Tag Archive: குறள்

கீதை ஒரு வினா

ஜெ, கீதை பற்றிய பல விவாதங்களையும் நூல்களையும் வாசித்திருக்கிறேன்.நீங்கள் எழுதியவை உட்பட.தத்துவ நோக்கில் கீதையின் சாரம்சங்கள் சிறந்தவை எனினும் கீதையின் முழு நோக்கங்களையும் ஏற்பது என்னளவில் இயலவில்லை.கீதை பற்றிய திராவிட பெரியாரிய எதிர்மறை எழுத்துகளாலேயே அதனை நான் ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன்.தத்துவ நோக்கம் ஆழமான கருத்துகள் இவற்றை மீறி பிறப்பின் ஏற்றத்தாழ்வுகளை வருணாசிரம முறையில் கீதை இன்னும் வலுப்படுத்துகிறதல்லவா.பெண்களையும் இரண்டாம் நிலையிலேயே வைக்கிறது.அது எழுதப்பட்ட காலத்தில் அவையெல்லாம் சாதாரண நிலைப்பாடாக இருந்திருக்கலாம் என்பதும் சரியே. என்னுடைய வினா இதுதான்.உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81543/

குறள் – கவிதையும், நீதியும்.

குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள், குறள் குறித்த பாமாலைகள் என இதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. ஆயினும் அந்த இடம் அறிஞர் மத்தியில் தான் இருந்தது. கல்வி எல்லைக்குட்பட்டு வழங்கப் பட்ட சென்ற காலங்களில் அது இயல்பும் கூட. பிற்பாடு மக்களாட்சியின் சாத்தியங்களுக்கு உட்பட்டு கல்வி பரவலாக்கப் பட்ட போது தமிழில் மிக அதிகமாக வெகு ஜன மயமாக்கப் பட்ட பேரிலக்கியம் குறளேயாகும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105/

நாள் என

அன்புள்ள ஜெ, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்றிரவு ஒரு கனவு ஜெ. உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் சொல்கிறேன் என்னுடைய நாட்குறிப்பு அன்றன்று எழுதப்படாமல் பின்தங்கியிருக்கிறது என்று. நீங்கள் அதற்குப் பதிலாக ஒரு திருக்குறளைச் சொல்கிறீர்கள். திருக்குறளை வார்த்தை சுத்தமாகக் கேட்ட நினைவு இருக்கிறது. ஆனால் என்ன குறள் என்பது எட்டாத் தொலைவில் இருக்கிறது. அந்தக் குறளுக்குப் பிறகு இருவரும் சிரிக்கிறோம். சுற்றிலும் மனிதர்கள் இருந்ததாகத் தோன்றுகிறது…அவர்கள் சிரித்ததாகவும் தோன்றுகிறது. உறுதியாகக் கூற முடியவில்லை. அதன் பிறகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32982/

எங்கும் குறள்

நகைச்சுவை சுக்கில்லாத கஷாயம் இல்லை என்பது சித்த மரபு. குறளில்லாமல் பேச்சும் எழுத்தும் இல்லை என்பது தமிழ் மரபு. செந்நாப்போதார் சுவடியில் உள்ள அணுவை எழுத்தாணியால் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்து அடுக்கி வைத்த குறளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அதைப்பற்றி என்ன சொன்னாலும் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதே. மேலும் பேருந்தில் பல்வேறு மனநிலைகளில் நாம் குறளைப் படிக்க நேர்வதனால் குறள் நம்பமுடியாத மனநிலைகளுக்கெல்லாம் ஆதாரமாக நிற்கிறது. குறள் மீதான வாசிப்பை இருவகைகளில் முக்கியமாகப் பகுக்கலாம். சொற்பொருள் தெரிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/723/

வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

சௌம்யநாராயணன் [பிரவாஹன்]  திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின்  ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20607/

குறளறம்

அன்புள்ள ஜெ,   நலமா?   தங்களிடம் நெடுநாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்வி ஒன்று.   பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு முன் ”அறத்தாறு இதுவென வேண்டா” என்ற குறளை குறிப்பிட்டிருப்பீர்கள். அந்த குறள் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் குறிப்பிடும் வழமையான அர்த்தத்தில் பொருள் தராமல் வேறொரு பொருளில் இந்த நாவலில் இயங்குவதாக நினைக்கிறேன். உண்மையில் பரிமேலழகர் அந்தக் குறளை சிவிகை பொறுப்பவனுக்கு சாதகமாக பொருள் கூறுவதாகவும்; தாங்கள் அதன் வேறொரு பக்கமான ஊர்பவனுக்கும் சாதகமாக இருக்க சாத்தியமான மற்றும் யார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2932/

