Tag Archive: கு. அழகிரிசாமி

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?




[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/79847

வசைபட வாழ்தல்




  வணக்கம் சார், தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது.உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன். நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமனன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/31835

உதயஷங்கர்




கோயில்பட்டியைச்சேர்ந்த புனைவிலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர் உதயஷங்கர். தேவதச்சனின் ‘சபை’யில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். பின்னர் திருவண்ணாமலையில் உதயஷங்கர் எட்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொறுப்பில் இருக்கிறார். அவரது பல கதைகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. அவரது இணையதளத்தில் கு.அழகிரிசாமியைப்பற்றிய இந்தப் பதிவு என்னைக் கவர்ந்தது. அழகிரிசாமி மீது கரிசல் எழுத்தாளர்களுக்கு இருக்கும் மயக்கத்தைப்பற்றிப்பேசும் பதிவில் அவர்களுக்கே உரிய மிகையுணர்ச்சியும் கலந்திருக்கிறது.




Permanent link to this article: https://www.jeyamohan.in/27838

வாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்




கிராமங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு குளத்துக்கரை மரம் நினைவுக்கு வரும். கிராம வாழ்க்கை எப்போதுமே நிஜமும் நிழலுமானது. வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க கூடவே வாழ்க்கையைப்பற்றிய கதைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் நிஜம் விரைவிலேயே மறைந்துபோகிறது. கதைகள் மட்டும் அழியாமல் எஞ்சுகின்றன. சொல்லப்போனால் கிராமம் என நாம் சொல்வது அந்த கிராமத்தின் நில அளவை விட, மக்கள் எண்ணிக்கையை விட பிரம்மாண்டமான கதைகளின் குவியலைத்தான். கிராமம் முடிவிலாது பொருட்களை அளிக்கும் மந்திரவாதியின் தொப்பி. கிராமியக்கதைத் தொகுதியின் சிறியபகுதியே …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/27828

ஊட்டி முகாம் 2012 – பகுதி 2




காலையமர்வில் ஜடாயுவின் கம்பராமாயண உரை. ஜடாயு கம்பராமாயணப்பாடல்களை மரபான முறையில் பாடிக்காட்டவும் செய்தார். கம்பராமாயணம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலியவற்றின் இயல்பான நீட்சியாக அமைந்திருப்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தார். ஜடாயு அதன்பின் கடலூர் சீனு அழகிரிசாமி பற்றி பேசினார். தான் நேரடியாக அறிந்த இரு வாழ்க்கையனுபவங்களைச் சொல்லி அழகிரிசாமியின் கதைகளுக்கு வந்த கடலூர்சீனு அழகிரிசாமியின் உலகம் பெரும்பாலும் குழந்தைகளினாலானது என்றார். அழகிரிசாமி நேரடியாக வாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவங்களை எந்தவகையான கொள்கைகளும் கோட்பாடுகளும் கலக்காமல் சொல்ல முயல்கிறார். …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/27608

மூன்றுகதைகள்




இந்த இணையதள விவாதங்களில் நான் அடிக்கடிச் சொல்லும் இரு கதைகள் அழியாச்சுடர்கள் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. கு.அழகிரிசாமியின் ’இருவர் கண்ட ஒரே கனவு’ எளிமையையே அழகாகக் கொண்ட கதை. உணர்ச்சிகரமான ஒரு தருணம் மட்டும்தான் அதில் உள்ளது. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என ஒருவர் யோசிக்கப்புகுந்தால் மானுடம் என்ற ஒற்றைப்பெருந்திரளை, கண்ணுக்குத்தெரியாத ஒரு ஆழ்நதியோட்டத்தை தொட்டுவிட முடியும். ’காந்தி’ அசோகமித்திரனின் வித்தியாசமான கதை. கதையே இல்லை. ஓர் உணர்வெழுச்சி, ஒரு வேகமான சுய உரையாடல் மட்டும்தான் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/12815

அழகிரிசாமியின் ராஜா




மெய்ஞானத்தையும் கனிந்த விவேகத்தையும் குழந்தைகளைக்கொண்டு சொல்லவைக்கும்போக்கு இந்திய இலக்கியத்தில் உண்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற எண்ணத்தின் விளைவு அது. குழந்தை மனிதர்களின் கசடுகள் தீண்டாமல் கடவுளின் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கை உலகமெங்கும் உள்ளது. தேவதைகளை குழந்தைகளாக உருவகித்தது மேலைமரபு. தெய்வங்களேகூட குழந்தை வடிவில் வழிபடப்பட்டன. குழந்தை ஏசு ஐரோப்பாவெங்கும் பிரபலம். குருவாயூர் கிருஷ்ணனும் உடுப்பி கிருஷ்ணனும் கைக்குழந்தைகள். முருகன் அழகிய சிறுவன். அழகிரிசாமியின் இந்தக்கதையில் அபாரமான ஒரு மெய்ஞானம் குழந்தைவாயில் இருந்து வருகிறது. ஆனால் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/9207