Tag Archive: குறுநாவல்

ஈராறுகால்கொண்டெழும் புரவி- விமர்சனம்

ஈராறுகால் கொண்டெழும் புரவி – கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது ஈராறுகால்கொண்டெழும் புரவி

Permanent link to this article: https://www.jeyamohan.in/57434

கதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கருத்துக்களாக விளக்க முடிபவற்றைக் கட்டுரையாக எழுதிவிடலாம். ஆனால் அனுபவங்களை, வாழ்க்கையை அவ்வாறு எழுதிவிட முடியாது.அதற்குக் கலை மட்டுமே உதவும் என நினைக்கிறேன். ‘மடம்’ குறுநாவலைப் படித்த பிறகு இதுதான் தோன்றியது. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதவிதமான அனுபவங்கள் வருகின்றன. நாவல் முழுக்க இழையோடும் அங்கதம் ஒரு புதுவித சுவையைத் தருகிறது. கனபாடிகளின் கூர்ந்த அறிவு அவருக்கு ஞானத்தைத் தரவில்லை. மாறாக அவர் படித்தது எதையுமே படிக்காத சாமியும் பண்டாரமும் ஞானமடைந்தவர்கள். இம்மூவரைத் தவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26448

இரவு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…. வணக்கம்…நான் உங்கள் கதைகள் நாவல்கள் சிலவற்றைப் படித்துள்ளேன். ஆனால் “இரவு” படிக்கும்பொழுது என்னுடைய conscious  -இல்  ஏதோ ஒரு பக்கத்தை..,எப்படிச் சொல்வது என்று  தெரியவில்லை…ஏதோ முன் ஜென்மத்தில் இப்படித்தான் நான் வாழ்ந்திருபேனோ என்ற எண்ணம் கூட வந்தது…mysitc  என்று சொல்லலாமா?தெரியவில்லை…இந்தக் கதை படிக்கும்பொழுது ஏதோ எனக்காகவே என்னுடைய வாழ்க்கை பற்றி எழுதியதைப் போல உணர்ந்தேன்.அதனுடைய அழகியல் மட்டும் அல்ல சூழ்நிலையும் என்னைக் கட்டிப் போட்டது..ஆனால் கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும்,இது என்னுடைய தர்க்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16795

இரவு நாவல் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்கள் நலம் அறிய ஆவல் சார் தங்களின் இரவு நாவலை சமீபத்தில் வாசித்தேன். கதை முழுக்க ஒரு புதுமையான புனைவில் நிகழ்கிறது. முழுக்க இரவில் வாழும் மனிதர்கள், சரவணின் அதே ஆச்சர்யத்துடன் அந்த வாழ்க்கை அறிமுக மாகிறது .மிகுதியான படிமங்கள் இந்த இரவுக்கு. உள்ளே தீபத்தை வைத்து மூடப்பட்ட கருவறைக் கதவின் இடுக்கு போல ஆகியது வான்கோடு சூரியன் மறையும் அந்தி வானத்த இனி எப்பொழுது பார்த்தாலும் உருகி ஒளிரும் படிமமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12288

அனல்காற்று-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.நலமா? நீங்கள் பிஸியாக இருப்பீர்கள்.எனக்கு உங்களைத் தொந்தரவு செய்யும் எண்ணம் துளியும் இல்லை.ஆனால் நான் உங்களுடன் பேசியாகவேண்டும்.எனவே இந்த மின்னஞ்சல்.இது உங்களைத் தொந்தரவு செய்யாது.நல்லபிள்ளையாக அமைதியாக உங்கள் இன்பாக்ஸில் சுருண்டிருக்கும்.நீங்களாக விரும்பி எழுப்பினால் அன்றி அது அசையாது.கருவறைக் கதவைத் தட்டித்தான் கலாட்டா செய்யக்கூடாது,நடையில் காத்திருக்கலாம் அல்லவா?? அனல் காற்று படித்து முடித்து விட்டேன்.சற்றும் திமிரமுடியாதபடி என்னை அழுத்திவிட்டது.இரவு நாவலை போல் சாவதானமாக என்னால் உங்களுடன் எதிர்வாதம் செய்யமுடியாது.’வோடபோன்’ நாய்க்குட்டி போல்,அதி தீவிரத் தொண்டன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13599

