Tag Archive: குல தெய்வ வழிபாடு

மேல்நிலையாக்கம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ சார், வணக்கம். சிறுதெய்வம் என்று தாங்கள் “குலதெய்வத்தை” குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன். குலதெய்வ வழிபாடு – என்னை போன்றோருக்கு மனநிறைவை தருகிறது. குறிப்பாக, காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு முன் பொங்கல் வைப்பது…..இப்படி. குலதெய்வம், பலநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த குலம் சார்ந்த “தலைவன்/தலைவி” ஆக இருக்ககூடுமோ? என நான் எண்ணுவதுண்டு. முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு பின் கடவுள்(பெருந்தெய்வம்) வழிபாடு என்பதே சரியாக இருக்குமோ? கேரளாவில்/தென் தமிழகத்தில் எப்படி என்று தெரியவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8116