Tag Archive: குறுந்தொகை

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு நூல்  படிப்பது போன்ற சுக அனுபவத்தைத் தங்களது வலைத்தளம் வழங்கிவருகிறது. தங்களது குறுந்தொகை பற்றிய உரையைக் கேட்டேன். தமிழ், தமிழின் நிலங்கள், பூக்கள்,பாடுபொருள் மற்றும் ஒரு பாடலை எவ்வாறு புரிந்து கொள்வது என உங்கள் பேச்சு, என்னை கட்டிப் போட்டு விட்டது. பாடலின் உண்மைப் பொருளை உணராமல், செய்யுளை ஒரு சடங்கு போல நடத்திப்போகும் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் இந்தப் பேச்சைக் கேட்க வேண்டும். மலர்களைப் பார்க்காமலே பொருள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35590

மேலெழும் விசை

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் வருகைக்காக மிக ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். :) குறுந்தொகை குறித்து நீங்கள் ஆற்றிய உரையின் காணொளி ஒரு பெரிய திறப்பு எனக்கு. பழந்தமிழ்ப் பாடல்களின் வாசிப்பு குறித்து நீங்கள் எனக்குச் செய்யும் இரண்டாவது பேருதவி இது. சங்கச்சித்திரங்கள் தான் என்னை பழந்தமிழ் வாசிப்பிற்குள் இழுத்து வந்தது. (அதன் மூலமாக என் வாழ்க்கைத்துணையையும்).இந்த உரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. நன்றி. நானும் காயத்ரியும் “அணிலாடு முன்றில்” என்றொரு வலைப்பதிவை நடத்தி வருகிறோம். பழந்தமிழ்ப் பாடல்கள் குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26389

மலர்கள்

அன்புள்ள ஜெ , நீங்கள் குறுந்தொகை நிகழ்ச்சியில் “spiritual significance of flowers” பற்றிக் குறிப்பிட்டீர்கள். இந்த லிங்க், படிப்பதற்கு நன்றாக உள்ளது. நிறைய நாட்கள் ஆகும், முழுமையாகப் படிப்பதற்கு. http://www.blossomlikeaflower.com/ நன்றி. லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/24334

மலர்களின் கவிதைகள்

ஆசிரியருக்கு, தினம் தினம் பூக்களையும், அது பூக்கும் செடிகளையும் பார்த்தாலும் ஒவ்வொரு நாளும் புதிதாகவே தோற்றமளிக்கின்றன, ஒரு மலர் போலப் பிறிதொன்று இல்லை, ஏன் ஒரு கணத்தில் தோன்றுவது போல அடுத்த கணம் இல்லை. ஒரு போதும் ஒரு மலர் அதே வகையில் கூட இன்னொன்றை நினைவுபடுத்துவதில்லை. தினம் எழும் மறையும் சூரியனும், வானில் அது தீட்டும் வண்ணங்களும் அவ்வாறே. இவ்வளவு நாட்கள் நாம் தொடர்ந்து பேசியும், உங்கள் எழுத்துக்களைப் படித்தும் இன்றும் அன்று மலர்ந்த மலரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23749

சங்க இலக்கிய மலர்கள்

சங்க இலக்கியங்களை மலர்களைக்கொண்டு அறியவேண்டும் என எழுதியிருந்தீர்கள். சங்க இலக்கியக் கவிதைகளில் வரும் மலர்கள் , தாவரங்களின் புகைப்படங்களுடன் கவிதையின் அர்த்தங்களை விவரிக்கும் வலைப்பூ . http://karkanirka.org/2010/11/10/kurunthokai138/ பல குறுந்தொகைப் பாடல்களைக் கண்முன் நிறுத்தும் படங்கள் . நன்றி , அசோக் சாம்ராட்

Permanent link to this article: https://www.jeyamohan.in/23747

பூவிடைப்படுதல் 5

சங்கக்கவிதை மரபின் ஆரம்பத்திலேயே நம் கவிதை அகத்தையும் புறத்தையும் பிரித்துக்கொண்டது. சங்கப்பாடல்களின் தலைவாயிலான குறுந்தொகை ஓர் அகத்துறை இலக்கியம். இந்தப் பிரிவினையை நமக்கு நாம் நம் மரபைக் கற்க ஆரம்பித்தபோதே கற்றுத்தர ஆரம்பிப்பார்கள். ஆனால் பிரித்த கணத்தில் இருந்தே அகத்தையும் புறத்தையும் நம் கவிதை இணைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் பலசமயம் அறிவதில்லை. கூந்தலை இரு புரிகளாகப் பிரித்து அவற்றைப் பின்னிப்பின்னிச்செல்வது போலப் பிரபஞ்ச அறிதலை அகம் புறம் எனப் பிரித்தபின் அவ்விரண்டையும் பின்னிப் பின்னித் தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23610