இந்திய சிந்தனை மரபில் குறள் 5

உ. குறள் மறுப்பும் மீட்பும் . சமூகங்கள் கட்டமைக்கப்படும் காலகட்டங்களிலும் மாற்றம் கொள்ளும் காலங்களிலும் நீதிநூல்கள் உருவாகின்றன. நீதிநூல்கள் சமூகக்கட்டமைப்பின் வரைபடங்கள். சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கனவுகளும்கூட. குறள் தமிழ்ச்சமூகம் உதிரி இனக்குழுக்கள் ஒன்றாகத்திரண்ட ஒரு காலகட்டத்தின் ஆக்கம். அப்படி அவற்றை திரட்டிய கருத்தியல் விவாதத்தின் திரள்மையம். தமிழ்நிலத்தில் சமணமும் பௌத்தமும் மெல்லமெல்ல கைவிடப்பட்டு மறைந்தன. இந்திய அளவிலும் அவை மெல்ல மறைந்து பெயரளவுக்கே எஞ்சுகின்றன. அவற்றின் அழிவுக்கான காரணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் ஆர்.எஸ்.சர்மா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1434/

இந்திய சிந்தனை மரபில் குறள் 4

ஈ. குறள்நீதி என்னும் அழியாத கவிதை குறள் ஒரு ஸ்மிருதியா இல்லை சுருதியா? இந்திய ஞானமரபின் விவாதங்களில் இந்த வினா முக்கியமானது. இந்திய மெய்யியல் நூல்களை ஆராயும்போது நடராஜகுரு இந்தவினாவை எப்போதும் எழுப்பிக்கொள்கிறார். நெறிகளை அறிவுறுத்தும் நூல் ஸ்மிருதி. அடிப்படையான தரிசனங்களை முன்வைக்கும் நூல் சுருதி. பகவத்கீதையைப்பற்றி பேசும்போது அது ஒரு ஸ்மிருதி அல்ல சுருதிதான் என்று நடராஜகுரு தன் பகவத்கீதை உரையில் விவரிக்கிறார். ஏனென்றால் கீதை நெறிகளை அறிவுறுத்தவில்லை, நெறிகளுக்கு ஆதாரமாக உள்ள தத்துவப்பிரச்சினைகளை ஆராய்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1429/

இந்திய சிந்தனை மரபில் குறள் 3

இ. திருக்குறளின் விவாதக்களம் இந்தியச்சூழலில் தர்மசாஸ்திரங்களின் இடத்தையும் பங்களிப்பையும் விரிவாக ஆராய்ச்சி செய்தவர் பி.வி.காணே. தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அவரது மகத்தான கலைக்களஞ்சியம் இந்திய வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவதற்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்று. இந்தக்கலைக்களஞ்சியம் அளிக்கும் மனச்சித்திரம் ஒன்றுண்டு. ஒரே வயலில் பயிர்கள் வளர்ந்து நிற்பது போல இந்த எல்லா தர்ம சாஸ்திரங்களும் ஒரே பண்பாட்டுக்களத்தில், ஒரே விவாதச்சூழலில் முளைத்தெழுந்து நிற்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள மறுக்கமுடியாத ஒற்றுமைகளே நம் கண்ணில் முதன்மையாகப் படுகின்றன. பேதங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1425/

இந்திய சிந்தனை மரபில் குறள் 2

ஆ. குறள் என்னும் நீதிநூல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் நடுவே , தமிழகத்தை சமணர்களான களப்பிரர்கள் ஆண்ட காலகட்டத்தில், திருவள்ளுவர் என்று சிறப்புப்பெயரால் குறிப்பிடப்படும் நூலாசிரியரால் இயற்றப்பட்ட திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் நீதிநூல்வரிசையில் முதன்மையானதாக நெடுங்காலமாகவே போற்றப்பட்டு வருகிறது.  தமிழர்களின் முதல்நூலாகவும் தமிழ்ப்பண்பாட்டின் கொடியடையாளமாகவும் குறள் முன்னிறுத்தப்படுகிறது. திருக்குறளைப்போன்ற ஒரு நூலை அவ்வாறு முன்னிறுத்துவது எந்த ஒரு சமூகத்துக்கும் பெருமையளிக்கக்கூடிய ஒன்றே. மேலே குறிப்பிட்ட விவாதத்தில் குறள் என்ன சொல்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1422/

Older posts «