்டு, அவர்களிடமிருந்து கற்று, தன்னைத் தான் உணர்ந்தவனாக, மேல்நோக்கிப் பயணப்பட வேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60296

Older posts «