குறுந்தொகை-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எப்படி நெல்லி தின்று தண்ணீர் அருந்திய ஆட்டிற்குக் கொம்பு முதல் குளம்பு வரை இனித்ததோ உங்கள் உரை கேட்டு என் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது. இலக்கியம் இவ்வளவு சுவையோ? காதலை விட சுவை அதிகமோ எனத் தோன்றுகிறது :-) அக உணர்வுகளை இயற்கை என்னும் பூதக் கண்ணாடி கொண்டு விளக்கினார்களோ, குறுந்தொகையை உங்கள் உரை அழகாக விளக்கியது. என்னுடைய பத்தாம் வகுப்பில் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் படித்த பசலை நோய், அதனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23639

பூவிடைப்படுதல் 4

கவிதைக்கு நம் ஐம்புலன்களில் எதனுடன் நெருக்கமான உறவு இருக்கிறது? பெரும்பாலானவர்கள் காதுடன் என்றே சொல்வார்கள். செவிநுகர்கனிகள் என்று கவிதையைச் சொல்லும் வழக்கமே நம்மிடமுண்டு. ஆனால் கவிதை எங்கும் கண்ணுடன் அதிக நெருக்கம் கொண்டது. பெரும்பாலான நல்ல கவிதைகளை நம்மால் பார்க்க முடியும். காட்சித்தன்மை என்பது கவிதையின் அழகியலில் மையமானது. ஏன்? காட்சியே முதன்மையானது. ஒரு குழந்தை அறியும் பிரபஞ்சம் காட்சிகளாலானது. வாயும் மூக்கும் அதன் வாழ்க்கைக்கு அவசியமானவை. ருசியாலும் மணத்தாலும்தான் குழந்தை அன்னையை அறிகிறது. அது நடைமுறைஞானம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23606

பூவிடைப்படுதல் 3

சங்க இலக்கியப் பரப்பில் செல்லும் ஒருவன் மொழியை இயற்கையின் நுண்வடிவமாக தரிசிக்கவேண்டும். இயற்கையின் இன்னொரு வடிவமே மானுட மனம் என்பது. மனம் இயற்கையை நடிக்கிறது. இயற்கை மனதை நடிக்கிறது. ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரு பெரும் ஆடிகள் அவை. மிக நுட்பமான இந்த விஷயம்தான் சங்கப்பாடல்களை மகத்தான கவிதைகளாக ஆக்குகிறது. என் மனம் என நான் நினைக்கிறேனே அது என்ன? எனக்குள் ஓடும் படிமங்களும் எண்ணங்களும் கலந்த பிரவாகம் அது. அந்தப் பிரவாகத்தின் அடியில் நான் எப்போதாவது உணரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23601

பூவிடைப்படுதல் 2

தமிழ்க் கவிமரபுக்கு மலர்களுடன் உள்ள உறவு பிரமிக்கச் செய்கிறது. ஐந்து திணைகளுக்கும் ஐந்து மலர்கள். பூத்துப்பூத்துச் சொரியும் முல்லை காதலுடன் காத்திருத்தலுக்கு. அதன் வாசனை கற்பனைகளைத் தூண்டுவது. நீர்த்துளி சொட்டும் நெய்தல் மலர் பிரிந்து இரங்கலுக்கு. வாசனை குறைந்த மலர், நறுமணத்தைத் தன் இதழ்களை விட்டு வெளியே விடாத மலர்! நீர்வெளியில் உதிர்ந்து பரவும் மருதமலர் ஊடலுக்கு. அதன் வாசனைக்கு விந்துவின் சாயலுண்டு. [முல்லை] [நெய்தல்/கருங்குவளை/நீல அல்லி] [மருதமலர்] [கள்ளிப்பாலை] [குறிஞ்சி] ஆனால் தன்னந்தனியாக நிற்கும் பாலையை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23595

Older posts «