உலோகம்: கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களைபற்றி கொஞ்சம் கேள்விப்பட்டு இணைய பக்கத்தை படிக்க முயன்று பின் விட்டுவிட்டேன். ஏனோ தெரியவில்லை. சமீபத்தில் நான் உடுமலைப்பேட்டையில் ஒரு பேக்கரியில் தேனீர் பருகிவிட்டு வரும்போது உங்கள் புதினம் “உலோகம்” பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சரி, இந்தமுறை முயன்று பார்ப்போமே என்று அதை வாங்கிவந்தேன். இரண்டு நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இன்றே உங்களுக்கு மடலும் எழுதுகிறேன். மிக அருமையான நடையில் எழுதி இருந்தீர்கள். இதில் எந்த அளவுக்கு கதை கலக்கப்பட்டது எந்த அளவுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12478

உலோகம்- பாதி விலையில்! – பத்ரி சேஷாத்ரி

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவல் அதிவேகமாக விற்பனை ஆகியது. மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை. இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி! ஏற்கெனவே தமிழகம் எங்கும் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12708

நான்காவது கொலை!!! – 14

எழுத்தாளர் சிரித்து , ‘அப்டியா சொல்றீங்க ? வாங்க ‘ என்றார். ‘நானே இப்ப ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன் .ஏற்கனவே கதை பதிமூணு வாரம் வந்தாச்சு , இன்னும் முதல் அத்தியாயமே முடியலை… ‘ பாண்ட் ஸ்தம்பித்து , ‘ பதிமூணு அத்தியாயம் வந்துவிட்டதாக சொன்னார்களே ? ‘ ‘அப்படியா ? அது மார்க்சியர்களும் பெரியாரியர்களும் என்னைப்பத்தி சொல்ற அவதூறுங்க. இப்பதான் முதல் அத்தியாயத்தோட பதிமூணு பகுதிகள் எழுதியிருக்கேன். … ‘ ‘நாலாவது கொலையோடு கதை முடிந்துவிடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11599

நான்காவது கொலை !!! 13

ஓட்டல் முகப்பு அல்லோல கல்லோலப்பட்டது . டிவிமுன்னால் ஒரே கூட்டம். ‘பாஸ் , ரொம்ப நாளா சந்தேகம். இந்த அல்லோலகல்லோலம்னா என்ன ? தெரியாம திக்குமுக்காடறேன் ‘ ‘ ‘இதெல்லாம் தொடர்கதை வார்த்தைகள்டா. பேசாம படிச்சுட்டே போகவேண்டியதுதான் ,ஏன் இப்ப நாப்பது வருஷமா ஜனங்க படிக்கலியா ? உனக்கு மட்டும் என்ன ? ‘ ‘ ‘ D.A. சீதே , அதிலே சன் டிவி போடறானா பாக்கச் சொல்லுடா ‘ சி என் என் மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11597

நான்காவது கொலை!!! – 12

ஜேம்ஸ்பாண்ட் 007 ஆம்லெட் போட முட்டையை உடைத்துக் கொண்டிருந்த போது அவரது ரகசிய ஃபோன் அடித்தது. அவர் அதை எடுத்து ‘ ‘ மை நேம் இஸ் பாண்ட் , ஜேம்ஸ் பாண்ட் ‘ என்ற அதிரகசியக் குழூஉகுறியைச் சொன்னதும் எதிர்முனையில் அவரது பாஸ் வந்தார். [யதார்த்தத்தை நம்புகிறவர்களுக்காக இங்கே காமிராக்கோணம் விரிக்கப்படுகிறது. அவர் ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தது ஆல்ப்ஸ் பனிமலையின் உச்சியில் இரு சிகரங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கயிறின்மீது தொங்கிக் கொண்டிருந்த தொட்டில்க்கூடாரத்துக்குள்தான் ] ரகசிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11595

Older posts «