Tag Archive: குரு நித்யா ஆய்வரங்கு

விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013

ஒவ்வொரு வருடமும் ஊட்டி குருகுலத்தில் நடைபெற்று வந்த விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் இந்த முறை ஏற்காட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 28,29 & 30 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கம் போல் கம்ப ராமாயண அமர்வுகள் திரு.நாஞ்சில் நாடன் அவர்களால் நடத்தப்படும். மற்ற அமர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும். இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்த பழங்கால மாளிகை ஒன்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாசகிகள் தங்குவதற்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36442

ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்

உதகை நித்யா ஆய்வரங்கத்தில் பங்கேற்றது குறித்த பதிவு – ஒத்திசைவு ராமசாமி     ’’ஹ்ம்ம்… இருபதாண்டுகளுக்குப் பின் நான் செல்லவிருந்த ஒரு ‘இலக்கியக்’ கூட்டமிது. இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘அந்தக்கால இலக்கியக்கூட்ட நினைவுகளினால்’ ஒரு அடிவயிற்றில் கலவரநிலையுடன் தான் அங்குபோனேன். அங்கு எனக்கு இரண்டு முக்கியமான ஆச்சரியங்கள்: ஒன்று, கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக இருந்தது; இரண்டு, சில பெண்களும் வந்திருந்தது. … எப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் (அதுவும் நமது பெரும்பாலும் குமட்டுதலுக்குரிய ’கூட்டக்கலாச்சாரப்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27982

ஊட்டி முகாம்-எம்.ஏ.சுசீலா

தற்போது தில்லியில் இருப்பதால் விஷ்ணுபுர வட்டம் நடத்தும் காவிய முகாம்களிலும்,இலக்கிய அமர்வுகளிலும் அதன் சார்பில் நடத்தப்படும் விருது விழாக்களிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்வது எனக்குச் சாத்தியமாவதில்லை. இவ்வாண்டில் ஏதோ ஒரு சூழல் எனக்குச் சாதகமாக அமைய,25,26,27 ஆகிய மூன்று நாட்களும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் நிகழ்ந்த இலக்கிய முகாமில் பங்கேற்க முடிந்தது பெரும் மன நிறைவை அளித்திருக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/27732

ஊட்டி முகாம் 2012 – பகுதி 3

மாலையில் ஜடாயு லா.ச.ராமாமிருதம் பற்றிப் பேசினார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பு என்பது அவர் உருவாக்கும் அகவயமான நடை. அது பலகாலமாக தமிழ்வாசகர்களை போதையாக கட்டிப்போட்டிருக்கிறது. அந்த நடை நனவோடைமுறை என்று திறனாய்வாளர்கள் சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை லா.ச.ரா.வுக்கே உரிய அந்தரங்கமான ஒரு மொழி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றார் ஜடாயு. அவரது மந்திர உச்சாடனம் போன்றது என்றார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பாக ஜடாயு சுட்டிக்காட்டியது அவரது எழுத்துக்களில் உள்ள தீவிரமான ஆன்மீகத்தேடலை. பெண்ணை அழகாகவும் அழகை அம்பாளாகவும் உருவகித்துக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27678

லா.ச.ரா: ஜடாயு கட்டுரை

அன்புள்ள ஜெ, நான் ஊட்டி முகாமில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்: அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1 அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2 அன்புடன், ஜடாயு

Permanent link to this article: https://www.jeyamohan.in/27694

ஊட்டி முகாம் 2012 – பகுதி 2

காலையமர்வில் ஜடாயுவின் கம்பராமாயண உரை. ஜடாயு கம்பராமாயணப்பாடல்களை மரபான முறையில் பாடிக்காட்டவும் செய்தார். கம்பராமாயணம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலியவற்றின் இயல்பான நீட்சியாக அமைந்திருப்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தார். ஜடாயு அதன்பின் கடலூர் சீனு அழகிரிசாமி பற்றி பேசினார். தான் நேரடியாக அறிந்த இரு வாழ்க்கையனுபவங்களைச் சொல்லி அழகிரிசாமியின் கதைகளுக்கு வந்த கடலூர்சீனு அழகிரிசாமியின் உலகம் பெரும்பாலும் குழந்தைகளினாலானது என்றார். அழகிரிசாமி நேரடியாக வாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவங்களை எந்தவகையான கொள்கைகளும் கோட்பாடுகளும் கலக்காமல் சொல்ல முயல்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27608

ஊட்டி 2012 – புகைப்படத் தொகுப்பு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – குரு நித்யா ஆய்வரங்கம் ஊட்டி 2012 நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு     ஊட்டி 2012 படங்கள் ஜடாயு

Permanent link to this article: https://www.jeyamohan.in/27587

ஊட்டி முகாம் 2012 – பகுதி 1

ஊட்டியில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நடந்த குருநித்யா ஆய்வரங்கத்துக்கு நான் சென்றுசேரும்போது அது ஏற்கனவே கால்வாசி முடிந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சி 25 ஆம் தேதி காலையில்தான். ஆனால் தேவதேவன் உள்ளிட்ட பல நண்பர்கள் 24 ஆம் தேதியே வந்துவிட்டார்கள். நான் ஊரிலிருந்து கிளம்பும்போது கிருஷ்ணனை அழைத்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘தேவதேவன்கிட்ட சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு வாக்கிங் போறோம்…டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என்று சொல்லிவிட்டார். நான் உண்மையில் பலவேலைகளில் சிக்கி முன்பதிவு செய்ய மறந்துவிட்டேன். அவசரமாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27579

ஊட்டியிலே

இன்று காலை ஊட்டி நாராயண குருகுலத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் குருநித்யா ஆய்வரங்கு ஆரம்பிக்கிறது. திடீரென்று யோசிக்கையில் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பித்துப் பதினேழுவருடங்களாகின்றன! தமிழில் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் இலக்கியச் சந்திப்புகள் மிகமிகக் குறைவே. வேடந்தாங்கலில் இலக்கியவீதி என்ற சந்திப்பு பலகாலம் நிகழ்ந்தது. அதை நிகழ்த்திய இனியவன் பலராலும் நினைவுகூரப்படுகிறார். காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணனால் நடத்தப்பட்டது. சற்றே பெரிய இலக்கிய அமைப்புகளால் நடத்தப்பட்டவை என்றால் இலக்கியசிந்தனை அமைப்பின் சந்திப்பு நிகழ்ச்சியையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27537