Tag Archive: கென் வில்பர்

சீனு- இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், எழுதுதல் என்பது தன் மனம் செல்லும் வழியே பிரிந்து போனபடி போய்க்கொண்டு இருக்காமல் அதே சமயம் மனதின் போக்குகளில் அது தன்னை தொட்டு கொண்டதை மிக எளிதாக சொன்னபடி போகிறது கடலூர் சீனுவின் கடிதம்….தான் கூட நடந்து வந்தவர் தன் வாக்கில் பேசியபடி போக நாம் நின்று விட்டால் கேட்காத வார்த்தைகளாய் சென்றது அவரின் கடிதம். இன்னும் கூட பேசியபடி போகும் போல அவர் மனது உங்களை தூக்கி கொண்டு … வாழ்வின் கடின …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61613

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல்

அன்புள்ள அர்விந்த் கென் வில்பர் பற்றிய உங்கள் புதுக்கட்டுரை சிறப்பாக உள்ளது- தெளிவாக.[பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் – பாகம் 1 ] இப்போதைய உங்கள் ஆர்வம் கென்வில்பரில் படிந்துள்ளமையால் அதை நீங்கள் கடந்து வரும்போது என்ன நிகழும் என இப்போது நான் பேச விரும்பவில்லை. ஆனால் தர்க்கம் மூலம் உள்ளுளுணர்வை அள்ள முயலும் நிலை மொழி மூலம் மௌனத்தை அள்ள முயல்வதுபோல. எனக்கு அப்படிப்பட்ட கொந்தளிப்பின் ஒரு காலகட்டம் இருந்தது. விஷ்ணுபுரத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/536

கவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ‘மொத்த மொழியியலாலும் ஒரு கவிதையை முழுக்க வாசித்துவிடமுடியாது’ உங்கள் வரி. முழுமையறிவும் கென் வில்பரும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப்புரியவில்லை. கவிதையை வாசிப்பதற்கு மொழியியல்போன்ற அறிவுத்துறைகள் உதவாது என்கிறீர்களா? truetechman அன்புள்ள நண்பருக்கு இரு நாட்டுப்புறக் கதைகள். இரண்டையும் ஏ.கே.ராமானுஜம் கவிதையாக எழுதியிருக்கிறார். முதல்கதை. மங்கோலியாவில் ஒரு மன்னன் இருந்தான். அவன் வேட்டைக்குப் போகும்போது ஒரு பறவையின் பாடலைக் கேட்டான். அந்த பாடல் அவனுக்கு வேண்டும்போலிருந்தது. அந்தப்பாடலுக்காக அந்தப் பறவை அவனுக்கு தேவையாயிற்று. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/535

கென் வில்பர்:இருகடிதங்கள்

திரு ஜெயமோகன் தங்களது சித்தர்கள் பற்றிய கட்டுரையும் [மந்திர மாம்பழம்] கென் வில்‌பர் பற்றிய கட்டுரையும் [முழுமையறிவும் கென் வில்பரும் ]சிந்திக்க உதவியாக இருந்தது தங்களுடன் பகிர்ந்து கொள்ள சில சிந்தநைகள் (தாங்கள் இந்த விஷயங்களை ஏற்கநவே அறிந்த்திருக்கலாம்) சித்தர்கள் பற்றி: ரூமி என்கிற ஸூஃபி கவிஞர் மொழிபெயர்ப்புகளை படித்திருக்கிறேன். மொழிசார்ந்த கட்டமைப்புகளை தாண்டி உணர்வு பூர்வமாக மனத்தை தொட வல்லவை இந்த கவிதைகள். இவையுடன் சித்தர் பாடல்களையும் சிந்தித்தது உண்டு. இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை கட்டுப்பாடுகளைத் தாண்டுவதே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/533

முழுமையறிவும் கென் வில்பரும்

பலவருடங்களுக்கு முன்னர்  சி.பி.ஸ்நோ எழுதிய கட்டுரை ஒன்றை நான் மொழியாக்கம் செய்தேன். அதில் அவர் அறிவியலையும், கலைகளையும் ஏதேனும் ஒருவகையில் இணைப்பதைப்பற்றிப் பேசியிருந்தார். அந்த எண்ணம் என் மனதை அப்போது வெகுவாக ஆட்கொண்டு பலகாலம் கூடவே வந்திருக்கிறது. அறிவியல் தர்க்கத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. கலைகள் கற்பனையை அடிப்படை அலகாகக் கொண்டவை. அவை உலகையும் வாழ்க்கையையும் தங்கள் நோக்கில் காண்கின்றன. அவ்விரு நோக்குகளும் தங்கள் அளவில் வளர்ந்து பல எல்லைகளைத் தொட்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டில் மானுட அறிவு  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/522