பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும் சாக்கடைத் திறப்புகள். சரிந்த பாசிபற்றிய படிக்கட்டின் வழியாக நடந்தேன். மூதாதையருக்காக நீர்க்கடன்செய்யும் திரள். மரண மந்திரங்கள். துயரம் கப்பிய முகங்கள். இறந்துபோன ஏதோ காலத்தின் இன்றைய தோற்றங்களாக துறவிகள். மணிகர்ணிகா கட்டத்தின் ஆரவாரத்தை தாண்டி நடந்தேன். பிறகு தாங்க முடியாத அமைதி …
Tag Archive: குர்அதுல் ஜன் ஹைதர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/197
பெண்களின் எழுத்து…
அன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/56437